வாஸவானுஜ ரேணுகாத்மஜ
தா3ஷரதி2 வ்ருஜினார்த்த3னமலஜ
லாஷயாலய ஹயவத3ன ஸ்ரீகபில நரசிம்ஹ |
ஈ ஸுரூபதி3 அவரவர ஸ
ந்தோஷ ப3டிஸுத1 நித்யஸுக2மய
வாஸவாகி3ஹ ஹ்ருத்க1மலதொ3ளு பி3ம்ப3னெந்தெ3னிஸி ||21
வாஸவானுஜ = இந்திரதேவனின் தம்பியான உபேந்திரதேவன்
ரேணுகாத்மஜ = பரசுராமன்
தாஷரதி = தஷரதராமன்
வ்ருஜனார்த்தன = பாப நாஷகனான ஜனார்த்தனன்
அமலஜலாஷயாலய = தூய்மையான நீரினைக் கொண்ட ஏரி முதலானவை; அவற்றை வீடாகக் கொண்டிக்கும் மத்ஸ்யமூர்த்தி
ஹயவதன ஸ்ரீகபில நரசிம்ஹ = ஹயக்ரீவ கபில நரசிம்ம
சுரூபதி = இந்த சிறந்த எட்டு ரூபங்களில்
அவரவர = அந்தந்த ஜீவர்களை (யோக்யதைக்கேற்ப)
சந்தோஷ படிஸுத = மகிழ்ச்சிப்படுத்தியவாறு
நித்யசுகமய = நிரந்தர சுகஸ்வரூபனான ஸ்ரீஹரி
பிம்பனெந்தெனிஸி = பிம்பன் என்று சொல்லிக்கொண்டு
ஹ்ருத்கமலதொளு = இதய தாமரைகளில்
வாஸவாகிஹ = வசிக்கிறான்.
அஷ்ட திக்பாலகர்களிடமிருந்து, 8 ரூபங்களால் வணங்கப்படுகிறான் என்கிறார். இதய கமலத்தின் அஷ்ட தளங்களில்
உபேந்திர,
பரசுராம, ராம,
ஜனார்த்தன, மத்ஸ்ய, ஹயக்ரீவ, கபில,
நரசிம்ம ஆகிய 8 ரூபங்களால் இந்திர, அக்னி முதலான திசைகளில், பிம்ப என்னும் பெயரில், ஆனந்த ஸ்வரூபனான ஸ்வாமி, அவரவர்களின் யோக்யதைக்கேற்ப அவரவர்களை மகிழ்ச்சிப்படுத்தியவாறு வசிக்கிறான்.
ஸுரபனாலய கை1தி3தொ3டெ3 மன
வெரகு3வுது3 ஸத்புண்ய மார்க்க3தி3
ப3ரலு வன்ஹியமனெகெ3 நித்3ராலஸ்ய ஹஸி த்ருஷெயு |
தரணிதனய நிகேதனதி3 ஸ
ம்ப4ரித கோபாடோப தோ1ருவு
த3ரவிதூ3ரனு நிருதியலி ப3ரெ பாபக3ள மாள்ப ||22
சுரபன = இந்திரனின்
ஆலயகெ = வீடு என்றால் இந்திரன் வசிக்கும், கிழக்கு தளத்திற்கு
ஐதிதரெ = வந்தால்
மனவு = மனஸ்
ஸத்புண்யமார்க்கதி = உத்தமமான புண்ய மார்க்கத்தில்
எரகுவுது = நுழைகிறது
வன்ஹியமனெகெ = அக்னி இருக்கும் தளத்திற்கு வந்தால்
நித்ரா ஆலஸ்ய ஹஸி த்ருஷெயு = தூக்கம், சோர்வு, பசி,
தாகம் ஆகியவை உண்டாகிறது
தரணி = சூர்யனின்
தனய = மகனான யமனின்
நிகேதனதி = தளத்திற்கு வந்தால்
ஸம்பரித கோபாடோப = முழுமையான கோபம் வருகிறது
அரவிதூரனு = தோஷங்கள் அற்றவன்
நிருதியல்லிரெ
நிரருதி இருக்கும் தளத்திற்கு வந்தால்
பாபகளமாள்ப = பாப கர்மங்களில் புத்தி செல்கிறது.
20ம் பத்யத்தில் ஹம்ஸரூபி பரமாத்மன், அந்த தளங்களில் இருக்கும் திக்பாலகர்களிடமிருந்து சேவைகளைப் பெற்று, குயவனின் சக்கரத்தைப் போல, 8 தளங்களில் சுற்றியவாறு
இருக்கிறார் என்றார். இப்போது, மூன்று பத்யங்களால் எந்தெந்த
தளங்களில் எந்தெந்த செயல்களை செய்கிறார் என்பதை சொல்கிறார்.
இந்திரன் இருக்கும் கிழக்கு தளத்திற்கு பரமாத்மன்
வந்தால்,
உத்தமமான புண்ய மார்க்கத்தில் மனஸ் நுழைகிறது. அக்னி இருக்கும்படியான
தளத்திற்கு பரமாத்மன் வந்தால், ஜீவனுக்கு தூக்கம், தாகம், பசி ஆகியவை வருகிறது. யமன் இருக்கும் தெற்கு தளத்திற்கு பரமாத்மன் வருகையில், பயங்கரமான கோபம் வருகிறது. தோஷங்கள் அற்றவனான ஸ்ரீஹரி நிரருதி திசையில்
இருக்கும் தளத்திற்கு வந்தால், ஜீவனுக்கு பாவ கர்மங்களில் புத்தி
செல்கிறது.
வருணனல்லி வினோத3 ஹாஸ்யவு
மருதனொளு க3மனாக3மன ஹிம
கர த4னாதிபனல்லி த4ர்மத புத்தி3 ஜனிஸுவுது3 |
ஹரன மந்தி3ரத3ல்லி கோ3 த4ன
த4ரணி கன்யாதா3னக3ள ஒ
ந்த3ரக4ளிகெ3 தடெயத3லெ கொடுதி1ஹ சித்த புட்டுவுது3 ||23
வருணனலி = வருணன் வசிக்கும் மேற்கு தளத்திற்கு
(பரமாத்மன் வந்தால்)
வினோத ஹாஸ்யவு = நகைச்சுவைகளால் காலம் கழிக்கும்
புத்தி வருகிறது
மருதனொளு = வாயு வசிக்கும் தளத்திற்கு (பரமாத்மன்
வந்தால்)
கமனாகமன = சஞ்சாரம் செய்வதற்கு புத்தி உண்டாகிறது
ஹிமகர தனாதிபரல்லி = சந்திர மற்றும் குபேரர்
வசிக்கும் வடக்கு திசைக்கு பரமாத்மன் வருகையில்
தர்மத புத்தி ஜனிஸுவுது = தர்மம் செய்வதற்கு புத்தி
வருகிறது
ஹரன = ருத்ரதேவர் இருக்கும் ஈசான்ய தளத்திற்கு
பரமாத்மன் வருகையில்
கோதன தரணி கன்யாதானகள = கோ-தான, திரவ்ய தான, பூ-தான, கன்யா-தான
ஒந்தரகளிகெ தடெயதலெ = அரை நாழிகைகூட தாமதமில்லாமல்
(அதாவது பரமாத்மன் ஈசான்ய தளத்திற்கு வந்த உடனேயே)
கொடுதிஹ = கொடுக்கிறான்
சித்த = புத்தி
புட்டுவுது = பிறக்கிறது
வருணன் இருக்கும் தெற்கு தளத்திற்கு பரமாத்மன்
வருகையில், சிறந்த நகைச்சுவைகளில் புத்தி செல்கிறது. வாயு இருக்கும் வாயவ்ய தளத்திற்கு
பரமாத்மன் வருகையில், தேசாந்தரம் பயணம் செய்ய புத்தி செல்கிறது. சந்திரன் மற்றும் குபேரன் வசிக்கும்
வடக்கு தளத்திற்கு பரமாத்மன் வருகையில், தர்ம விஷயங்களில் புத்தி
செல்கிறது. ருத்ரதேவர் இருக்கும் ஈசான்ய திசையில் இருக்கும் தளத்திற்கு பரமாத்மன்
வந்த அதே நொடியில், கோதான, பூதான, திரவ்ய தான, கன்யாதான ஆகியவற்றை செய்வதற்கு மனம் விரும்புகிறது.
ஹ்ருத3யதொ3ளகெ3 விரக்தி கேஸர
கொத3கெ3 ஸ்வப்ன ஸுஷுப்தி லிங்க3தி3
மது4ஹ கர்ணிகெ1யல்லி ப3ரெ ஜாக்3ரதெயு புட்டுவுது |
ஸுத3ருஷன மொத3லாத3 அஷ்டா
யுத4வ பிடி3து3 திஷாதி4பதிக3ள
ஸத3னத3லி ஸஞ்சரிஸுதீபரி புத்தி3க3ள கொடு3வ ||24
ஹ்ருதயதொளகெ = இதய கமலத்தின் நடுவே வந்தால்
விரக்தி = சம்சாரத்தில் விரக்தி வருகிறது
கேஸரக்கெ = நடுவில் இருக்கும் தளத்திற்கு
ஒதகெ = வந்தால்
ஸ்வப்ன = ஸ்வப்ன நிலை வருகிறது
லிங்கதி = லிங்க சரீரத்திற்கு வந்தால்
ஸுஷுப்தி = நித்ரா நிலை வருகிறது
மதுஹ = மதுசூதனன்
கர்ணிகெயல்லி = தளங்களில்
பரெ = நுழைந்தால்
கர்ணிகெயல்லி = தளங்களில்
பரெ = நுழைந்தால்
ஜாக்ரதெ = ஜாக்ரதெ நிலை
புட்டுவுது = பிறக்கிறது
ஸுதர்ஷன மொதலாத = சக்ர முதலான
அஷ்டாயுதவ பிடிது = 8 ஆயுதங்களைப் பிடித்து
ஆஷாதிபதிகள = திக்பாலகர்களின்
சதனதல்லி = தளங்களில்
சஞ்சரிசுத = பயணம் செய்தவாறு
ஈபரி = இந்த மாதிரியான
புத்திகள கொடுவ = அறிவைக் கொடுக்கிறது
அஷ்ட தளங்களையும் சுற்றிவிட்டு, பரமாத்மன் கமலத்தின் நடுப்பகுதிக்கு வந்தால், வைராக்ய புத்தி உண்டாகிறது. அந்த தளங்களின் நடுப்பகுதியில் சஞ்சாரம்
செய்யும்போது ஸ்வப்ன அவஸ்தை வருகிறது. நடுத் தண்டிற்கு வரும்போது தூக்க நிலை
வருகிறது. மதுசூதனன் மறுபடி தளங்களுக்கு பிரவேசம் செய்கையில், விழிப்பு நிலை வருகிறது. சக்ர, சங்கு, கதா,
பத்ம,
தனுஸ், அம்பு, கத்தி, கேடயம் என்னும் 8 ஆயுதங்களை 8 கைகளில் தரித்துக்கொண்டு ஸ்ரீபிம்ப என்னும் ஹம்ஸரூபி பரமாத்மன்
அஷ்டதிக்பாலகர்களின் தளங்களில் பயணிக்கும்போது இவ்விதமான புத்திகளைக்
கொடுக்கிறான்.
ஸுத்ரநாமக ப்ராணபதி கா3
யத்ரி ஸம்ப்ரதிபாத்3யனாகி3
கா3த்ரதொ3ளு நெலெஸிரலு திளியதெ3 கண்ட3கண்ட3ல்லி |
தா4த்ரியொளு ஸஞ்சரிஸி புத்ர க
ளத்ர ஸஹிதனுதி3னதி3 தீர்த்த2
க்ஷேத்ர யாத்ரெய மாடி3தே3வு எந்தெ3னுத ஹிக்கு3வரு ||25
சூத்ர நாமக = ஸூத்ர என்னும் பெயருள்ள
ப்ராணபதி = பிராணதேவரின் ஸ்வாமியான ஹம்ஸ நாமக
பரமாத்மன்
காயத்ரி ஸம்ப்ரதிபாத்யனாகி = காயத்ரி பிரதிபாத்யன்
என்று அழைத்துக் கொண்டு
ஈ காத்ரதொலு = இந்த சரீரத்தில்
நெலெஸித்து = இருப்பதை அறியாமல்
தாத்ரியொளு = பூமியில்
கண்டகண்டல்லி = அனைத்து இடங்களிலும்
சஞ்சரிஸி = பயணித்து
புத்ரகளத்ரஸஹித = மக்கள், மனைவியர் சஹிதமாக
அனுதினதி = தினந்தோறும்
தீர்த்த க்ஷேத்ரயாத்ரெயு = தீர்த்த க்ஷேத்திர
யாத்திரைகளை
மாடிதேவு எந்தெனுத = செய்தோம் என்றவாறு
ஹிக்குவரு = பெருமை கொள்வர்.
அனுசந்தானம் இல்லாதவர்கள் தீர்த்த யாத்திரைகளை செய்தாலும்
பலன் கிடைக்காது. அனுசந்தானத்துடன் தேகத்தில்
பகவத் ரூபங்களை சிந்தித்தால், தீர்த்த யாத்திரை செய்ததைவிட உத்தம
பலன் கிடைக்கிறது என்று சொல்கிறார்.
No comments:
Post a Comment