ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Thursday, June 4, 2020

#19 - பஞ்சதன்மாத்ர சந்தி

நூருவருஷக்கெ தி3வஸ மூவ

த்தாரு ஸாவிரவஹவு நாடி ஷ

ரீரதொளகி3னிதிஹவு ஸ்த்ரீ பு1ம் பே433லி ஹரிய

ஈரதி4க வெப்பத்துசாவிர

மூருதிக3ளனு நெனெது3 ர்வா

தா4ரகன ர்வத்ர பூ1ஜிஸு பூர்ணனெந்த3ரிது ||19

 

நூரு வருஷக்கெ = 100 ஆண்டுகளுக்கு

திவஸ = இரவு + பகலுடன் கூடிய ஒரு நாள்

மூவத்தாரு ஸாவிரவு = 36,000

அஹவு = ஆகிறது [இதில் பகல் 36,000 + இரவு 36,000 என 72,000 ஆகிறது]

இனிது = இந்த விதமாக

ஷரீரதொளகெ = நம் தேகத்தில்

ஸ்த்ரி பும் பேததலி = 36,000 பகல் நாடிகள் புருஷ நாடிகள் என்றும், 36,000 நாடிகள் ஸ்த்ரி நாடிகள் என்றும், வல இட பாகங்களில் இருக்கின்றன. இந்த நாடிகளில்

ஹரிய = ஸ்ரீபரமாத்மனின்

ஈரதிக வெப்பத்து சாவிர மூர்த்திகளனு = 72,000 மூர்த்திகளை

நெனெது = சிந்தித்து

பூர்ணனெந்தரிது = ஆனந்தாதி குணங்களால் பூர்ணன் என்று அறிந்து

சர்வாதாரகன = அனைத்து பிராணிகளுக்கும் ஆதாரமான ஸ்ரீபரமாத்மனை

சர்வத்ர = அனைத்து இடங்களிலும்

பூஜிஸு = பூஜையை செய்.

 

மனிதனின் ஆயுட்காலமான 100 ஆண்டுகளில், 1 ஆண்டுக்கு, 360 நாட்கள் என்றால், 100 ஆண்டுகளுக்கு 36,000 நாட்கள் ஆகின்றன. அதில் 36,000 பகல்கள், 36,000 இரவுகள். இவற்றைக் குறிக்கும் நாடிகள், புருஷ நாடிகள் என்றும், ஸ்த்ரி நாடிகள் என்றும் இந்த சரீரத்தின் வல இடது பாகங்களில் பகல் இரவைக் குறிக்கும் நாடிகள் என மொத்தம் 72,000 நாடிகள் இருக்கின்றன. இந்த நாடிகளில் ஸ்ரீபரமாத்மன் 72,000 ரூபங்களில் இருந்து, நம்மைக் காக்கிறான். அவன், பூர்ணானந்த ஸ்வருபனாகவே இருக்கிறான். அதாவது, சரீர சம்பந்தத்தினால் நாடிகளுக்கு என்ன பிரச்னை வந்தாலும், பரமாத்மன், அதற்கு சம்பந்தப்படாமல் (நிர்லிப்தனாகவே) இருக்கிறான் என்று பொருள். இப்படியாக, ஸ்ரீபரமாத்மன், சர்வாதாரகன், பூர்ணன் ஆகிறான் என்று அறிந்து, அவனை அனைத்து இடங்களிலும் இருப்பவன் என்று நினைத்து பூஜிக்க வேண்டும் என்கிறார்.

***
 

No comments:

Post a Comment