ஞானமய தைஜஸனு ஹ்ருத3ய
ஸ்தா2னவைது3த ப்ராக்ஞனெம்பபி4
தா4னதிங் கரெஸுத்த சித்ஸுக2 வ்யக்தியனெ கொடு3வ |
ஆனதேஷ்டப்ரத3னு அனுஸ
ந்தா4னவீயதெ3 சுப்தியைதி3ஸி
தானெ புனரபி ஸ்வப்ன ஜாக்3ரதெ ஈவ சேதனகெ ||14
ஞானமய = ஞானஸ்வரூபனான
தைஜஸனு = தைஜஸ நாமக பரமாத்மன்
ஹ்ருதயஸ்தான ஐதிஸி = ஜீவரை ஹ்ருதய ஸ்தானத்திற்குக்
கொண்டு வந்து
ப்ராக்ஞனெம்பபிதானதிம் = ப்ராக்ஞ என்னும் பெயரால்
கரெஸுத = அழைத்துக்கொண்டு
சித்ஸுக = ஸ்வரூப சுகத்தின்
வ்யக்தியெனெ கொடுவ = அறிமுகத்தைக் கொடுத்து
ஆனதேஷ்டப்ரதனு = நமஸ்காரம் செய்பவர்களுக்கு
இஷ்டார்த்தங்களை நிறைவேற்றும் ஸ்ரீஹரி
அனுசந்தானவீயதெ = ஜீவர்களுக்கு இப்போது இப்படி
இருக்கவேண்டும் என்னும் சிந்தனையை மனதிற்குக் கொண்டு வராமல செய்து
ஸுப்தியெய்திஸி = தூக்க நிலையைக் கொடுத்து
தானெ = தைஜஸனே
புனரபி = மறுபடி
ஸ்வப்ன ஜாக்ரதெ = ஸ்வப்ன நிலையை, ஜாக்ரதெ நிலையையும்
சேதனகெ = சேதனர்களுக்குஈவ = கொடுக்கிறான்
ஞானஸ்வரூபனான தைஜஸ நாமகனான பரமாத்மன், இதயத்தில் நின்று, ஸ்வப்ன நிலையைக் கொடுக்கிறான். அங்கிருந்து ஜீவர்களை தமக்குள் வைத்துக்கொண்டு
ஹ்ருதய ஸ்தானத்திற்கு வருகிறான். இதே தைஜஸ பரமாத்மனே, ப்ராக்ஞ நாமகனாகி, ஹ்ருதய ஸ்தானத்தில் இருக்கிறான். அங்கு ஜீவனுடன் சேர்ந்து தைஜஸன் வந்தவுடன், ப்ராக்ஞன் தன் ஆலிங்கனத்தால் சுஷுப்த அவஸ்தையை (தூக்கத்தை) கொடுத்து, முக்தி யோக்யர்களுக்கு ஸ்வரூபானந்தத்தை கொஞ்சம்போல அதிகப்படுத்துகிறான்.
ப்ராக்ஞ நாமகனான பரமாத்மனின் ஆலிங்கனமே சுஷுப்த
அவஸ்தை. அப்போதைய சுகமே ஸ்வரூப சுகம். ஜீவனுக்கு சாட்சாத்தாக பரமாத்மனின்
ஆலிங்கனம் கிடைப்பதில்லை. வாயுதேவர் ஜீவனை விழுங்கி, ரமாதேவியரில் பிரவேசம் செய்வார். ரமாவுடன் தைஜஸன், ப்ராக்ஞனில் வருவான். அங்கு பரம்பரா சம்பந்தத்தினால், ஜீவனுக்கு ப்ராக்ஞனின் ஆலிங்கனம் கிடைக்கிறது என்று கருத்து.
தமோ யோக்யருக்கு நிரந்தர சுகமே இல்லாத காரணத்தால், அனித்ய சுகத்தைக் கொடுக்கிறான். சுஷுப்தி காலத்தில், வேறு விஷய ஞானமே இருப்பதில்லை. தைஜஸன் மறுபடி இதயத்திற்கு வந்து ஸ்வப்னத்தைக்
கொடுக்கிறான். விஸ்வன், தைஜஸனை விட்டு கண்ணுக்கு வந்து
ஜாக்ரதெ அவஸ்தையைக் கொடுக்கிறான். இப்படி ஒரே பரமாத்மன், விஸ்வ, தைஜஸ,
ப்ராக்ஞ என்னும் ரூபங்களால் ஜாக்ருத, ஸ்வப்ன, சுஷுப்த என்னும் மூன்று நிலைகளை ஜீவருக்குக் கொடுக்கிறான் என்று கருத்து.
இந்த விஷயத்தில் ப்ரமாண வாக்கியங்கள் இவையே. மானஸ
ஸ்ம்ருதியின்படி:
புனஸ்தைஜஸ ஸம்யுக்தோ விஷ்ணுர்ஜீவகளாவ்ருத: |
கண்டே ஸமாகதோ ஸ்வப்ன: புனர்பவதி தத்ரஹி ||
விஹாய தைஜஸம் விஷ்வே புனஸ்சக்ஷோ: ஸமாகதே |
ததாஜாக்ரதவஸ்தாஸ்யா தேவம் விக்ஞேயமஞ்சஸா ||
தூக்கம் கலைந்த பிறகு, மறுபடி தைஜஸ நாமக பரமாத்மனுடன், விஸ்வன், இதயத்திற்கு வருகிறான். அப்போது ஸ்வப்ன அவஸ்தை, ஜீவருக்கு மறுபடி வருகிறது. தைஜஸனை விட்டு விஸ்வ நாமக பரமாத்மன் மறுபடி
கண்ணிற்கு வர, ஜீவருக்கு ஜாக்ரவஸ்தெ (முழிப்பு) வருகிறது என்று பிரமாணத்தின் அர்த்தம். இதே
அபிப்பிராயத்தையே தாசராயர் இங்கு சொல்லியிருக்கிறார்.
No comments:
Post a Comment