த்வாத3ஷார்க1ர மண்ட3லவு ம
த்4யோத3ரதொ3ளு ஸுஷும்னதொ3ளகி3ஹு
தை3து3 ரூபாத்மகனு அரவத்ததி3க முன்னூரு |
ஈ தி3வாராத்ரிக3ள மானிக3
ளாத திவிஜர ஸந்தயிஸுத நி
ஷாத3ரூபக தை3த்யரனு ஸம்ஹரிப நித்யத3லி ||5
த்வாதஷார்கர மண்டலவு = 12 கோணங்களைக் கொண்ட சூர்ய மண்டலம்
மத்யோதரதொளு = வயிற்றின் நடுவில்
சுஷும்னதொளகெ = சுஷும்னா நாடியில்
இஹுது = இருக்கிறது
ஐது ரூபாத்மகனு = அனிருத்தாதி 5 ரூபாத்மகனான ஸ்ரீபரமாத்மன், அந்த 12 கோண மண்டலத்தில் சங்கர்ஷண ரூபத்தில் இருந்து
அரவத்ததிக முன்னூரு = 360 எண்ணிக்கையில்
ஈ திவாராத்ரிகள மானிகளாத = பகல், இரவுகளுக்கு அபிமானியான
திவிஜர = தேவதைகளை
சந்தெயிஸுத = சமாதானம் செய்தவாறு, இந்த தேவதைகளுக்கு எதிரிகளான
நிஷாதரூபக தைத்யரனு = நிஷாத ஜாதியைப் போல காணும்
தைத்யர்களை
நித்யதலி = தினந்தோறும்
சம்ஹரிப = சம்ஹரிக்கிறான்.
வயிற்றின் நடுவில் சுஷும்னா நாடியில் 12 கோணம் உள்ள சூர்ய மண்டலம் இருக்கிறது. அதில் பஞ்சரூபாத்மகன் என்றால்
அனிருத்தாதி 5 ரூபாத்மகனான ஸ்ரீபரமாத்மன் சங்கர்ஷண ரூபத்தினால் இருந்து 360 பகல் மற்றும் 360 இரவுகளுக்கு அபிமானிகளான தேவதைகளை மகிழ்வித்தவாறு, சூரியனுக்கு எதிரியான மந்தேஹ என்னும் அசுரனை தினந்தோறும் அழித்தவாறு
இருக்கிறார். ஒரு நாள் அந்த அசுரனை கொன்றுவிட்டால், மறுபடி அடுத்த நாளும் ஏன் அவனைக் கொல்ல வேண்டும் என்று கேட்டால், சந்தியா பாஷ்யத்தில் :
ஸத்யாகாலேச ஸம்ப்ராப்தே கோரே பரமதாருணீ |
மந்தேஹா ராக்ஷஸா கோரா: ஸூர்ய மிச்சந்தி காதிதும் ||
ப்ரஜாபதி க்ருத: ஸாபஸ்தேஷாமைரேய ராக்ஷஸாம் |
அக்ஷயத்வம் ஷரீராணாம் மரணஞ்ச தினேதினே ||
தத: ஸூர்யஸ்ய தைர்யுத்தம் பவத்யேவ ஸுதாரணம் ||
தினந்தோறும் சந்தியா காலத்தில், மந்தேஹ என்னும் சில கோரரான அசுரர்கள், சூரியனை தின்பதற்கு விரும்புவர். அந்த அசுரர்களுக்கு பிரம்மன், தினந்தோறும் மரணம் அடையுமாறும், தேகம் நாசமடையாமல் இருக்குமாறும்
சாபம் கொடுத்திருக்கிறார். அது எப்படியெனில், தினந்தோறும் காலை மாலை இரு வேளைகளிலும், அந்த அசுரர்கள் சூரியனை தின்பதற்கு வருவார்கள். இந்த இருவர்களுக்கும்
தினந்தோறும் போர் வரும். அந்த சமயத்தில், பிராமணர்கள், காயத்ரி மந்திரத்தால் மந்திரிக்கப்பட்ட நீரினால் அர்க்யம் கொடுத்தால், அந்த தண்ணீர் ஆயுதமாக மாறிச் சென்று அந்த அசுரர்களைக் கொல்லும். அவர்கள்
மறுபடி தங்களின் அழியா உடலில் சென்று சேர்ந்து, பிழைத்து, மறுபடி சூரியனுடன் போருக்கு வருவர். மறுபடி மரணமடைவர். இப்படியான பிரம்ம
தேவரின் சாபம் இருக்கிறதென்று சந்த்யா பாஷ்யத்தில், விஷ்ணு புராணத்தின் ஆதாரத்தின்படி எழுதியிருப்பர்.
பிராமணர்களின் அர்க்யத்தினால் மட்டுமே அசுரர்கள்
இறக்கிறார்கள் என்றால், இங்கு 12 கோண மண்டலத்தில் இருக்கும் சங்கர்ஷணரூபி பரமாத்மன் அவர்களைக் கொல்கிறான்
என்று சொல்லியிருக்கிறாரே? அதற்கும் இதற்கும் சம்பந்தம்
இல்லையா என்று கேட்டால், வெறும் மந்திரத்திற்கோ, அர்க்ய தண்ணீருக்கோ அசுரர்களைக் கொல்லும் தகுதி இல்லாத காரணத்தால், நம் தேகத்தில் வயிற்றின் நடுவில் 12 கோண சூர்யமண்டலத்தில் இருப்பவனான
சங்கர்ஷணன், நாம் கொடுக்கும் அர்க்யத்தில் இருந்து அந்த அசுரர்களைக் கொல்கிறான். சூரியனின்
எதிரி இறந்துவிடுவதால், பகல் இரவுகளின் அபிமானி
தேவதைகளுக்கு மகிழ்ச்சி உண்டாகிறது.
No comments:
Post a Comment