ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Monday, June 22, 2020

6-10 ஜீவப்ரகரண சந்தி

அனலபக்வவகை3ஸி3ன்னவ

அனலனொளு ஹோமிஸுவ தெரன

ந் 3னிமிஷேஷனு மாடி3 மாடி3ஸிதகி2ல கர்மக3|

மன வசன காயத3லி திளித3னு

தி3னதி3 கொடு3 ஷங்கிஸதெ3 வ்ருஜினா

ர்த்த3தா3 கைகொண்டு3 ந்தைஸுவனு தன்னவர ||6

 

அனல = நெருப்பினால்

பக்வவகைசி = சமைத்த

அன்னவனு = அன்னத்தை

அனலனொளு = அந்த நெருப்பிலேயே

ஹோமிஸுவ தெரதந்தெ = ஹோமம் செய்வதைப் போல

அனிமிசேஷனு = தேவேஷன்

மாடி மாடிஸித = செய்து, செய்வித்த

அகிள கர்மகள = அனைத்து கர்மங்களையும்

மனவசன காயதலி = மனம், வசனம், தேகத்தால்

திளிது = செய்த கர்மங்களை பரமாத்மனே செய்தான் என்பதை அறிந்து

அனுதினதி = தினந்தோறும்

ஷங்கிஸதெ = சந்தேகம் இல்லாமல்

கொடு = சமர்ப்பணம் செய்தால்

வ்ருஜனார்த்தன = கஷ்டங்களை பரிகரிக்கும் பரமாத்மன்

ஸதா = அனைத்து காலங்களிலும்

கைகொண்டு = ஏற்றுக்கொண்டு

தன்னவர = தன் பக்தகளை

ஸந்தயிஸுவனு = பாதுகாக்கிறான்.

 

நமக்குள் இருந்துகொண்டு, பரமாத்மன் செய்து, செய்விக்கும் கர்மங்களை பரமாத்மனுக்கே சமர்ப்பணம் செய்யவேண்டும் என்பதை ஆதாரத்துடன் விளக்குகிறா.

 

அக்னியில் நிலைத்திருக்கும் ஸ்ரீபரசுராம தேவரே, அன்னாதிகளை சரியான பதத்தில் இருக்கச் செய்கிறார். அதாவது, நாம் அடுப்பை ஏற்றி, நெருப்பினால் அன்னாதிகளை சமைக்கிறோம் அவ்வளவே. அந்த பக்குவத்தைக் கொடுக்கும் சக்தி அக்னிதேவருக்கு இல்லை ஆகையால், அக்னி அந்தர்யாமியாக இருந்து, பரசுராம தேவர் செய்கிறார் என்று பொருள். அதே அன்னத்தையே பரமாத்மனுக்கு நைவேத்தியம் செய்து மற்றும் வைஸ்வதேவம் செய்யும்போது அக்னி அந்தர்கத பரசுராமாத்மக பரமாத்மனுக்கு சமர்ப்பிக்கும் சம்பிரதாயம் இருக்கிறது அல்லவா? இதைப் போலவே, பரமாத்மன் நம் மனோ, வாக், காயங்களில் இருந்துகொண்டு செய்யும் செய்விக்கும் அனைத்து புண்ணிய பாபாதி கர்மங்களை பரமாத்மனுக்கு அர்ப்பிக்கலாமோ கூடாதோ என்னும் சந்தேகமே படாமல், அவனுக்கு சமர்ப்பித்தால், பாவங்களைப் போக்குபவனான ஸ்ரீபரமாத்மன் தான் அனைத்து காலங்களிலும் அவற்றை ஏற்றுக்கொண்டு, பாவங்களை சுட்டுப் பொசுக்கி, புண்யபலன்களை பக்தர்களுக்குக் கொடுத்து அவர்களை பாதுகாக்கிறான்.

 

குது3ரெபா3லத3 கொனெய கூத3

துதி3 விபா43வ மாடி3 ஷத1வித4

அத3ரொளொந்த3னு நூரு பா43வ மாட3லெந்தி1ஹுதோ3 |

விதி44வாதி3 மஸ்த தி3விஜர

மொத3லுமாடி3 த்ருணாந்த ஜீவரொ

ளதி4 ன்யூனதெ இல்லவெந்தி3கு3 ஜீவ பரமாணு ||7

 

குதுரெபாலத கொனெய கூதல = குதிரையின் வாலின் முடியின் இறுதி பாகத்தை

ஷதவித = நூறு விதமாக

துதி விபாகவ மாடி = அந்த நுனியை பிரித்து

அதரொளொந்தனு = அவற்றில் ஒரே ஒரு பாகத்தை எடுத்து

நூறு பாகவ மாடலு = அதை நூறு பாகங்களாகப் பிரித்தால்

எந்திஹுதோ = எவ்வளவு இருக்குமோ (என்ன அளவில் இருக்குமோ)

விதிபவாதி = பிரம்ம ருத்ரர் முதலான

ஸமஸ்த திவிஜர மொதலு மாடி = அனைத்து ஜீவர்களில் தொடங்கி

த்ருணாந்த ஜீவரொளு = த்ருண (கிருமி) வரைக்குமான அனைத்து ஜீவர் வரை, அவர்களுக்குள்

எந்திகு = எப்போதும்

ஜீவபரிமாணு = ஜீவரின் அளவு

அதிகன்யூனதெ இல்ல = அதிகமோ குறைவோ இல்லை.

 

ஜீவர்களில் பரமாத்மன் பரமாணுவான பற்பல ரூபங்களில் வசிக்கிறான் என்னும் பகவன் மஹிமையை முந்தைய பத்யத்தில் சொல்லிவிட்டு, இந்த பத்யத்திலிருந்து ஜீவரின் அளவினை சொல்கிறார்.

 

குதிரையின் வால்முடியில் ஒரு முடியை எடுத்து, அதை நுனியை, நூறு பாகங்களாகப் பிரித்து, அதன் ஒரு பாகத்தை மட்டும் எடுத்து, மறுபடி அதை நூறு பாகங்களாகப் பிரித்தால், அந்த ஒரு துண்டு எந்த அளவில் இருக்குமோ, அந்த அளவிலேயே; பிரம்மனில் துவங்கி கிருமி ஜீவரின் வரைக்கும், அனைத்து ஜீவர்களின் ஸ்வரூபத்தின் அளவு இருக்கும். பிரம்மாதி ஜீவரின் அளவு பெரியதாக இருக்கட்டும், கிருமி ஜீவரின் அளவு சிறியதாக இருக்கட்டும், இந்த ஸ்வரூபத்தின் அளவு அதிகமாகவோ குறைவாகவோ இருப்பதில்லை.

 

அஷ்வ வாலாக்ரமாதாய விபஜ்ய ஷததாஹிதத் |

புனஸ்ச ஷததாபின்னம் கியன்மானம் பவிஷ்யதி ||

தாவத்பிரம்மாதி ஜீவானாம் பரினாணம் ப்ரகீர்த்திஷம் ||

 

என்னும் தத்வசாரத்தின் வாக்கியமே இதற்கு ஆதாரமாகும். இந்த ஸ்லோகத்தின் அர்த்தம் அப்படியே இந்த பத்யத்தில் வந்திருக்கிறது.

 

ஜீவனங்கு3ஷ்டா2ங்க்3ர மூருதி

ஜீவனங்கு3ட மாத்ர மூருதி

ஜீவன ப்ராதே3ஷ ஜீவாகார மூர்த்திக3ளு |

ஏவமாதி3 அனந்த ரூபதி3

யாவ 3வயவக3ளொளு வ்யாபி1ஸி

கா1வ கருணாளுக3தே3வனு ஈ ஜக3த்ரயவ ||8

 

ஜீவன அங்குஷ்டாக்ர மூருதி = கட்டை விரலின் நுனி மாதிரியான அளவில் பகவன் மூர்த்தி

ஜீவனங்குஷ்ட மாத்ர மூருதி = கட்டை விரலின் அளவிலான பகவன் மூர்த்தி

ஜீவன ப்ராதேஷ = கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்குமான உயர வித்தியாச அளவிற்கு

ஜீவாகார மூர்த்திகளு = ஜீவனின் அளவிற்கு உயரமான மூர்த்திகள்

ஏவமாதி = இவை முதலான

அனந்த ரூபதி = அனந்த ரூபங்களால்

யாவதவயவகளொளு = அனைத்து அங்கங்களிலும்

வியாபிஸி = நிலைத்திருந்து

கருணாளுகள தெய்வனு = கருணாபூர்ணனான ஸ்ரீஹரி

ஈ ஜகத்ரயவ = மூன்று உலகங்களையும்

காவ = காப்பாற்றுகிறான்.

 

ஜீவன், பரமாணு ரூபமானவன் என்று முந்தைய பத்யத்தில் சொல்லி, இந்த பத்யத்தில் ஜீவனைவிட மிகவும் சிறியதான அளவில் ஜீவனில் இருக்கிறான் என்று சொல்கிறார்.

 

குதிரையின் முடியில் நுனியை நூறாகப் பிரித்து, அதில் இருக்கும் ஒரு முடியை மறுபடி நூறாகப் பிரித்தால், வரும் அளவிற்கு ஜீவனின் அளவு இருக்கும் என்று கூறியிருந்தார். அத்தகைய ஜீவனின் கையின் கட்டைவிரலின் நுனி அளவிற்கு உருவம் உள்ள மூர்த்திகள் சில, சில மூர்த்திகள் கட்டை விரலின் அளவிற்கு இருக்கும். ஜீவனின் முழுமையான உயரத்திற்கு சில மூர்த்திகள். இப்படி பற்பல ரூபங்களால் ஜீவனின் அனைத்து அங்கங்களிலும் வியாபித்து கருணாபூர்ணனான ஸ்ரீஹரி மூன்று உலகங்களையும் காப்பாற்றுகிறான்.

 

தத்கர்ணிகாமூலதேஷே ஜீவாங்குஷ்டாக்ர மானத: |

மூலேஷ இதிக்யாத: ||

 

ஆகிய முக்தி தத்வ கிரந்த வாக்கியங்களால் ஜீவனின் இதயத்தில் அஷ்டதள தாமரையின் நடுவில், ஜீவனின் கட்டை விரல் நுனியின் அளவு கொண்ட ரூபத்தினால் மூலேஷ என்னும் பெயரில் வசிக்கிறான். அந்த மூர்த்தியின் பின்பக்கத்தில் ஜீவனின் கட்டைவிரல் அளவு கொண்ட ரூபத்தினால், அந்த மூர்த்தியின் பின்பக்கத்தில் ப்ராணேஷ நாமக பரமாத்மன் இருக்கிறான் என்னும் அர்த்தம் வருகிறது. ஜீவனின் அனைத்து அங்கங்களிலும் அனந்தானந்த ரூபங்களால் இருக்கிறான் என்று விஷயத்தில் தைத்திரிய பாஷ்யத்தில் சொல்லியிருக்கும்

 

விஷ்ணோரங்கானி ஜீவாங்கேஷ்யவச்சின்னானி ஸர்வஷ: |

வாஸுதேவோ ஹரே: சீர்ஷம் ஜீவ சீர்ஷே வ்யவஸ்தித: நாராயணோ ஹரேர்மத்யம் ஜீவ ஸந்தேஹ ஸம்ஸ்தித: |

 

ஆகிய ஆதாரங்களால், பரமாத்மனின் ரூபங்கள் ஜீவனின் அனைத்து அங்கங்களிலும், ஒவ்வொரு அங்கத்திலும் தனித்தனியாக பகவத்ரூபங்கள் இருக்கின்றன என்று அறியவேண்டும். ஜீவனின் ஸ்வரூப தேஹாகாரனாக, ஜீவனின் ஸ்வரூப தேகத்தை வியாபித்து ஸ்ரீபரமாத்மன் இருக்கிறான். அந்த பரமாத்மனின் சிரஸில் வாசுதேவ ரூபி வசிக்கிறான். அதே பரமாத்மனின் சிரஸே ஜீவனின் சிரஸிலும் இருக்கிறது. அங்கு வாசுதேவ மூர்த்தி இருக்கிறான். நாராயணன், ஜீவனின் தேஹாகாரனான பரமாத்மனின் நடு பாகத்தில் இருக்கிறான். நாராயணனே ஜீவனின் நடுப்பாகத்திலும் இருக்கிறான். இதே பிரகாரம், வலது பக்கத்தில் பிரத்யும்ன, இடது பக்கத்தில் அனிருத்த இருக்கிறான். இப்படியாக, அனந்தமான பரமாணு ரூபங்களால் ஜீவனின் ஸ்வரூப தேகத்தில் பரமாத்மன் இருக்கிறான் என்று அறியவேண்டும்.

 

பி3ம்ப3 ஜீவாங்கு3ஷ்ட மாத்ரதி3

இம்பு3 கொண்டி3ர்வரொளு ஸூ

க்‌ஷ்மம்ப3ரதி3 ஹ்ருத்க1மல மத்4ய நிவாஸியெந்தெ3னிஸி |

எம்ப3ரீதகெ3 கோவித3ரு வி

ஷ்வம்ப4ராத்மக ப்ராக்ஞ ப4க்தகு

டும்பி3 ந்தெயிஸுவனு ஈபரி ப3ல்ல ப4ஜகரனு ||9

 

பிம்ப = பிம்பரூபியான ஸ்ரீபரமாத்மன்

ஜீவாங்குஷ்ட மாத்ரதி = ஜீவனின் கட்டை விரல் அளவில்

இம்புகொண்டிஹ = நிலைத்திருக்கிறான்

ஸர்வரொளு = அனைவருக்குள்ளும்

ஸூக்‌ஷாம்பரதி = சூக்‌ஷ்மமான இதயம் என்னும் ஆகாயத்தில்

ஹ்ருத்கமல மத்ய நிவாஸி எந்தெனிஸி = இதயத்தாமரையில் நடுவில் இருப்பவன் என்று சொல்லிக்கொண்டு

கோவிதரு = ஞானிகள்

ஈதகெ = இந்த பகவத்ரூபத்தை

விஷ்வம்பராத்மக ப்ராக்ஞ = விஷ்வம்பர, ஆத்மா, ப்ராக்ஞ என்னும் மூன்று பெயர்களைக் கொண்டிருக்கிறான் என்று

யெம்பரு = சொல்வர்

ஈ பரி = இப்படியாக

பல்ல = அறிந்த

பஜகரனு = தன் பக்தர்களை (தன்னை பஜிப்பவர்களை)

பக்த குடும்பி = பக்தர்களைக் காப்பவன்

சந்தெயிஸுவனு = காப்பாற்றுவான்

 

பிம்பரூபியான ஸ்ரீபரமாத்மனின் லட்சணங்களை இங்கு சொல்கிறார்.

 

ஸ்தூலாங்குஷ்டமிதோ தேஹே ஜீவாங்குஷ்டமிதோ ஹ்ருதி - என்று காடக உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஆதாரத்தின்படி, பரமாத்மன் ஸ்தூல தேகத்தில், இதயாகாஷத்தில், ஸ்தூல தேகத்தின் கட்டைவிரல் உயரத்திற்கேற்ப உள்ள ரூபத்தினால் இருக்கிறான். இதே போல, ஜீவனின் ஸ்வரூபதேகத்தின் அதி சூக்‌ஷ்மமான ஹ்ருதயாகாஷத்தில், ஜீவனின் கட்டைவிரல் உயரத்திற்கேற்ப ரூபத்திற்கேற்ப இருக்கிறான் என்று அறியவேண்டும்.

 

இவன், சூஷ்மமான இதயகமலத்தில் நடுவில் இருப்பதால் இவனை ஹ்ருத்கமல மத்ய நிவாஸிஎன்பர். இவனையே ஞானிகள் விஷ்வம்பர மூர்த்தி என்றும், ஆத்ம மூர்த்தி என்றும், ப்ராக்ஞ மூர்த்தி என்றும் சொல்வார்கள். இந்த ஸ்வாமி, தன் பக்தர்களை அன்புடன் பாதுகாப்பதால், பக்தகுடும்பி என்று அழைக்கப்படுகிறான். உலகத்தையே பாதுகாப்பதால், பக்தர்களை அன்புடன் பாதுகாக்கிறான் என்பது கருத்து. இப்படியாக அறிந்து யார் பரமாத்மனை ஸ்தோத்திரம் செய்கிறார்களோ அவரை அனைத்து விதங்களிலும் பரமாத்மன் மகிழ்ச்சிப்படுத்துகிறான்.

 

புருஷ நாமக சர்வஜீவரொ

ளிருவ தே3ஹாகா1ர ரூபதி3

கரண நிய்யாமக ஹ்ருஷீகப னிந்த்ரியங்க3ளலி |

துரிய நாமக விஷ்வ தா ஹ

ந்னெரடு3 பெ3ரளுளிது3த்தமாங்க3தி3

எரட3தி41 எப்பத்துஸாவிர நாடிக3ளொளிப்ப ||10

 

புருஷ நாமக = புருஷ நாமகனான பரமாத்மன்

சர்வஜீவரொளிருவ = அனைத்து ஜீவர்களிலும் இருக்கிறான்

தேஹாகார ரூபதி = ஜீவனின் ஸ்வரூப தேகம் எந்த ரூபத்தில் இருக்கிறதோ அதே ரூபத்தினால்

இருவ = இருக்கிறான்

ஹ்ருஷீகப = இந்திரியங்களை பாதுகாப்பதால், ஹ்ருஷிகேஷ என்னும் பெயருள்ள பரமாத்மன்

கரண நியாமக = இந்திரியங்களை நடத்துபவனாக, அந்த இந்திரியங்களில் இருக்கிறான்

துரிய நாமக விஷ்வ = துரிய என்னும் பெயருள்ள விஸ்வ மூர்த்தி

ஹன்னெரடு பெரளுளிதுத்தமாங்கதி = தலைமேல் 12 அங்குல நீளமாக

எரடதிக எப்பத்து ஸாவிர நாடியொளகெ = 72,000 நாடிகளுக்குள்

இப்ப = அந்த அனைத்து நாடிகளுக்குள்ளும் இருக்கிறான்

 

புருஷ நாமகனான ஸ்ரீபரமாத்மன், ஜீவனின் ஸ்வரூப தேகம் எந்த உருவத்தில் இருக்கிறதோ, அதாவது, மனிதனாக இருக்கிறதோ, மிருகமாக இருக்கிறதோ, பறவையோ, அந்த ஜீவனின் ஸ்வரூபத்தை அனுசரித்து அனைத்து ஜீவர்களின் தேகங்களில் இருக்கிறான். இந்திரியங்களில் இந்திரியங்களை வழி நடத்துபவனாக ஹ்ருஷிகேஷ நாமக பரமாத்மன் இருக்கிறான். விஷ்வ நாமகன், துர்ய நாமத்தினால் தலைக்கு மேல் 12 அங்குலம் நீளத்தில் இருக்கிறான். இந்த விஷயத்தைப் பற்றி, 8ம் சந்தி 3ம் பத்யத்தின் அர்த்தத்தில் விளக்கியிருக்கிறோம். இதுமட்டுமல்லாமல், தேகத்தில் இருக்கும் 72,000 நாடிகளிலும் பரமாத்மன் இருக்கிறான். துர்ய, விஷ்வ, இந்த ரூபங்களை சொல்வதால் பரமாத்மா சதூரூப: ஸர்வப்ராணி: ஷரீரக:என்னும் பிரமாணத்திற்கேற்ப விஷ்வ, தைஜஸ, ப்ராக்ஞ, துர்ய என்னும் 4 ரூபங்களால் ஜீவர்களின் தேகத்தில் இருக்கிறான் என்று பொருள். 

No comments:

Post a Comment