ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Wednesday, June 24, 2020

16-20 ஜீவப்ரகரண சந்தி

மஹியொளகெ3 ஸுக்‌ஷேத்ர தீர்த்த2தி3

து1ஹின வருஷ வந்தகாலதி3

3ஹிக தை3ஷிக காலிகத்ரய த4ர்மகர்மக3

த்3ருஹிண மொத3லா த3மரரெல்லரு

வஹிஸி கு3ணகளனனுரிஸி

ந்னிஹிதராகி3த் தெ3ல்லரொளு மாடு3வரு வ்யாபார ||16

 

மஹியொளகெ = பூமியின் பரத கண்டத்தில்

ஸுக்‌ஷேத்ர தீர்த்ததி = அயோத்யா, மதுராதி க்‌ஷேத்திரங்கள், கங்கை முதலான தீர்த்தங்கள் இவற்றில்

துஹின = தனுர், மாக மாதம் முதலான குளிர்காலத்திலும்

வர்ஷ = வர்ஷருது, சரத்ருது கூடிய பருவ மழைக் காலங்களான சாதுர்மாத காலத்திலும்

தஹிக = தேக சம்பந்தமான

தேஷிக = தேச சம்பந்தமான

காலிக = கால சம்பந்தமான

த்ரய = மூன்று வகையான

தர்மகர்மகள = தான, சந்தியாவந்தனாதி நித்ய நைமித்திக கர்மங்கள் இவற்றை

த்ருஹிண மொதலாத = பிரம்ம தேவர் முதலான

அமரரெல்லரு = தத்வாபிமானி தேவதைகள் அனைவரும்

வஹிஸி = ஜீவன் செய்யவேண்டியற்றை தாமே செய்து

குணகளனு = ஸத்வாதி குணங்களை

அனுஸரிஸி = அனுசரித்து (அதற்கேற்ப)

எல்லரொளு = அனைவரிலும்

ஸன்னிஹிதராகித்து = நிலைத்திருந்து

வ்யாபார = செயல்களை

மாடுவரு = செய்வார்கள்

 

முந்தைய பத்யத்தில், தேவதைகள் புண்ய கர்மங்களயும், தைத்யர்கள் பாவ கர்மங்களையும் செய்விக்கிறார்கள் என்றார். அதில் தேவதைகள் செய்விக்கும் புண்ய கர்மங்களை இங்கு விவரிக்கிறார்.

 

* இந்த பரத கண்டத்தில் இருக்கும் ஸ்ரீரங்க, திருப்பதி, பண்டரிபுர, அயோத்யா, மதுரா முதலான புண்ணிய க்‌ஷேத்திரங்கள்,

* கங்கை, கோதாவரி முதலான தீர்த்தங்கள்,

* இவற்றில் செய்யவேண்டிய, தேக சம்பந்தமான தலைமுடி எடுப்பது,

* தேச சம்பந்தமான தீர்த்த ஸ்ரார்த்தாதிகள் ஆகியவற்றை செய்வது,

* சாதுர்மாஸ, மாகாதி மாதங்களில், சைத்ர வைசாகாதி வசந்த ருதுவில், இத்தகைய கால சம்பந்த ஸ்னானாதிகளை செய்வது

* மூன்றுவிதமான தர்ம, அதாவது, க்‌ஷேத்திரங்களில் சத்திரம் கட்டுவது, குளம் வெட்டுவது, அன்னதானம் செய்வது, புராணங்களைக் கேட்பது - ஆகிய தர்மங்களை செய்வது

* நித்ய நைமித்திக என்னும் இருவித சந்தியாவந்தன, ஸ்ரார்த்தாதிகள் ஆகியவை நித்யகர்மங்கள்;

* விஷ்ணு பஞ்சக ஆகியவை நைமித்திக கர்மங்கள் - இத்தகைய தர்ம கர்மங்களை

 

பிரம்மாதி தேவதைகள் அனைவரும் சேர்ந்து ஜீவனின் பாரத்தை தாமே சுமந்து, அவரவர்களின் யோக்யதையை அனுசரித்து, அவர்களில் இருந்து செய்விக்கிறார்கள்.

 

கேஷ ஸாஸிரவித4 விபா43

கை3லெனிதனிதி1ஸுஷும்னவு

ஆ ஷிராந்த1தி3 வ்யாபிஸிஹுதீ3தே3ஹ மத்4யத3லி |

ஸுஷும்னகெ1 வஜ்ரிகா1ர்ய ப்ர

காஷினி வைத்3யுதக3ளிஹவு ப்ர

தே3ஷத3லி ப1ஸ்சிமகெ உத்தர பூர்வ த3க்‌ஷிணகெ ||17

 

கேஷ = தலைமுடியை

ஸாஸிரவித = ஆயிரம் பாகங்களாக

கைசலு = செய்தால்

யெனிது = எவ்வளவு வருமோ

அனிதிஹ = அந்த அளவிற்கு

சுஷும்னா = சுஷும்னா நாடி

ஆஷிராந்ததி = மூலஸ்தானம் முதல் தலை வரைக்கும்

ஈ தேஹ மத்யதலி = இந்த தேகத்தின் நடுவில்

வியாபிஸிஹது = வியாபித்துக் கொண்டிருக்கிறது

ஆஸுஷும்னாகெ = அந்த சுஷும்னா நாடிகளுக்கு

வஜ்ரிகா, ஆர்ய, ப்ரகாஷிணி, வைதுதிகளு = இவ்வாறான 4 பெயர்கள்

ப்ரதேஷதலி = என்று 4 இடங்களில்

இஹவு = இருக்கிறது

 

தேகத்தின் நடுவில் இருக்கும் சுஷும்னா நாடியின் லட்சணங்களை சொல்கிறார். ஒரு தலைமுடியை ஆயிரம் பாகமாக பிரித்து, அதில் ஒரு பாகம் எவ்வளவு இருக்குமோ, அவ்வளவு சிறியதாக - மூலஸ்தானம் முதல் தலையின் பிரம்மரந்திரம் வரைக்கும் நடுவில் சுஷும்னா நாடி இருக்கிறது. இந்த நாடி, 5 வகைகளாக இருக்கிறது. மேலும் 5 பெயர்களில் அழைக்கப்படுகிறது.

 

நடுவில் சுஷும்னா நாடி இருக்க,

* மேற்கு - பின் பக்கத்திற்கு வஜ்ரகாய என்றும்,

* வடக்கு - இடது பாகத்திற்கு ஆர்ய என்றும்,

* கிழக்கு - முன் பாகத்திற்கு ப்ரகாஷினி என்றும்,

* தெற்கு - வலது பாகத்திற்கு வைத்யுத என்றும் பெயர்கள் உண்டு.

 

இந்த விஷயத்தை 8ம் சந்தி, 3ம் பத்யத்தில் விவரமாக பார்த்திருக்கிறோம். இந்த ஒரே சுஷும்னா நாடியே, 5 பாகங்களாக, 5 பெயர்களில் இருக்கிறது என்று தெரிவிக்கிறார். 

 

ஆ நளினப4வ நாடி3யொளகெ3 த்ரி

கோசக்ரவு இப்புத3ல்லி க்ரு

ஷானுமண்ட3ல மத்4யதொ3ளு சங்கருஷணாஹ்வயனு |

ஹீன பாபாத்மக புருஷன த3

ஹானகை3ஸுத தி3னதி3னதி3 வி

க்ஞானமய ஸ்ரீவாஸுதேவன ஐதி3ஸுவ கருணி ||18

 

ஆ நலின பவனாடியொளகெ = சுஷும்னா என்று பெயர் பெற்ற பிரம்ம நாடியின் உள்ளே (இதய மத்யத்தில்)

த்ரிகோண சக்ரவு இப்பது = முக்கோண மண்டலம் இருக்கிறது

அல்லி = அங்கு

க்ருஷானு மண்டல மத்யதலி = அக்னி மண்டலத்தின் நடுவில்

சங்கருஷணாஹ்வயனு = சங்கர்ஷண நாமக பரமாத்மன்

ஹீன = நீசனான

பாபாத்மக புருஷன = குரு மந்திரத்தில் சொல்லிய விதமாக பிரம்மஹத்யா ஷிரஸ்கஞ்சஎன்னும் லட்சணத்தினால் கூடிய, பாப ஸ்வரூபனான பாபபுருஷனை

தினதினதி = தினந்தோறும்

ஹானிகைஸுத = பஸ்மம் செய்தவாறு

கருணீ = கருணாளுவான ஸ்ரீஹரி

வாஸுதேவனு = வாசுதேவ ரூபத்தினால்

ஞானமய = பவித்ரஸ்வரூப உள்ளவனாக

யைதிஸுவ = செய்விக்கிறான்

 

இதன் அர்த்தத்தை 8ம் ஸந்தியின் வியாக்யானத்தில் விரிவாக பார்த்திருக்கிறோம்.

 

த்ரிகோணமண்டல மத்யஸ்தோ ரக்தவர்ணோ அக்னிபீஜவாச்ய:

அக்ன்யந்தர்யாமி சங்கர்ஷணோ பகவான் மச்சரீரஸ்தம் பாபபுருஷம் அக்னினா நிர்தஹது ||

 

என்னும் மந்திரத்தின் அர்த்தத்தையே இங்கு சொல்லியிருக்கிறார். நடுவில் இருக்கும் சுஷும்னா நாடிக்கு பிரம்ம நாடி என்று பெயர். அந்த நாடியை ஒட்டி, இதயாகாஷத்தில், முக்கோண மண்டலத்தில், அக்னி என்னும் சொல்லில் அழைக்கப்படுபவனான, அக்னி அந்தர்கத சங்கர்ஷணன் எப்போதும் வசித்தவாறு, பாப புருஷனை தகிக்கிறார். அவன் பிரம்ம வரத்தினால், இரவில் மறுபடி உயிர் பெற்று வந்துவிடுகிறான். மந்திரங்களை ஜெபிப்பவர்களின் இதயங்களில் இருந்து, மறுபடி அதே பாபபுருஷனை எரிக்கிறார். அதன்பின், தலையில் இருக்கும் வாசுதேவ மூர்த்தி, தேகத்தை, பவித்ரமாக ஆக்கி ஞானப்ரதன் ஆக்குகிறான்.

 

மத்4ய நாடி3ய மத்4யத3லி ஹ்ரு

த்பத்3மமூலதி3 மூலப1தி1 பத3

பத்3ம மூலத3லிப்ப பவனன பாத3மூலத3லி |

பொந்தி3கொண்டி3ஹ ஜீவ லிங்க3னி

ருத்த4 தே3ஹ விஸிஷ்டனாகி3

பர்த்தி3 மொத3லாதமரரெல்லரு காது3கொண்டி3ஹரு ||19

 

மத்ய நாடிய மத்யதலி = சுஷும்னா நாடியின் நடுவில் இருக்கும்

ஹ்ருத்பத்மமூலதலி = இதய தாமரையின் அடியில் இருக்கும்

மூலபதி = மூலேஷ நாமக பரமாத்மனின்

பதபத்ம மூலதலி = பாத கமலத்தின் மூலத்தில்

இப்ப = இருக்கிறான்

பவனன = வாசுதேவனின்

பாதமூலதலி = கால் விரல் நுனியில்

ஜீவ = ஜீவன்

லிங்கனிருத்த தேஹவிசிஷ்டனாகி = லிங்க தேகம், அனிருத்த தேகம் இவற்றுடன்

பொந்திகொண்டிஹ = சேர்ந்திருக்கிறான்

கபர்த்திமொதலாத = ருத்ரதேவரே முதலான

அமரரெல்லரு = தேவதைகள் அனைவரும்

காதுகொண்டிஹரு = தாமரையின் 8 தளங்களில் வசிக்கின்றனர்.

 

தேகத்தின் நடுவில் ஓடும் சுஷும்னா நாடியில் 8 தள தாமரை ஒன்று இருக்கிறது. அந்த தாமரையில், அக்ரேஷ, மூலேஷ, பிராதேஷ என்னும் மூன்று மூர்த்திகள், கமலத்தின் மேல் தளங்களிலும், அடிப்பாகத்திலும் இருக்கிறார்கள். அவற்றில், கீழ் பாகத்தில் மூலேஷ நாமக பரமாத்மனின் பாத மூலத்தில் பிராணதேவர் இருக்கிறார். மேற்சொன்ன மூன்று மூர்த்திகளையும் பார்த்தவாறு, கை கூப்பியவாறு, பிராண தேவர் நின்றிருக்கிறார். அவரின் பாதங்களை பிடித்தவாறு, லிங்க சரீர, அனிருத்த சரீரங்களால் கூடிய ஜீவன் இருக்கிறான். ருத்ரதேவரே முதலான அஷ்ட திக் பாலகர்கள் 8 தளங்களில் பகவத் சேவைகளை செய்வதற்கு காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ஆதாரமான வாக்கியம் இதுவே:

 

விஷ்ணுர்மூலேஷ இதிது விக்ஞானாத்மீதி தம்விது: |

தஸ்மாதக்ரேஷ மூலேஷ ப்ராதேஷ இதினாமகா: |

மூர்த்தய: ஸந்திஹ்ருத்பத்மேத்ரய ஆனந்த ரூபிண: |

வர்ததே மூலேஷபாத ஸன்னிதௌ ப்ராண நாமக: |

பத்தாஞ்சலி: ஸ்வரூபாணாம் த்ரயாணாம் பரத: ஸதா |

பூர்வாபிமுக தஸ்சைவ வர்ததி ஜீவ ஏவது |

முக்யப்ராண பதாம்போஜ சன்னிதௌ தத்வதேவஹி ||

 

என்னும் முக்தி தத்வ வாக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள விஷயத்தையே தாசராயர் இங்கு சொல்லியிருக்கிறார்.

 

நா மத்4யத3லிப்ப ஹ்ருத்கீ1

லாலஜதொ3ளிப்பஷ்டத3தி3 கு

லால சக்ரத3 தெரதி3 சரிஸுத ஹம்ஸ நாமகனு |

கால காலக3ளல்லி எண்தெ3ஸெ

பாலகர கைஸேவெ கொ3ளுத க்ரு

பாளு அவரபி4லாஷெக3ள பூ1ரயிஸி கொடு3திப்ப ||20

 

நாள மத்யதலிப்ப = சுஷும்னா நாடியின் நடுவில் சேர்ந்திருக்கும்

ஹ்ருத்கீலாலஜதொளு = இதய கமலத்தில்

இப்ப = இருக்கிறான்

அஷ்டதளதி = 8 தள கமலத்தில்

குலால சக்ரத தெரதி = பானை செய்யும் குயவனின் சக்கரத்தைப் போல

யெண் தெஸெ பாலகர = 8 திக் பாலகர்களின்

கைஸேவெ = சேவையை

கொளுத = ஏற்றுக்கொண்டு

க்ருபாளு = கருணாளுகளான ஸ்ரீபரமாத்மன்

அவரபிலாஷெகள = ஜீவர்களின் யோக்யதைக்கேற்ப அவரவர்களின் விருப்பங்களை

பூரைஸி = நிறைவேற்றி

கொடுதிப்ப = கொடுக்கிறான்.

 

முந்தைய ஸ்லோகத்தில் இதய கமலத்தின் 8 தளங்களில் திக்பாலகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லியிருந்தார். அடுத்த 5 பத்யங்களால், ஹம்ஸ நாமக பரமாத்மன், அந்த இதய கமலத்தின் 8 தளங்களில் சுற்றியவாறு, ஜீவர்களின் புண்ய பாபாதி கர்மங்களை நடத்துகிறான் என்கிறார். சுஷும்னா நாடியின் நடுப் பகுதியில், இதய கமலத்தின் 8 தளங்களில் குயவனின் சக்கரம் சுற்றுவதைப் போல ஹம்ஸ நாமக பரமாத்மன் சுற்றியவாறு, அஷ்ட திக்பாலகர்களிடமிருந்து சேவைகளைப் பெற்றுக்கொண்டு, கருணாளுவான ஸ்ரீஹரி, அவரவர்களின் மனோபீஷ்டங்களை நிறைவேற்றுகிறான். 

No comments:

Post a Comment