ஸ்ரீனிகேதன ஸாத்வதாம்பதி1
ஞானக3ம்ய க3யாசுரார்த்த4ன
மௌனிகுலஸன்மான்ய மானத3 மாதுலத்4வம்ஸி |
தீ3னஜனமந்தா3ர மது4ரிபு
ப்ராணத3 ஜகன்னாத2விட்டல
தானெ க3தியெந்த3னுதி3னதி3 நம்பி3த3வரனு பொரெவ ||33
ஸ்ரீனிகேதன = லட்சுமிதேவியரின் வீடு. அதாவது, லட்சுமிதேவியரை எப்போதும் வக்ஷஸ்தலத்தில் வைத்திருக்கும்
ஸாத்வதாம்பதி = சாத்விக குலத்தின் ஸ்வாமியான. அல்லது, சஜ்ஜனர்களின் ஸ்வாமியான
ஞானகம்ய = ஞானத்தினாலேயே அறியக்கூடியவனான
கயா சுரார்த்தன = கயா என்னும் தைத்யனைக் கொன்ற
மௌனிகுல ஸன்மான்ய = ரிஷிகுலத்தினால்
புகழப்பட்டிருக்கும்
மானத = தன் பக்தர்களுக்கு தக்க கௌரவத்தைக் கொடுக்கும்
மாதுலத்வம்ஸி = தாய்மாமனான கம்ஸனைக் கொன்ற
தீனஜனமந்தார = தீனனான பக்தர்களுக்கு கல்பவ்ருக்ஷத்தைப்
போல இருக்கும்
மதுரிபு = மது என்னும் அசுரனைக் கொன்ற
ப்ராணத = அனைவருக்கும் பிராணனைக் கொடுத்து
காப்பாற்றும்
ஜகன்னாதவிட்டல = (தாசராயரின் பிம்பரூபியான)
ஜகன்னாதவிட்டலன் என்று அழைக்கப்படும் ஸ்ரீபரமாத்மன்
தானே கதியெந்து = பரமாத்மனே கதி என்று
அனுதினதி = தினந்தோறும்
நம்பிதவரனு = தன்னை நம்பியவர்களை
பொரெவ = காப்பாற்றுவான்.
சந்தியை முடித்தவாறு, பரமாத்மானை வணங்கி, இத்தகைய பரமாத்மனை வணங்கியவர்களை
அவன் காப்பாற்றுவான் என்கிறார் தாசராயர்.
ஸ்ரீலட்சுமிதேவியை எப்போதும் தன் மார்பில் வைத்துக்
கொண்டிருப்பதால், பரமாத்மனுக்கு ஸ்ரீனிகேதன என்று பெயர். யாதவ குலத்தைச் சேர்ந்த, சாத்வத குலத்தில் பிறந்ததால் பரமாத்மனுக்கு சாத்வதாம்பதி என்று பெயர். அல்லது, சாது சஜ்ஜனர்களுக்கு ஸ்வாமியானதாலும் ஸாத்வதாம்பதி என்று பெயர். பரமாத்மனை
சேர்வேண்டுமெனில், ஞானத்தினாலேயே சாத்தியம் ஆகையால், ஞானகம்ய என்று பெயர் பெற்றார். கயா
என்னும் அசுரனைக் கொன்று, புண்ணிய க்ஷேத்திரமான கயாவை
காப்பாற்றியவர். முனிவர்களால் மரியாதை செய்யப்படுகிறவன். தான் இந்த
பிரம்மாதிகளுக்கு மரியாதை நிமித்தமாக சன்மானம் செய்கிறவன். தன் தாய்மாமனான
கம்சனைக் கொன்று, யாதவர்களைக் காத்தவன். தன் பக்தர்களுக்கு கல்பவ்ருக்ஷம் போல இருப்பவன். மது
என்னும் மிகக்கொடிய தைத்யனைக் கொன்றவன். அனைவருக்கும் பிராணனைக் கொடுப்பவன்.
இத்தகைய பிம்பரூபியான ஸ்ரீஜகன்னாதவிட்டலனை நீயே கதி
என்று யார் திடமாக நம்புகின்றனரோ, அவர்களை ஸ்வாமி காப்பாற்றுகிறான்.
பஞ்சதன்மாத்ரா சந்தி என்னும் 7ம் சந்தியின் உரை முடிவுற்றது.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.
***
No comments:
Post a Comment