ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Monday, June 1, 2020

#14 - பஞ்சதன்மாத்ர சந்தி

#14 - பஞ்சதன்மாத்ர சந்தி

எரடு3ஸாவிரதெ3ண்டு1 ரூபவ
நரிது சர்வபதார்த்த2தலி ஸிரி
வரன பூஜெயமாடு3 வரக3ள பே3டு3 கொண்டா3டு3 |
3ரிதெ3 ஜலதொளு முளுகி3 பி3ஸிலொளு
பெரளனெணிஸிதரேனு சத்கு3ரு
ஹிரியரனுசரிஸித3ர மர்மவனரியதி3ஹ நரனு ||14

எரடுசாவிரதெண்டு ரூபவனு = 2008 ரூபங்களை
அரிது = அறிந்து
ஷிரிவரன = லட்சுமி ரமணனை
சர்வ பதார்த்ததலி = அனைத்து பொருட்களிலும்
பூஜெயமாடு = பூஜையை செய்
வரகள பேடு = வரங்களை கேள்
கொண்டாடு = ஸ்தோத்திரம் செய்
சத்குரு = சத்குருகளான பெரியவர்களை
அனுசரிஸி = அவர்கள் பேச்சினைக் கேட்டு
மர்மவன்னு = மகிமைகளை
அரியதெ = தெரியாமல்
இஹ = இருக்கும்
நரனு = மனிதன்
பரிதெ = எவ்வித பயனுமில்லாமல்
பெரளனு = விரல்களை
எணிஸதரேனு = எண்ணினால் என்ன பயன்? (பயன் இல்லை என்று பொருள்).

முந்தைய 2 பத்யங்களில் கூறிய பகவத்ரூபங்களை சொல்லியவாறு, சத்குருவின் உபதேசம் இல்லாதவர்க்கு இந்த உபாசனை புரியாது என்று சொல்கிறார்.

12ம் பத்யத்தில் கூறிய பகவத் ரூபங்களின் எண்ணிக்கை 1624. ஆதார ரூபங்கள் 242. ஆதேய ரூபங்கள் 142. மொத்த ரூபங்கள் 2008. இவ்வளவு பகவத்ரூபங்களை அனைத்து பொருட்களிலும் சிந்தித்து லட்சுமிபதியை யார் பூஜிக்கின்றாரோ, அவரே தன்யர். அவரை பிரார்த்தித்து விஷயங்களை அறியவேண்டும். அவரை போற்றவேண்டும். சத்குருகளின் சேவை செய்து அவரின் உபதேசத்தினால் இந்த மர்மங்களை அறியாத மனிதர்கள், பெரிய ஆசார்யர் என்று வேடம் தரித்து, குளிரில் சென்று குளத்தில் மூழ்கி, வெளியில் அமர்ந்து கண்மூடி அமர்ந்து, விரல்களை விட்டு ஜெபம் செய்து என்ன பலன்? எந்த பலனும் இல்லை. 
***

No comments:

Post a Comment