ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Saturday, June 13, 2020

#9 - மாத்ருகா சந்தி

ஸ்தம்ப4 ரூபத3லிப்ப த3க்‌ஷிண

அம்ப3கதி3 ப்ரத்யும்ன கு3ணரூ

பாம்ப்4ரிணியு தானாகி3 இப்ப1ளு வத்ஸரூபத3லி

பொம்ப3சுரபத3யோக்ய ப1வன

த்ரயம்ப3காதி3 மஸ்த தி3விஜ க

3ம்ப3 சேவிதனாகி3 சர்வபதா3ர்த்தக3ள தோ1ர்ப்ப1 ||9

 

தக்‌ஷிணத = வலது

அம்பகதி = கண்ணில்

ப்ரத்யும்ன = ப்ரத்யும்ன நாமக பரமாத்மன்

ஸ்தம்பரூபதலி = ஸ்தம்ப ரூபத்தில்

இப்ப = இருக்கிறான்

அம்ப்ரணியு = ரமாதேவி

தானு = தானும்

குணரூப = கயிற்றின் ரூபத்தில்

இப்பளு = இருக்கிறாள்

பொம்பஸர பதயோக்ய = ஹிரண்யகர்ப்ப என்னும் பிரம்மதேவரின் பதவிக்குத் தகுதியானவரான

பவன = வாயுதேவர்

த்ரியம்பகாதி = ருத்ரதேவரே முதலான

ஸமஸ்த = அனைத்து

திவிஜ = தேவதைகளின்

கதம்ப = கூட்டத்தால்

ஸேவிதராகி = வணங்கப்பட்டு

வத்ஸரூபதலி = கன்றின் ரூபத்தில், கட்டப்பட்டு

சர்வ பதார்த்தகள = பார்ப்பதற்கு தகுதியான அனைத்து பதார்த்தங்களையும்

தோர்ப்ப = விளக்குவான்

 

முந்தைய பத்யத்தில், சந்திர சூர்யர்கள் கண்ணுக்கு அபிமானி தேவதைகள் என்றும், அவர்களின் அந்தர்யாமியாகி நாராயண ததிவாமனர்கள் இருக்கிறார்கள் என்றும் சொல்லியிருப்பர். இப்போது, வலது கண்ணில் இருக்கும் விசேஷ ரூபத்தை சொல்கிறார்.

 

மானஸ ஸ்ம்ருதியில்

தக்‌ஷிணாக்‌ஷிஸ்திதோ விஷ்ணு: ஸ்தம்பரூபோ ரமாஸ்யயம் |

ரஜ்ஜு ரூபதயாபத்தம் வாயும் கோவத்ஸ ரூபிணம் ||

 

என்று சொல்லப்பட்டிருப்பதன் அர்த்தத்தையே இங்கு தாசராயர் சொல்லியிருக்கிறார். வலது கண்ணில் பிரத்யும்ன நாமக ஸ்ரீபரமாத்மன் ஸ்தம்ப ரூபியாகவும், ரமாதேவியர் கயிறு ரூபமாகவும் இருந்து, அடுத்த கல்பத்தில் பிரம்மபதவிக்கு வரவிருக்கும் வாயுதேவரை கன்றின் ரூபமாக கட்டுவர். அந்த வாயுதேவர், ருத்ராதி அனைத்து தேவதா சமூகத்தினராலும் வணங்கப்பட்டு கண்களால் பார்ப்பதற்கு தகுதியான அனைத்து பதார்த்தங்களையும் பார்க்குமாறு செய்வார்.


No comments:

Post a Comment