ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Sunday, June 7, 2020

#25 - பஞ்சதன்மாத்ர சந்தி

ஒந்த3னந்தா1னந்த1 ரூபக3

ளொந்தெ3 ரூபதொ3ளிஹவு லோக1தொ

ளொந்தெ3 ரூபதி3 ஸ்ருஷ்டி ஸ்திதி மொத3லாத3 வ்யாபார |

ஒந்தெகாலதி3 மாடி திளிஸதெ

ந்த3ணிசிகொண்டி3ப்ப ஜக3தொ3ளு

நந்தனந்தன ரணதொளிந்த்ராத்மஜகெ3 தோ1ரினெ ||25

 

ஒந்தொந்து ரூபதி = பரமாத்மனின் ஒவ்வொரு ரூபத்திலும், அனந்தானந்த ரூபங்கள்

லோககளு = அனேக உலகங்கள்

இஹவு = இருக்கிறது

ஸ்ருஷ்டி ஸ்திதி முதலாத வியாபார = ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹார, நியம ஆகிய கர்த்ருத்வ வியாபாரங்களை ஒரே காலத்தில் செய்து

திளிஸதெ = தன் கர்த்ருத்வத்தை ஜீவருக்கு தெரிவிக்காமல்

ஜகதொளு = உலகத்தில்

ஸந்தணிஸிகொண்டிப்ப = வியாபித்திருக்கிறான்.

நந்தனந்தன = நந்தகோபனின் மகனான ஸ்ரீகிருஷ்ணன்

இந்த்ராத்மஜகெ = இந்திரனின் மகனான அர்ஜுனனுக்கு

ரணதொளு = பாரதப் போரான குருக்‌ஷேத்திரத்தில்

தோரிசனெ = ஸ்ரீகிருஷ்ணனின் தேகத்தில் பற்பல தலை, தோள்களால் கூடிய பிரபஞ்சங்களையே முழுங்கியிருப்பதை, காட்டவில்லையா?

 

பரமாத்மனின் ஒரு ருபத்தில் அனந்தானந்த ரூபங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ரூபத்திலும் அனந்தானந்த உலகங்கள் இருக்கின்றன. பாகவத 10ம் ஸ்கந்தம், 9ம் அத்தியாயத்தில், ஸ்ரீகிருஷ்ணன் மண் தின்றான் என்னும் சந்தேகத்தில், அவனைத் திட்டிய தாயான யசோதைக்கு, தான் மண் தின்னவில்லை என்று சொல்வதற்காக வாய் திறந்து காட்டிய விஷயத்தில்:

 

ஸாதத்ர தத்ருஷே விஷ்வம் ஜகத் ஸ்தாஸ்னுச கந்திஷ: |

ஸாத்ரி த்வீபாப்தி பூகோளம் ஸவாய்வக்னீந்து தாரகம் ||37

ஏகத்விசித்ரம் ஸஹஜீவகால ஸ்வபாவ கர்மாஷய லிங்கபேதம் |

ஸூனோஸ்தனௌ வீக்‌ஷ்ய விதாரிதாஸ்யே வ்ரஜம் ஸஹாத்மானமவா பஷங்காம் ||38

 

யசோதை, ஸ்ரீகிருஷ்ணனின் வாயில் ஸ்தாவர ஜங்கமாத்மகமான ப்ரபஞ்சத்தைக் கண்டாள் என்று சாதாரணமாக பிரபஞ்சம் என்று சொன்னதை விவரிக்கிறார். பிரபஞ்சத்தின் அனைத்து பிரதேசங்களையும், பூலோகத்தையும், வாயு, அக்னி, சந்திர, நட்சத்திரங்களால் ஆன அந்தரிக்‌ஷ முதலானவற்றையும் கண்டாள். அது மட்டுமல்ல. அனாதி காலங்களிலிருந்து இருக்கும் சாத்விக, ராஜஸ, தாமஸ என்னும் ஜீவராசிகளை கண்டாள். அவர்களில் ஸ்ருஷ்டிக்கு வராதவர்களையும் அவர்கள் கர்மங்களுக்கேற்ப ஸ்ருஷ்டிக்கு வந்து கர்மங்களை செய்து கொண்டிருப்பதையும், சாத்விகாதி ஜீவர்கள் முக்தி, சம்சார, தமஸ் என்னும் மூன்றுவித கர்மபலன்களை அனுபவித்துக் கொண்டிருப்பதையும், அவர்களின் சம்சாரத்தில் இருக்கும் லட்சணங்கள் இவை அனைத்தையும் ப்ரத்யட்சமாக பார்ப்பது மட்டுமல்லாமல், தன் கோகுலம், கோகுலத்தில் தான் ஸ்ரீகிருஷ்ணனின் வாயில் உலகத்தை பார்த்திருப்பதையும், இப்படியாக அனந்தானந்த பிரபஞ்ச, கோகுலாதிகளைக் கண்டு சந்தேகம் கொண்டாள் என்கிறார்.

 

இங்கு இந்த ஸ்லோகத்தில், ‘வ்ரஜம் ஸஹாத்மானம்என்று மட்டுமே இருக்கிறது. அனந்தானந்த உலகங்களைக் கண்டாள் என்று எங்கு இருக்கிறது? என்று சந்தேகப்படக்கூடாது. வ்ரஜம் ஸஹாத்மானம்என்னும் பிரபஞ்ச யோகத்தினாலேயே அனந்தானந்த ரூபங்கள் என்னும் அர்த்தம் ஆகிறது. அது எப்படியெனில், தான், கோகுலத்தில் ஸ்ரீகிருஷ்ணனின் வாயை திறந்து காட்டிக்கொண்டிருப்பதை ஸ்ரீகிருஷ்ணனின் வயிற்றில் கண்டாள். என்றபிறகு, அந்த வாயில், உலகத்தை, கோகுலத்தை, தன்னை, வாய் திறந்து காட்டிக்கொண்டிருக்கும் ஸ்ரீகிருஷ்ணனைக் கண்டாள் என்று மறுபடி சொல்லத் தேவையில்லை. இப்படி, வயிற்றில் காணும் ஒவ்வொரு கிருஷ்ண ரூபத்தின் வயிற்றில், இதைப்போலவே பிரபஞ்சத்தைக் காணவேண்டும் அல்லவா? அந்த பலத்தினாலேயே, அனந்தானந்த ரூபங்களைக் கண்டாள் என்று அர்த்தம் வருகிறது என்பதே கருத்து.

 

ஒரே காலத்தில், ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயங்களை செய்கிறான். என்றால், பொதுவாக ஸ்ருஷ்டி காலத்தில் உலகத்தைப் ஸ்ருஷ்டிக்கிறான். மத்திய காலத்தில் அதை பாதுகாக்கிறான். பிரளய காலத்தில் அதனை அழிக்கிறான் என்று சொன்னாலும், ‘ஜனம் ஜனேன ஜனர்ய ம்ருத்யுனாத்மன:காலநாமகனான ஸ்ரீஹரி, தன் வசத்தில் இருக்கும் பிரம்மாதிகளாலும் இதர மக்களாலும் ஸ்ருஷ்டி செய்தவாறு, ஒரே காலத்தில் தன் வசத்தில் இருக்கும் ம்ருத்யுவிற்குக் காரணமான நோய்களால், அழித்தும் வருகிறான். பாகவத 3ம் ஸ்கந்தத்தின் வாக்கியத்தின்படி ஒருவரில் இருந்து ஸ்ருஷ்டிக்கிறான், அதே சமயத்திலேயே இன்னொருவரில் இருந்து பிறந்தவர்களை அழிக்கிறான். இன்னொரு ரூபத்தினால் கொல்கிறான். ஆனால், உலகத்தில் மக்கள் பிறப்பதை, வாழ்வதை, இறப்பதை அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தாலும், இவனின் மகன் இவன். இவனைப் பெற்றவன் அவன், இவன் இதனால் இறந்தான் என்று சொல்வரே தவிர, இவை அனைத்தும் பகவந்தனின் வியாபாரம் என்று யாரும் அறிவதில்லை. ஞானிகளுக்கு மட்டுமே இவை புரியும். பாரத யுத்தத்தில் அர்ஜுனனுக்கு விஸ்வரூபத்தைக் காட்டியபோது, பீஷ்ம முதலானவர்கள் ஸ்ரீகிருஷ்ணனின் வாயில் பிரவேசிப்பதை ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்கு காட்டியதையும், அதனை அர்ஜுனன் கண்டதையும், கீதையின் 11ம் அத்தியாயத்தில் சொல்லியிருக்கிறான். அதிலிருந்தே பகவந்தனின் மகிமைகள் புரியவில்லையா? என்று பொருள்.

***
 

No comments:

Post a Comment