ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Tuesday, June 9, 2020

#29 - பஞ்சதன்மாத்ர சந்தி

ஜீவஜீவர பே43 ஜட3ஜட3

ஜீவஜட3 ஜட3ஜீவரிந்த3லி

ஸ்ரீவரனு அத்யந்தபி4ன்ன விலக்‌ஷணனு லகுமி

மூவரிந்த3லி பதுமஜாண்ட3தி3

தா விலக்‌ஷணளெ னிசுதிப்பளு

ஸாவதி4ம ஷூன்யளெந்த3ரிதீர்வரனு ப4ஜிஸு ||29

 

ஜீவஜீவர = ஜீவ ஜீவருக்கும்

பேத = ஒருவருக்கொருவர் நடுவே வேறுபாடு

ஜடஜட = ஜட ஜடங்களுக்கும் வேறுபாடு

ஜீவஜட = ஜீவ ஜடர்களுக்கு நடுவே வேறுபாடு

ஜடஜீவரிந்தலி = ஜட, ஜீவர்களைவிட

ஸ்ரீவரனு = லட்சுமிக்கு கணவனான ஸ்ரீஹரி

அத்யந்த பின்ன = மிகுந்த வேறுபாடு கொண்டவன்

லட்சுமி = லட்சுமிதேவி

மூவரிந்தலி = ஜீவ, ஜட, பரமாத்மா என்னும் மூவரைவிட

பதுமஜாண்டதி = பிரம்மாண்டத்தில்

தா = தான்

விலக்‌ஷண எனிசுதிப்பளு = வேறுபட்டிருப்பவள்

சாவதிக = நற்குணங்களைப் பெற்றவள்

சம சூன்யளெந்து = சமம் இல்லாத; வேறுபாடு கொண்டவள்

அரிது = அறிந்து

ஈர்வரனு = லட்சுமி, நாராயணன் என்னும் இருவரையும்

பஜிஸு = ஸ்தோத்திரம் செய்.

 

ஜட சேதனர்கள் நிறைந்த பிரபஞ்சத்தில் வியாப்தனாக இருக்கிறான் என்று உபாசனை செய்யவேண்டும் என்று முந்தைய பத்யத்தில் சொல்லியிருந்தார். இப்போது, இந்த பிரபஞ்சத்தில் இருந்தாலும். அந்த ஜட சேதனர்களிலிருந்து வேறுபட்டவன்  லட்சுமி நாராயணன் என்று உபாசனை செய்தவாறு, அதற்கு முக்கிய சாதனமான பஞ்சபேதத்தை இங்கு விளக்குகிறார்.

 

ஜீவருக்கும் ஜீவருக்கும் இருக்கும் வேறுபாடு,

ஜடத்திற்கும் ஜடத்திற்கும் இருக்கும் வேறுபாடு,

ஜீவருக்கும், ஜடத்திற்கும் இருக்கும் வேறுபாடு,

ஜடத்திற்கும், பரமாத்மனுக்கும் இருக்கும் வேறுபாடு,

ஜீவனுக்கும் பரமாத்மனுக்கும் இருக்கும் வேறுபாடு

என்னும் பஞ்ச பேதங்களை அறியவேண்டும்.

 

ஜீவனுக்கும் ஜீவனுக்கும் வேறுபாடு இருக்கிறது என்பது நம் அனுபவத்திலேயே தெரிகிறது. உலகத்தில் இருக்கும் அனேக பிராணிகளில் சில சுகப்படுகின்றன; சில துக்கப்படுகின்றன. சிலர் ரோகிகள். சிலர் வலிமையானவர்கள். கழுதை, குதிரை ஆகியவை அனைத்தும் ஒன்றே என்று எப்படி சொல்வது? ஆகையால், ஜீவர்களில் வேறுபாடு உண்டு என்று சொல்லியே ஆகவேண்டும்.

 

ஜீவர் நித்யர். தேகம் அநித்யம். கடேபின்னேயதாகாஷ ஆகாஷஸ்யாத்யதாவுராஎன்னும் பாகவத 12ம் ஸ்கந்த வாக்கியத்தின்படி, பானை உடைந்தால், அதற்குள் இருக்கும் ஆகாயம், ஆகாயமாக நின்றுவிடுகிறது. அந்த ஆகாயம் அழிவதில்லை. தேகம் அழிந்தாலும், ஜீவன் அந்த தேகத்திலிருந்து விடுபட்டுவிடுகிறது. ஆகையாலேயே, ஜீவனுக்கும் ஜடத்திற்கும் வேறுபாடு உண்டு என்று அறியவேண்டும். ஜடத்திற்கும் ஜடத்திற்கும்கூட வேறுபாடு உண்டு. கழுதை, குதிரை, எறும்பு ஆகிய பிராணிகளின் தேகங்களுக்கும், மலை, ஆறு ஆகியவற்றிற்கும் ஒன்றுக்கொன்று வேறுபாடு இருப்பதால், ஜடத்திற்கும் ஜடத்திற்கும் வேறுபாட்டினை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். ஜீவனுக்கும் பரமாத்மனுக்கும் வேறுபாடு எப்படியெனில்:

 

ஜீவன் அஸ்வதந்த்ரன். பிறப்பு இறப்பு இருக்கிறது (அதாவது, ஜீவ நித்யம் ஆனாலும், சரீர சம்பந்தம் ஆவதே = பிறப்பு. அந்த சம்பந்தம் விடுபடுவதே = இறப்பு). இந்த துக்கங்களை அனுபவிக்க வேண்டியவர்கள். பரமாத்மன் ஸ்வதந்த்ரன். ஆனந்த பூர்ணன். எல்லையற்ற மகிமைகளைக் கொண்டவன். இந்த காரணங்களால், ஜீவ பரமாத்மனுக்கிடையே வேறுபாட்டினை ஒப்புக் கொள்ள வேண்டும்.

 

ஜடங்களில் தானாக செயல்களை செய்யும் சக்தி இல்லாததால், ஜடத்திற்கும் பரமாத்மனுக்கும் வேறுபாடு உள்ளது என்று அறியவேண்டும். ஜீவ ஜடாதிகளில் இல்லாத விலக்‌ஷண (தனித்துவ) தர்மம், பரமாத்மனிடம் இருப்பதால், அவனுக்கு விலக்‌ஷணன் என்று பெயர். லட்சுமிதேவி, பரமாத்மனைவிட, ஜடங்களைவிட, ஜீவர்களைவிட, விலக்‌ஷணனாகிருக்கிறார். பிரம்மாதிகளுக்கு சரீர வியாப்தி, சரீர நாசங்கள் உண்டு. ரமாதேவியர்களுக்கு அது இல்லை. பிரளய காலத்தில் கூட இருக்கிறார். ஆகையால், அவர் ஜீவ விலக்‌ஷணர் என்று சொல்ல வேண்டியதாயிற்று. ஜகத் ஸ்ருஷ்டிக்கு ஜடப்ரக்ருதி ரூபமாக இருந்தும், ஜடஸ்ருஷ்டிக்கு ஜடரூபத்தை ஸ்வீகரிப்பரே தவிர, தாம் ஜடர் அல்ல. ஏனெனில், பிரம்மாதிகளை ஸ்ருஷ்டிக்கும்போது சேதன ஸ்வரூபத்திலேயே இருக்கிறார். சேதனர்களுக்கு, க்ரியா சக்தி இருப்பதால், சாமர்த்தியம் உள்ளவர், ஜடசேதனாதி ரூபங்களை தரிக்க முடியும். வெறும் ஜடம் மட்டும் என்றைக்கும் சேதனர் ஆகமுடியாது. ஆகையால், லட்சுமிதேவியர், ஜடத்திலிருந்து வேறுபட்டவர் என்று சொல்ல வேண்டியதாயிற்று. பரமாத்மனைப் போல பிரளய காலத்திலும்கூட நாசம் இல்லாத சரீரம் கொண்டவரான காரணத்தினால், பரமாத்மனே லட்சுமிரூபம் என்று சொல்ல வேண்டுமெனில், பிரளய காலத்திலாவது பரமாத்மனின் அதீனராகி அஸ்வதந்த்ரராகவே இருக்கிறார். ஆகையால், பரமாத்மனிடமிருந்து வேறுபட்டவர். இந்த விலக்‌ஷணத்தையே தாசராயர் சொல்கிறார். ஸாவதிக ஸமஷூன்யளெந்துஎன்றால் பரமாத்மனைவிட குறைவான குணங்களைக் கொண்டவள். பிரம்மாதிகளைவிட உத்தமள். இவளுக்கு சமம் என்று யாரும் இல்லை. இப்படியாக லட்சுமி நாராயணர் லோக விலக்‌ஷணர் என்று உபாசனை செய்யவேண்டுமென்று அர்த்தம்.

***
 

No comments:

Post a Comment