நாரசிம்ஹ ஸ்வரூபதொ3ளகெ3 ஷ
ரீரனாமதி3 கரெஸுவனு ஹதி3
நாரு களெக3ளனுள்ள லிங்க3தி3 புருஷ நாமகனு |
தோருவனு அனிருத்த3தொ3ளு ஷா
ந்தீரமண நனிருத்த3 ரூபதி3
ப்ரேரிஸுவ ப்ரத்3யும்ன ஸ்தூ2ல கலேவரதொ3ளித்து3 ||26
நரசிம்ஹ = நரசிம்மரூபி பரமாத்மன்
ஸ்வரூபதொளகெ = ஜீவனின் ஸ்வரூப தேகத்தில்
ஷரீர நாமதி = ஸ்வரூப தேகம் என்னும் பெயரில்
அழைக்கப்படுகிறான்
ஹதினாரு கலெகளனுள்ள = 16 கலைகளைக் கொண்ட
லிங்கதி = லிங்க சரீரத்தில்
புருஷ நாமகனு = புருஷ நாமக ஸ்ரீஹரி
தோருவனு = இருக்கிறான்
அனிருத்தனொளு = அனிருத்த சரீரத்தில்
ஷாந்தீரமண = சாந்திபதியான
அனிருத்த ரூபதி = அனிருத்தன்
ப்ரேரிசுவ = நிலைத்திருக்கிறான்
ஸ்தூல கலேவரதொளு = ஸ்தூல தேகத்தில் இருந்து
ப்ரத்யும்ன = ப்ரத்யும்ன ரூபி
இத்து = இருந்து
இந்த சந்தியின் துவக்கத்தில் 10,11 பத்யங்களால் ஜீவனின் ஸ்வரூப தேகம் ஆகியவற்றில் இருக்கும் பகவத்ரூபங்களை
கூறியிருந்தார். ஆனால், அந்த பத்யங்களில் ஸ்வரூப தேகம்
முதலான தேகங்களின் உள்ளே இருந்து, ஜீவனின் செயல்களை செய்து
செய்விக்கும் ரூபங்களை மட்டும் சொல்லியிருப்பார். இந்த பத்யத்தில் சரீராகாரனாக
ஸ்வரூபாதி தேகங்களில் தெரியும் பகவத்ரூபங்களை சொல்கிறார்.
நரசிம்ம ரூபியான ஸ்ரீபரமாத்மன் ஜீவனின் ஸ்வரூபதேக
ரூபத்தில், ஸ்வரூப சரீர என்னும் பெயரில் அழைத்துக்கொண்டு இருக்கிறார். 16 கலைகளைக் கொண்ட லிங்க சரீராகாரானாகி புருஷ நாமக என்று அழைக்கப்படுகிறான்.
அனிருத்த தேகத்தில் சாந்தி-பதியான அனிருத்தன் இருக்கிறான். ஸ்தூல தேகத்தில்
ப்ரத்யும்ன அனிருத்தன் இருக்கிறான்.
மொத3லு த்வக்சர்மக3ளு மாம்ஸவு
ருதி4ர மேதா3 மஜ்ஜவஸ்தி2க3
ளத3ரொளகெ3 ஏகோனபஞ்சாஷன் மருத்க3ணவு |
நித4ன ஹீங்காராதி3 ஸாமக3
அத3ர நாமதி3 கரெஸுதொம்ப4
த்ததி4கனால்வத்தெனிப ரூபதி3 தா4துக3ளொளிப்ப ||27
காற்று, வெயில், குளிர் ஆகியவை படும் இந்திரியத்திற்கு த்வக் இந்திரியம் என்று பெயர். இது
தேகத்தின் தோலுக்கு மேல் இருக்கும் ஒரு தாது (mineral). இதற்குள், த்வக், மாம்ஸ, ருதிர (ரத்தம்), மேதஸ் (கொழுப்பு), மஜ்ஜா = மஜ்ஜைகள், அஸ்திகள்
இதரொளகெ = இந்த சப்த தாதுகளில்,
ஏகோனபஞ்சாஷன் மருத்கணவு = 49 மருத்கணர்கள், இருக்கிறார்கள்
நிதன ஹீங்காராதி = நிதனஹீங்கார முதலான
ஸாமகனு = சாமகானத்தால் பாடப்படுபவனான
அதர நாமதி = சப்த தாதுகளின் பெயர்களால்
கரெசுத = அழைக்கப்பட்டு
ஒம்பத்ததிக நால்வத்தெனிப ரூபதி = 49 ரூபங்களில்
தாதுகளொளு = 7 தாதுகளில்
இப்ப = இருக்கிறான்.
சப்த தாதுக்களில் இருக்கும் பகவத்ரூபங்களை
சொல்கிறார். நம் தேகத்தில், த்வக், சர்ம,
மாம்ஸ, ரத்த,
மேதஸ், மஜ்ஜை, அஸ்தி என்னும் 7 தாதுக்கள் இருக்கின்றன. இந்த 7ல் ஒவ்வொன்றிலும் ஏழேழு
மருத்கணங்கள் என, மொத்தம் 49 மருத்கணங்கள் இருக்கின்றனர். இவர்களில் சாமவேதத்தில் புகழப்படுபவனான, மற்றும் சாம சொல்லால் அழைக்கப்படுபவனான ஸ்ரீஹரி, நிதன,
ஹிங்கார, ப்ரஸ்தாவ, ப்ரதீஹார, உத்கீத, வஷட்கார, ஆதிநாம என்னும் 7 ரூபங்களால், ஏழேழு மருத்கணங்களில் ஒன்றாக, 7 தாதுகளில் 7 ரூபங்கள் உள்ளன. இதன் விளக்கம் ஆத்யாத்ம மாலா கிரந்தத்தில் இருக்கிறது.
த்வசப்ரஸ்தாவ நாமாச வாசுதேவஸ்ததைவச |
ராமரூபீ ஹரிஸ்தத்ர வர்ததே தன்னியாமக: |
சர்மணி ப்ரதிஹாராக்யோ ஹ்யனிருத்தஸ்ததைவச |
லக்ஷ்மீபதிஸ்து தத்ரைவ வர்ததே தன்னியாமக: |
மாம்ஸேஷூட்கீத நாமாச நாராயண ஸுரூபர்வா |
ரக்தேனிதன நாமாச ததா சங்கர்ஷணாபித: |
ஷாந்த ஸ்ம்விஸ்ச ததைவ வர்ததே தன்னியாமக: |
மேதஸ்யபி வஷட்கார நாமா ஷட்குண ஏவச |
மஜ்ஜாயமாதிவாராஹ ரூபி ஸாராத்ம ரூபத்ருக் |
அஸ்திஷூபத்ரவோனாம ந்ருஸிம்ஹோ ஹம்ஸ ஏவச ||
இதன் பொருள்:
* த்வக்கில் ப்ரஸ்தாவ நாமக ஸாம
வாச்யன்,
வாசுதேவரூபி இருக்கிறான். அங்கு ராமரூபியான பரமாத்மன், நியாமகனாக இருக்கிறான்.
* சர்மத்தில் ப்ரதீஹார நாமக மற்றும்
அனிருத்தன் இருக்கிறான். லட்சுமிபதி அங்கு நியாமகனாக இருக்கிறார்.
* மாம்ஸத்தில் உத்கீத நாமகன்
இருக்கிறான். அங்கு நாராயண ரூபி நியாமகனாக இருக்கிறார்
* ரத்தத்தில் நிதன நாமகனும், சங்கர்ஷணரூபியும் இருக்கின்றனர். அங்கே ஷாந்த சம்வித் ரூபி நியாமகனாக
இருக்கிறார்.
* மேதஸ்ஸில் வஷட்கார நாமகன், ஷட்குண ரூபியும் இருக்கின்றனர்.
* மஜ்ஜையில் ஆதிவராஹ ரூபி சாராத்மன்
இருக்கிறான்.
* அஸ்திகளில் உபத்ரவ நாமகனும், நரசிம்ஹ, ஹம்ஸ இந்த மூர்த்திகள் இருக்கின்றனர்.
இதே அர்த்தத்தையே இந்த பத்யமும் சொல்கிறது.
ஸப்ததா4துக3 ளொளஹொரகெ3 ஸ
ந்தப்த லோஹக3தக்னியந்த3தி3
ஸப்த ஸாமக3னிப்பனன்னமயாதி கோ1ஷதொ3ளு |
லிப்தனாகதெ3 தத்ததா3ஹ்வய
க்லுப்த போ4க3வ கொடுத3 ஸ்வப்ன ஸு
ஷுப்தி ஜாக்ரதெயீவ தைஜஸ ப்ராக்ஞ விஷ்வாக்2ய ||28
சப்ததாதுகள = மேற்சொன்ன 7 தாதுகளில்
ஹொளஹொரகெ = உள்ளேயும் வெளியேயும்
அன்னமயாதி கோஷகொளு = இருக்கும் அன்னமய, ப்ராணமய முதலான கோஷங்களில்
லிப்தனாகதெ = நிர்லிப்தனாக (அதற்கு சம்பந்தப்படாமல்)
சந்தப்த லோஹகதாக்னியந்ததி = நன்றாக காய்ச்சிய
இரும்பில் இருக்கும் நெருப்பைப் போல
ஸப்தஸாமக = நிதன, ஹீங்காராதி மேற்சொன்ன 7 ஸாம ஷப்த வாச்யன்
தததாஹ்வய = அந்தந்த பெயர்களைக் கொண்டு
க்லுப்த போகவ கொடுத = சரியான போகங்களைக் கொடுத்தவாறு
இப்பனு = இருக்கிறான்
அல்லி தைஜஸ ப்ராக்ஞ விஷ்வாக்ய = அங்கு, தைஜஸ,
ப்ராக்ஞ, விஷ்வ என்னும் மூன்று ரூபங்கள் இருந்து
ஸ்வப்ன சுஷுப்தி ஜாக்ரதியீவ = ஸ்வப்ன, சுஷுப்தி, ஜாக்ரதெ என்னும் மூன்று நிலைகளை
ஈவ = கொடுக்கிறார்.
மேற்சொன்ன 7 தாதுகளுக்குள் அன்னமய, ப்ராணமய, மனோமய, விக்ஞானமய, ஆனந்தமய என்னும் 5 கோஷங்கள் உள்ளன. இந்த கோஷங்களைக் கொண்ட அந்த 7 தாதுகளில் நிதனாதி 7 ரூபங்கள் உள்ளன.
ஸப்ததாது ஷுத்வாதந்த: க்ரமாத்கோஷா: ப்ரதிஷ்டிதா:
தன்னாமகானிருத்தாதி ரூபாண்யேஷு விசிந்தயேத்
என்னும் அனிருத்தாதி 5 ரூபங்கள் அந்தந்த கோஷங்களின் பெயர்களால், அந்த கோஷங்களில் இருக்கிறது. ஆனாலும், இந்த ரூபங்கள் அனைத்தும், நன்றாக சிவப்பாக காய்ச்சிய
இரும்பில் இருக்கும் நெருப்பைப்போல நிர்லிப்தமாகவே இருக்கின்றன. அந்தந்த
ஜீவர்களின் வினைப்பலன்களை அனுசரித்து அவரவர்களுக்கு இருக்கும் போகங்களை
கொடுக்கிறான். இது மட்டுமல்லாமல், விஷ்வ, தைஜஸ,
ப்ராக்ஞ, என்னும் மூன்று ரூபங்களில் இருந்துகொண்டு, ஜாக்ரதெ, ஸ்வப்ன, சுஷுப்தி ஆகிய மூன்று நிலைகளைக் கொடுக்கிறார்.
தீவிகொண்டி3ஹவல்லி மஜ்ஜ க1
லேவரதி3 அங்கு3லிய பர்வத3
டா2வினலி முன்னூரு அரவத்தெனிப த்ரிஸ்த2ளதி3 |
ஸாவிரத3 எம்பத்து ரூபதி
கோவித3ரு பேளுவரு தே3ஹதி3
தே3வதெக3ளொடகூ3டி3 க்ரீடி3ஸுவனு ரமாரமண ||29
களேவரதலி = இந்த சரீரத்தில்
அங்குலிய = கை, கால்,
விரல்களின்
பர்வத = மூட்டுகளில்
டாவினலு = அந்த இடங்களில்
யக்ஞ = யக்ஞ என்னும் தாது
தீவிகொண்டிஹவு = இடம் பெற்று, அங்கு இருக்கிறது
அல்லி = அந்த இடங்களில்
முன்னூர அரவத்தெனிப = 360 எண்ணிக்கையில், நாட்களுக்கு அபிமானிகள் எனப்படும்
த்ரிஸ்தளதி = மூன்று இடங்களில்
ஸாவிரத எம்பத்து ரூபவ = 1080 ரூபங்கள் இருப்பதாக
கோவிதரு = ஞானிகள்
பேளுவரு = சொல்வார்கள்
தேஹதி = இந்த சரீரத்தில்
தேவதெகளொளகூடி = 360 நாட்களின் அபிமானி தேவதைகளுடன் மற்றும் தத்வாபிமானி தேவதைகளுடன் சேர்ந்து
ரமாரமண = லட்சுமிபதியான ஸ்ரீஹரி
க்ரீடிசுவனு = நிலைத்திருக்கிறான் (செயல்களை
செய்கிறான்).
பாதஹஸ்தாங்குலி ஸ்தானியானி பர்வாணி விக்ரஹ |
தத்பர்வஸு பரிஞானாத்பர்வ நாமானிவைஹரே |
அஷீத்யுத்தர ஸாஹஸ்ர ரூபாண்யே தானிஸர்வஷ: |
யோவிஜானாதி தஸ்யைவ நித்யமாயுர் விவர்த்ததே ||
இந்த சரீரத்தின் கை, கால் விரல்களின் மூட்டுகளில் பர்வ நாமக பரமாத்மனின் 1080 ரூபங்களை யார் அறிகிறாரோ, அவருக்கு ஆயுள் அதிகரிக்கிறது
என்னும் மானஸ ஸ்ம்ருதியின் வாக்கியத்தையே தாசராயர் இங்கு விளக்கியிருக்கிறார்.
கால், கை விரல்களின் மூட்டுகளில் மஜ்ஜ
என்னும் தாது இருக்கிறது. பர்வ என்னும் பெயர் கொண்ட பௌர்ணமி, அமாவாசைகள் ஒரு ஆண்டிற்கு 24 வருகின்றன. ஒவ்வொரு
பர்வத்திற்கும் 15 நாட்களை பெருக்கினால், 15*24 = 360 வருகிறது. இவற்றில்
பர்வ நாமகனாக பரமாத்மன், பர்வாபிமானி தேவதைகளால் கூடியவாறு
வசிக்கிறான். விரல்களின் மூட்டுகள், ஒவ்வொரு விரல்களிலும் மூன்று
இடங்கள் இருக்கின்றன. ஒரு இடத்திற்கு 360 என்றால், 360*3=1080 ஆகிறது. இவ்வளவு ரூபங்களால் பர்வ நாமகனாக ஸ்ரீலட்சுமிபதி அந்தந்த தத்வாபிமானி
தேவதைகளுடன் சேர்ந்து அங்கு நிலைத்து, செயல்களை செய்கிறான்.
கீ1ட1 பேஷஸ்கார னெனவிலி
கீ1ட1 பா4வவ தொரெது3 த1த்வத்
கே2டரூபவனைதி3 ஆடு3வ தெரதி3 ப4கு3தி1யலி |
கை1ட1பா4ரிய த்4யானதி3ந்த3 ப4
வாடவியனதி ஷீக்4ரதி3ந்த3லி
தா3டி ஸாரூப்யவனு ஐது3வரல்ப ஜீவிக3ளு ||30
கீட = பச்சை வண்ணத்தில், 1 அங்குல நீளத்தில் இருக்கும் ஒரு புழு
பேஷஸ்காரி = இன்னொரு புழு
நெனவலி = ஞாபகத்துடன்
கீடபாவவ = புழுவின் ரூபத்தை
தொரெது = விட்டு
தத்வத் = இதன் நினைவில் இருக்கும்
கேடரூபவன்னு = அந்தரிக்ஷத்திற்கு
தாவிக்கொண்டிருப்பதால் கேட என்னும் பெயருள்ள புழுவின் ரூபத்தை
யைதி = பெற்று
ஆடுவ தெரதி = பாய்ந்து ஓடுவதைப் போல
பகுதியலி = பக்தியில்
கைடபாரிய = கைடப நாமக தைத்யனைக் கொன்ற ஸ்ரீபரமாத்மன்
த்யானதிந்தெ = தியானத்திலேயே
பவாடவியனு = சம்சாரம் என்னும் காடினை
அதி ஷீக்ரதிந்தலி = மிகவும் விரைவாக
தாடி = தாண்டி
அல்பஜீவரு = ரமா பிரம்மாதிகளைவிட நீசரான பிற
முக்தியோக்ய ஜீவர்கள் கூட
சாரூப்யவனு = சாரூப்ய பதவியை
ஐதுவரு = பெறுகின்றனர்.
மனதினை, அனைத்து விதங்களிலும் பகவந்தனின்
பாதாரவிந்தங்களில் வைத்து, தியானம் செய்துகொண்டிருந்தால், பரமாத்மனின் ஸாரூப்ய பதவியை அடைவர் என்கிறார்.
குளவிகள் சுவற்றில் மண்ணிலான வீடு கட்டி, அதில் உள் நுழைவதற்காக ஒரு சிறிய வழியையும் வைத்து, அதில், பச்சை நிறத்து புழுவினைக் கொண்டு வந்து வைத்து, அந்த புழு வெளியில் செல்லமுடியாமல், அந்த வழியை சிறியதாக்கி தான்
அதற்கு உணவினைக் கொடுத்து அந்த புழுவை காப்பாற்றுகிறது.
பாகவத 11ம் ஸ்கந்த 9ம் அத்தியாயம் 23ம் ஸ்லோகத்தில்:
கீட: பேஷஸ்காரம் த்யாயன் கட்யாந்தேன ப்ரவேஷித: |
யாதிதத்ஸாம்யதாம் ராஜன் பூர்வரூப மஸந்த்யஜன் ||
இதேபோல, 7ம் ஸ்கந்தம் 1ம் அத்தியாயத்தில்:
கீட: பேஷஸ்க்ருதாருத்ஹ்ட: குட்டேயாந்த மனஸ்மரன் |
ஸ்ம்ரம்ப பயயோகேன விந்ததெ தத்ஸ்வரூபதாம் ||
குளவியால், சுவற்றில் இருக்கும் கூட்டில்
வைக்கப்பட்ட அந்த புழு, இரவும் பகலுமாக வெளியில் போய்வந்து
கொண்டிருக்கும் அந்த குளவியின் வருகையை எதிர்பார்த்து அதையே சிந்தித்துக்
கொண்டிருக்கிறது. தன்னை இழுத்துவந்து இப்படி சிறையில் வைத்த அந்த குளவியின் மேல்
சிறிதளவு கோபமோ, த்வேஷமோ, பயமோ இருந்தால்கூட, தனக்கு உணவினைக் கொடுத்து
காப்பாற்றுவதால், நட்பு உணர்வுடன், அந்த குளவியையே நினைத்தவாறு இருப்பதால், அடுத்து அந்த புழுவிற்கு குளவி பிறவியே வருகிறது. அதாவது, இந்த புழுவிற்கும், இறக்கைகள் வந்து இதுவும்
குளவியாகிவிடுகிறது.
யத்ர யத்ர மனோதேஹி தாரயேத்ஸகலம் தியா |
ஸ்னேஹாத்வேஷாத்பயாத்வாபி யாதி தத்தத் ஸ்வரூபதாம் ||
என்னும் ஆதாரத்தின்படி நட்பினாலோ, த்வேஷத்தினாலோ, பயத்தினாலோ, எப்போதும் யாரை மனதில் நினைத்திருக்கிறோமோ, அந்தந்த ரூபத்தையே பெறுகிறோம் என்று பொருள். ஆகையால், பகவந்தனின் ஏதோ ஒரு ரூபத்தை மனதில் வைத்து அதைப்பற்றியே தியானம் செய்து சிந்தித்தால், பரமாத்மனின் ஸாரூப்யம் நமக்குக் கிடைக்கிறது. அப்படியெனில், த்வேஷிகளான தமோ யோக்யர்கள்கூட, த்வேஷத்தினால் எப்போதும்
பரமாத்மனையே சிந்தித்துக் கொண்டிருந்தால், சாரூப்யம் கிடைக்குமோ என்று கேள்வி எழலாம்.
ஏனெனில், பகவந்தனிடம் த்வேஷம் செய்பவர்கள், கோரமான தமஸ்ஸை அடைகிறார்கள்
கர்மணா மனஸா வாசா யோத்விஷ்யாத்விஷ்ணு மத்யயம் |
மஜ்ஜந்தி பிதரச்தஸ்ய நரகே ஷாஷ்வதி: ஸமா ||
கர்மத்தினாலோ, மனதாலோ, வாக்கினாலோ யார் பரமாத்மனில் த்வேஷம் செய்கிறாரோ, அவர்களின் பித்ருகள் அனைவரும் நிரந்தரமான நரகத்தில் வீழ்கிறார்கள் என்று இருப்பதால், த்வேஷிகளுக்கு ஸாரூப்யாதி முக்தி என்றும் கிடைப்பதில்லை. அப்படியெனில், மேற்சொன்ன உவமை சரியில்லையா என்று கேட்டால்,
ஸந்த்யல்பாத்யல்பவித்வேஷெ போஜனம் தாஸ்யதீதிது |
ஸ்னேஹபாஹுல்யத: கீட: பேஷஸ்காரி ஸமோபவேத் |
த்வேஷே ஸர்வாத்மனானஷ்டே ஸ்னேஹே சைவவிவர்த்திதே |
ஸரூபதா ததைவஸ்யாத்கீடஸ்யைவம் ஹரேரபி ||
நஹிபேஷஸ்க்ருத: கிஞ்சித் பலதாத்ருத்வ மிஷ்யதே |
ஸ்வாதந்த்ர்யாத்வித்வஷாம்ஹி கீஷவோனஸுக ப்ரதயிதி ||
என்னும் பாகவத 11ம் ஸ்கந்தத்தில் உள்ள இந்த ஸ்லோகங்களின் அர்த்தம் இதுவே:
தன்னை பலவந்தமாக இழுத்து வந்து, மண்ணின் கூட்டில் வைத்து சிறையில் இட்டிருப்பதால், குளவியின் மீது புழுவிற்கு சிறிதளவு கோபம் இருந்தாலும், தனக்கு உணவு கொடுத்து காப்பாற்றி வருவதால், அதன் மேல் நட்பு அதிகமாகிறது. முதலில் சில நாட்கள் குளவியின் மேல் த்வேஷம்
இருந்தாலும், நாளடைவில் அந்த த்வேஷம் மறைந்து, நட்புணர்வு உருவாகி, எப்போதும் குளவியைப் பற்றியே புழு சிந்தித்திருப்பதால், அதுவும் குளவியைப் போலவே ஆகிறது.
இதைப்போல, ஸ்ரீஹரியிடம் முழுமையான பக்தியுடன்
எப்போதும் அவரைப்பற்றியே சிந்தித்திருப்பதால் பரமாத்மனின் ஸாரூப்யம் கிடைக்கிறது.
புழுவிற்கு எவ்வித பலன்களைக் கொடுக்கும் சக்தியும் குளவிக்கு இல்லை. பரமாத்மன், ஸ்வதந்த்ரமானவன் ஆகையால், த்வேஷிகளுக்கு சுக பலன்களைக்
கொடுப்பதில்லை. பக்தர்களுக்கு மட்டுமே சுக பலன்களைக் கொடுக்கிறான். அப்படியெனில் ‘ஸ்னேஹாத்வேஷாத்பயாத்வாபி’ என்று சொல்லும் ஆதாரத்தின் நிலை
என்ன என்று கேட்டால், ஜீவன் யோக்யனாக இருந்து, தைத்ய ஆவேசத்தினால் சில காலம்
மட்டும் த்வேஷம் செய்துகொண்டிருந்து, மறுபடி திருந்திவிட்டால், சிசுபாலன் ஆகியோருக்கு கிடைத்ததைப் போல சத்கதியே கிடைக்கிறது.
ஸ்வபாவத்திலேயே த்வேஷிகளுக்கு பரமாத்மனில் த்வேஷம்
இருந்தாலும், எந்நேரமும் அவர்களுக்கு பரமாத்மனின் சிந்தனை இருப்பதில்லை. ஆகையாலேயே, பாகவத 7ம் ஸ்கந்தத்தில்
கோப்ய:காமாத்பயாத் கம்ஸோ த்வேஷாச்சைத்யாத யோன்ருபா: |
ஸம்பந்தாத்வ்ருஷ்ணய: ஸ்னேஹாத் யூயம் பக்த்யாவயம் விபோ
|
கதமோபி நவேனஸ்ய பஞ்சானாம் பூருஷம்ப்ரதி ||
கோபிகா ஸ்த்ரியர்கள், காமத்துடனான பக்தியை,
கம்ஸன் பயத்துடனான பக்தியை,
சைத்யாதிகள் த்வேஷத்துடனும்,
வ்ருஷ்ணிகன் சம்பந்தத்துடனும்,
நீங்கள் (பாண்டவர்கள்) நட்புடனும்
பக்தியால் நாமும் பக்தி செய்கிறோம்.
வேனாசுரன் வெறும் த்வேஷத்தை மட்டுமே செய்கிறான்.
ஆகையாலேயே, வேனாசுரனுக்கு சத்கதி கிடைக்கவில்லை. சிசுபாலன் யோகஜீவன். அவனில் இருந்த
தைத்யனின் சகவாசத்தால் கிருஷ்ணனிடம் த்வேஷம் செய்தான். பின்னர் அது குறைந்து, பக்தியே அதிகமாயிற்று. ஆகையாலேயே, அவன் பரமாத்மனை அடைந்தான் என்று
நாரதர்,
தர்மராஜனுக்கு சொல்வதாக மேற்கண்ட ஸ்லோகங்களின் அர்த்தம் சொல்கிறது.
No comments:
Post a Comment