ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Tuesday, June 16, 2020

#16 - மாத்ருகா சந்தி

ரோமக3ளொளு வசந்த த்ரிககு

த்தா3ம முக2தொளக3க்3னி பா4ர்க3

தாமரஸ 4வ வாசுதேவரு மஸ்தகதொ3ளிஹரு |

ஈ மனதொ3ளிஹ விஷ்ணு ஷிக2தொ3ளு

மாமஹேஸ்வர நாரசிம்ஹ

ஸ்வாமி தன்னனுதி3தி3 நெனெவரபம்ருத்யு பரிஹரிப ||16

 

ரோமகளொளு = மயிர்களில்

வசந்த = வசந்தருதுவிற்கு அபிமானி தேவதையான வசந்தன்

த்ரிககுத்தாம = மூன்று திமில்களைப் போல, சிறப்பாக வளர்ந்திருக்கும், ஸ்வேதத்வீபாதி மூன்று இடங்களைக் கொண்டிருப்பதால், பரமாத்மனுக்கு த்ரிகக்குத்தாம என்று பெயர்

முகதொளகெ = வாய்க்குள்

அக்னி - அக்னி

பார்க்கவ = பரசுராமதேவர் இருக்கிறார்

மஸ்தகதொளு = தலையில்

தாமரஸபவ = தாமரையில் பிறந்த பிரம்மதேவர்

வாசுதேவரு = வாசுதேவ மூர்த்தி

மனதொளு = மனதில்

ஈ = லட்சுமிதேவி

விஷ்ணு = விஷ்ணுரூபி பரமாத்மன் இருக்கிறார்

ஷிகதொளு = சிகையில்

உமாமஹேஸ்வர நாரஸிம்ஹஸ்வாமி = பார்வதி பரமேஸ்வரன் மற்றும் நரசிம்மதேவர்

தன்னனு = தன்னை

அனுதின = தினந்தோறும்

நெனெவர = தியானிப்பவரின்

அபம்ருத்யு = துர்மரணத்தை

பரிஹரிப = பரிகரிக்கிறான்.

 

மயிர்களில் வசந்தன், த்ரிகக்குத்தாம நாமக பரமாத்மன் இருக்கிறான். முகத்தில் அக்னி, பரசுராமன் இருக்கின்றனர். தலையில் பிரம்மதேவர் வாசுதேவமூர்த்தி இருக்கின்றனர். மனதில் லட்சுமி-விஷ்ணு இருக்கின்றனர். சிகையில் பார்வதி பரமேஸ்வரன் மற்றும் நரசிம்மதேவர் இருக்கிறார். உக்ரம் வீரம் மகாவிஷ்ணும்ஆகிய நரசிம்ம மந்திரங்களை தினந்தோறும் ஸ்தோத்திரம் செய்தவாறு, நரசிம்ம ஸ்மரணையை செய்பவர்களுக்கு அந்தந்த காலத்தில் வரவிருக்கும் துர்மரணத்தை பரிகரிக்கிறான்.


No comments:

Post a Comment