நாலிகெ3யொளிஹ வருண மத்ஸ்யணு
நாலிகெ3யொளு உபேந்த்ரரிந்த3ரு
தாலு பர்ஜன்யாக்2ய ஸூர்யனு அர்த்த4 க3ர்ப்ப4னிஹ |
ஆலியொளு வாமன ஸுபா4மன
பா2லதொ3ளு ஷிவ கே1ஷவரு சுக2
போலதொ3ளகெ3 ரதீஷ காமனு அல்லெ ப்ரத்3யும்ன ||15
நாலிகெயொளு = நாக்கினில்
வருண = வருணன்
மத்ஸ்ய = மத்ஸ்யரூபி பரமாத்மன்
இஹ = இருக்கிறான்
அணுனாலிகெயொளு = உள் நாக்கினில்
உபேந்திர, இந்திரனு = உபேந்திரன், இந்திரன் இருக்கின்றனர்.
தாளு = தொண்டைக்குள்
பர்ஜன்யாக்ய சூர்யனு = பர்ஜன்ய என்னும் சூரியன்
அர்த்தகர்ப்ப = அர்த்தகர்ப்ப என்னும் பரமாத்மன்
இஹ = இருக்கிறான்
ஆலியொளு = கண்ணுக்குள்
ஸுபாமன = இந்தப் பெயருள்ள தேவதை
வாமன = வாமனரூபி பரமாத்மன் இருக்கிறான்
பாலதொளு = நெற்றியில்
ஷிவ = ஈஸ்வரன்
கேஷவ = கேசவ மூர்த்தி, இருக்கிறான்
ஸுகபோலதொளகெ = தாடையில்
ரதீஷகாமனு = ரதிபதியான மன்மதன் இருக்கிறான்
அல்லெ பிரத்யும்ன = அதே இடத்தில் பிரத்யும்ன நாமக
பரமாத்மன் இருக்கிறான்.
நாக்கினில் அதன் அபிமானி தேவதைகளுடன் ஸ்ரீஹரி, எந்தெந்த பெயர்களில் வசிக்கிறான் என்பதை இங்கு சொல்கிறார். நாக்கினில் வருணன்
மத்ஸ்யரூபியான பரமாத்மன் இருக்கிறான். உள் நாக்கினில் இந்திரனுடன் உபேந்திர நாமக
பரமாத்மன் இருக்கிறான். தொண்டைக்குள் பர்ஜன்ய என்னும் சூரியனுடன், அர்த்தகர்ப்ப என்னும் பரமாத்மன் இருக்கிறான். கண்ணின் உள்பாகத்தில் சுபாமன
என்னும் தேவதையுடன் வாமனன் இருக்கிறான். நெற்றியில் ருத்ரதேவருடன், கேசவ நாமக பரமாத்மன் இருக்கிறான். தாடையில் ரதிபதியான மன்மதனுடன், ப்ரத்யும்ன நாமக பரமாத்மன் இருக்கிறான்.
No comments:
Post a Comment