ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Thursday, June 4, 2020

#20 - பஞ்சதன்மாத்ர சந்தி

கால கர்ம கு3ண ஸ்வபா4வ க3

ளாலயனு தானாகி3 லகுமி

லோல தத்தத்3ரூப நாமதி3 கரெசுதொளகி3த்து3 |

லீலெயிந்த3லி சர்வஜீவர

பாலிஸுவ சம்ஹரிப ஸ்ருஷ்டிப

மூல காரண ப்ரக்ருதி கு3ண கார்யக3ள மனெமாடி ||20

 

கால = இறந்த, நிகழ், எதிர் என்னும் மூன்று காலங்கள்

கர்ம = சுக துக்கத்தின் பலன்களான கர்மங்கள்

குண = சத்வ ரஜஸ் தமோ என்னும் மூன்று குணங்கள்

ஸ்வபாவ = ஜீவர்களின் ஸ்வபாவம் இவற்றிற்கு

ஆலயனு = அங்கு வசிப்பவன்

தானாகி = தானாகவே

லகுமி லோல = லட்சுமிபதியான

தத்தத்ரூப நாமதி = கால, கர்மாதி நாமங்களால் அழைக்கப்படும்

ஒளகித்து = அனைவரிலும் அந்தர்யாமியாக இருந்து

லீலெயிந்தலி = சோர்வில்லாமல் தனது விளையாட்டுகளினாலேயே

பாலிஸுவ = விஷ்ணு ரூபத்தினால் காக்கிறான்

சம்ஹரிஸி = ருத்ர ரூபத்தினால் ருத்ரதேவரில் இருந்துகொண்டு, அனைத்து ஜீவர்களின் ஸ்தூல தேகங்களை சம்ஹரித்து, ப்ரபஞ்சத்தையே எரித்து

மூலகாரண = மூலகாரணமான ப்ரக்ருதிக்கு காரணமான பரமாத்மன்

ப்ரக்ருதி குணகார்யகள = ப்ராக்ருதமான சத்வ ரஜஸ் தமோ குணங்களின் காரியங்களையே

மனெமாடி = தன் இருப்பிடமாகக் கொண்டு (அவற்றில் இருந்து)

ஸ்ருஷ்டிப = வாசுதேவாதி ரூபங்களால் சூக்‌ஷ்ம ஸ்ருஷ்டியை செய்து, பின் பிரம்மதேவரின் பிரம்ம ரூபத்தில் இருந்து, ஸாத்விக ராஜஸ தாமஸ ஜீவர்களின் ஸ்தூல ஸ்ருஷ்டியை செய்கிறான்.

 

ஸ்ரீபரமாத்மனின் ஸ்ருஷ்ட்யாதி மகிமையை கால கர்மஎன்னும் பத்யத்தில் சொல்கிறார்.

 

ஜீவர்கள் அனாதி காலத்திலிருந்து சாத்விக, ராஜஸ, தாமஸர் என்று மூன்று விதமான ஸ்வபாவம் உள்ளவர்களாக இருக்கின்றனர். சாத்விகர் - சுக ப்ராரப்த கர்மங்கள் உள்ளவர்கள். முக்தி யோக்யர் எனப்படுகிறார்கள். ராஜஸர் - சுக துக்க மிஸ்ரமான ப்ராரப்த கர்மங்கள் உள்ளவர்கள். தாமஸர் துக்க ப்ராரப்த கர்மங்கள் உள்ளவர்கள். இவை அனாதி காலத்திலிருந்து ஜீவர்களின் ஸ்வபாவமாக இருக்கின்றன. ஸ்ரீலட்சுமிரமணன், சிறிய அணு முதல் அனைத்திலும் இருந்து, காலாத்மகனாக, ஜீவர்களின் குணகர்மங்களை அனுசரித்து சம்சார சாதனையை செய்வித்து, தாமசர்களின் யோக்யதைக்கேற்ப, துக்கத்திற்கான சாதனையை செய்வித்தும், த்ரிவித ஜீவர்களை விஷ்ணு ரூபத்தினால் காப்பாற்றுகிறான்.

 

பிரளய காலத்தில் ருத்ராந்தர்கதனாகி ருத்ர ரூபத்தில் இருந்து, பிரபஞ்சத்தை எரித்து, அனைத்து ஜீவர்களுக்கும் அவரவர்களின் குண கர்மங்களுக்கேற்ப சுக, மிஸ்ர, துக்க ரூபங்களான முக்தி, சம்சாரம், தமஸ் என்னும் 3 வித கதிகளைக் கொடுக்கிறான். மேலும், இதுவரை ஸ்ருஷ்டிக்கு வராத ஜீவர்களின் குண கர்மங்களுக்கேற்ப மூலபிரக்ருதியை ஸ்ருஷ்டிக்கிறான். ஸ்ருஷ்டியாதி கர்மங்களுக்கு, பிரம்மாதிகள், ஒரு நிமித்த காரணர்களே (பெயருக்கு என இருப்பவர்கள்). முக்ய காரணன், பரமாத்மனே.


***

No comments:

Post a Comment