ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Friday, June 5, 2020

#22 - பஞ்சதன்மாத்ர சந்தி

ஆவ தே3ஹவ கொடலி ஹரி ம

த்தாவ லோகதொ3ளிடலி தா ம

த்தாவ தே3ஷதொளிடலி ஆவாவஸ்தெ23ளு ப3ரலி |

ஈ வித3தி3 ஜட சேதனதொ3ளு ப

ராவரேஷன ரூப கு3ணக3

பா4விசுவ ஸுக்ஞான ப4கு3தி1ய பே3டு3 கொண்டா3டு3 ||22

 

ஹரி = ஸ்ரீபரமாத்மன்

ஆவதேஹவகொடலி = எந்த பிறவியை நமக்குக் கொடுத்தாலும்

மத்தாவ லோகதொளிடலி = நரக, ஸ்வர்க்க, பாதாளாதி எந்த உலகத்தில் வைத்தாலும்

தா = தான்

மத்தாவ தேஷதொளிடலி = எந்த தேசத்தில் இருந்தாலும்

ஆவாவஸ்தெகளு பரலி = பால்ய, யௌவனாதி நிலைகள் அல்லது துக்க சுகாதி நிலைகள் அல்லது ஜாக்ருத, ஸ்வப்ன, சுஷும்ன என எந்தவொரு நிலைகளிலும்

ஈ விததி = முந்தைய பத்யத்தில் சொன்னபடி

ஜடசேதனதொளு = பிரம்மதேவரே முதலான ஸ்தாவர வரைக்குமான அனைத்து பொருட்களிலும்

பராவரேஷன = உத்தமரான ரமா பிரம்மாதிகளுக்கும், நீசரான கலி முதலானவர்களுக்கும் ஈசனான (தலைவனான) ஸ்ரீபரமாத்மனின்

ரூப குணகள = அந்தந்த பொருட்களில் அந்த உருவத்தில் இருக்கும் அனந்த ரூபங்களை, அதில் இருப்பவனாக இருந்தாலும், நிர்லிப்தனாக (அதற்கு சம்பந்தப்படாமல்) இருக்கிறான் என்பதை

பாவிஸுத = நினைத்தவாறு

சுக்ஞான = சிறந்த ஞானத்தை

பகுதிய = பக்தியை

பேடு = வேண்டு

கொண்டாடு = ஸ்தோத்திரம் செய்

 

பகவத் அபரோக்‌ஷம் ஆகவேண்டுமெனில், முதலில் தேவையானவை ஞானம் மற்றும் பக்தி மட்டுமே. ஆகையால், காம்ய பலன்களை விரும்பாமல், அனைத்து பிறவிகளிலும் பரமாத்மனிடம் பக்திஞானம் வருமாறு வேண்டிக் கொள்ள வேண்டுமென்று ஆவ தேஹவஎன்னும் இந்த பத்யத்தில் சொல்கிறார்.

 

நம் கர்மங்களுக்கேற்ப ஸ்ரீபரமாத்மன் நமக்கு எந்த பிறவியையும் கொடுக்கட்டும், நரகமோ, அந்த உலகத்தின் எந்த பகுதியிலோ நமக்கு கொடுத்தாலும், அல்லது ஸ்வர்க்க, பூலோகம், பாதாளாதி எந்த உலகத்தில் எந்த தேசத்தில் நம்மை பிறக்கச் செய்தாலும், அங்கங்கு சுகமோ துக்கமோ எந்த நிலையில் நம்மை வைத்திருந்தாலும், மேற்சொன்ன விதத்தில் சர்வோத்தமனான ஸ்ரீபரமாத்மன், ஸ்தாவர ஜங்கம முதலான அனைத்து பிராணிகளிலும் அந்தந்த ரூபனாகி, அந்தந்த பெயரில் அழைக்கப்பட்டு அவற்றில் நிலைத்திருக்கிறான் என்னும் ஞானத்தையும், அந்த பரமாத்மனிடம் த்ருடமான பக்தியையும் நிரந்தரமாக இருக்கச் செய் என்று ஸ்ரீபரமாத்மனை தினந்தோறும் ஸ்தோத்திரம் செய்தவாறு பிரார்த்தனை செய்.

 

நாய், கழுதை, முதலான பிறவிகளில் பிறந்தாலும், நரகாதிகளை அனுபவித்திருந்தாலும், அஞ்ஞானத்தைக் கொண்டிருந்தாலும், பரமாத்மனின் ஸ்வரூப ஞானம் கிடைப்பது கஷ்டம் என்று நினைக்கக்கூடாது. சுக்ஞான பகுதிய பேடு கொண்டாடுஎன்று தாசராயர் கூறியது மனிதப்பிறவி வந்தபிறகு செய்யவேண்டும் என்று அர்த்தமல்ல. இப்போது மனிதர்களாக இருந்து, ஹரி சர்வோத்தமத்வாதி ஞானத்தினால் பக்தியுடன் பரமாத்மனை ஆராதித்துக் கொண்டிருந்தால் ப்ராரப்த கர்மங்களுக்கேற்ப நமக்கு நாய், கழுதை ஆகிய பிறவியை பரமாத்மன் கொடுத்தாலும், எந்த நரகத்தில் என்னை வைத்தாலும், அல்லது பூலோகத்திலேயே எந்த சம்சாரத்தில் நம்மை வைத்தாலும், நம் மனது மட்டும், தேனி மலர்களை தேடிப் போவதுபோல, உன் பாத கமலங்களில் இருக்கட்டும். நீயே சர்வோத்தமன், நீயே அனைத்து இடங்களிலும் வியாப்தன் என்னும் ஞானமும், த்ருடமான பக்தியும் நமக்கு அனைத்து பிறவிகளிலும் இருக்கட்டும். இத்தகைய வரத்தை மட்டும் நமக்குக் கொடுத்து, நமக்கு எந்த பிறவி, எந்த உலகம், எந்த தேகம், எந்த நிலைகளைக் கொடுத்தாலும் கொடுஎன்று தினந்தோறும் பரமாத்மனை இந்த பிறவியில் பிரார்த்திக்க வேண்டும் என்பது அர்த்தம்.

 

இத்தகைய ஞானிகளான பக்தர்களுக்கு ப்ராரப்த கர்ம பலத்தினால், ஜடபரதருக்கு மானின் பிறவியும், இந்திரத்யும்ன ராஜனுக்கு யானையின் பிறவியும், நஹுஷனுக்கு பாம்பின் பிறவியும் கிடைத்தாலும், அவர்களுக்கு அந்தந்த பிறவிகளில்கூட பகவத் அருளால் ஞான, பக்தி இருந்தது என்பதில் சந்தேகமில்லை.

 

பாகவத எட்டாம் ஸ்கந்தத்தில் கஜேந்திர மோட்ச சந்தர்ப்பத்தில்: ஜஜாப பரமம் ஞாப்யம் ப்ராக்ஜன்மன்யனு சிக்‌ஷிதம்’ - ’தன் முந்தைய பிறவியில் கிடைத்த ஞானபலத்தினால், பகவந்தனின் ஸ்தோத்திரத்தை செய்தான் கஜேந்திரன்என்கிறார். ஐந்தாம் ஸ்கந்தத்தில் - பரத ராஜனுக்கு மிருக பிறவி வந்தபோது மற்றும் மூன்றாம் பிறவியில் பிராமணனாக இருந்தபோதும்கூட, பகவத் ஆராதனைகளை செய்ததால் வந்த புண்ணியத்தால், பூர்வஜென்மங்களைப் பற்றிய விவரங்கள் தெரிந்ததால், பகவந்தனை ஒவ்வொரு நொடியும் விடாமல், தியானம் செய்துகொண்டிருந்தான் என்று சொல்கிறார்.

 

பலன்களை எதிர்பார்த்து எதையும் செய்யக்கூடாது என்று பல இடங்களில் சொல்லியிருக்கிறார். ஆனால், அனைத்து பிறவிகளிலும் ஞான பக்திகளைக் கொடு என்று எப்படி கேட்கிறார் என்றால், பகவத் பிரசாதத்தை, ஞான பக்திகளை வேண்டுவது காம்ய அல்ல. ஞான பக்திகளை வேண்டுவது பகவந்தனின் பிரசாதத்திற்காக. பிரசாதமே நமக்கு முக்கியம். நீ மகிழ்ந்தால் எனக்கு முக்தியைக் கொடு’. செல்வத்தை வேண்டுவது மட்டுமே காம்யம். அருளை மட்டுமே வேண்டுவது காம்ய அல்ல. நிஷ்காம பக்தர்களான சனகாதிகள், பிரகலாதன் ஆகியோர்கூட இத்தகைய வரங்களையே கேட்டனர்.

 

பாகவத 3ம் ஸ்கந்தம் 16ம் அத்தியாயம் 49ம் ஸ்லோகத்தில் - சனகாதிகள், பரமாத்மனிடம் மன்னிப்பு கேட்கும் தருணத்தில் :

 

காமம் ப்ரஜேம வ்ருஜினைர் நிரயேஷு நஷ்டாஷ்சேதோலிவத்யதி நுதேபதயோ ரமேத |

வாசஷ்சனஸ்துலஸிவத்யதி தேங்க்ரிஷோபா: பூர்யேததே குணகணைர்யதி கர்ணரந்த்ர: ||

 

உன்னுடைய அனுமதி இல்லாமல், உன் வீட்டு பாதுகாவலர்களை நாங்கள் திட்டியதின் பலனாக, நீ எங்களை எந்தவித நரகாதி லோகங்களுக்கு அனுப்பினாலும், அங்கு செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், ஒன்று மட்டும் வேண்டிக்கொள்கிறோம். எந்த நரகத்தில் நாங்கள் இருந்தாலும், எங்கள் சித்தம் மட்டும் உன் பாத கமலங்களில், தேனீ மலரைத் தேடிப் போவதைப் போல, சுகப்படுவதைப் போல செய்யவேண்டும். நம் வாக் இந்திரியம் உன் பாதத்தில் உள்ள துளசியைப் போல ஒளிரட்டும். [அதாவது, என் நாக்கு உன் பாதகமலங்களையே எப்போதும் ஸ்தோத்திரம் செய்திருக்கட்டும் - என்று பொருள்]. மற்றும், நம் காதுகள் உன் குணங்களால் நிறைந்திருக்கட்டும். இந்த அளவிற்கு உன் அருள் இல்லையெனில், எந்த நரகம் வேண்டுமானாலும் வரட்டும். அங்கு போவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்என்று வேண்டினர்.

 

இதைப்போலவே பாகவத 7ம் ஸ்கந்தம், 9ம் அத்தியாயம், 43ம் ஸ்லோகம்:

 

நைவோத்விஜே பவதுரத்யய வைதரண்யாஸ்வதீர்த்த காயன மஹாம்ருத மத்தசித்த: |

 

கோரமான சம்சாரத்தில் மட்டும் எங்களை தள்ளிவிட வேண்டாம் என்று மேலே வேண்டினர். இந்த ஸ்லோகத்தில் : நீங்கள் சம்சாரத்தில் இருந்தே தீரவேண்டும் என்று கட்டாயமாக எங்களை அதில் தள்ளினாலும், வைதரணி என்னும் இந்த சம்சாரத்தைத் தாண்டுவதற்கு நாங்கள் பயப்படுவதில்லை. அதற்குத் தக்க வலிமை மட்டும் வேண்டும் என விரும்புகிறோம். சில மத்யபானங்களைக் குடித்து, தங்களின் சோர்வினை போக்கிக் கொள்வார்கள். அது போலவே, நாங்கள் உன் பவித்ரமான, மகிமாபூர்வமான, மஹாம்ருதத்தைக் குடித்து அவர்களைப் போல மயக்கமடைந்தால், சம்சாரத்தின் பயம் வராது. அதாவது, அத்தகைய வரத்தைக் கொடு என்று அர்த்தம். ஆகையால், தாசராயர் சுக்ஞான பக்தியை அனைத்து பிறவிகளிலும் கொடு என்று கேள் என்கிறார்.

***

 

No comments:

Post a Comment