ஹரிகதா2ம்ருதசார கு3ருக3ள
கருணதிந்தா3பநிது பே1ளுவே
பரம ப4கவத்3ப4க்தரித3னாத3ரதி கேளுவுது3
ஹரியெ பஞ்சாஷத்3வரண சு
ஸ்வர உதாத்த1னுதா3த்த ப்ரசய
ஸ்வரித ஸந்தி4 விஸர்க3 பி3ந்து3க3ளொளகெ3 தத்3வாச்ய |
இருவ தத்தன்னாம ரூபக3
ளரிதுபாஸனெ கை3வரிளெயொளு
ஸுரரெ ஸரி நரரல்ல அவராடு3வுதெ3 வேதா3ர்த்த2 ||1
ஹரியே = ஸ்ரீபரமாத்மனே
பஞ்சாஷத்வர்ண = அ-கார முதலான 50 எழுத்துக்கள்
ஸுஸ்வர = எழுத்துக்களை உச்சரிப்பது
உதாத்த = உயர் ஸ்வரத்தை உச்சரிப்பது
அனுதாத்த = ஒரு இடத்தில் குறைப்பது
ப்ரசய = ஸ்வர விசேஷம்
ஸ்வரித = யதாஸ்திதி (அப்படியே) உச்சரிப்பது
ஸந்தி = இரு பதங்களை ஒன்றாக சேர்க்கும்
விஸர்க பிந்துகளொளகெ = அம், கம்,
என எழுதும்போது பக்கத்தில் புள்ளி வைப்பது, இவற்றில்
தத்வாச்ய = அந்தந்த ஷப்தத்தின் பெயரால்
இருவ = இருக்கிறான்
தத்தன்னாம ரூபகளரிது = எந்த பெயர், எந்த ரூபம் என்பதை அறிந்து
உபாஸனெகைவரு = உபாசனை செய்பவர்கள்
இளெயொளு = பூமியில்
ஸுரரேஸரி = தேவதைகள் என்றே அறியவேண்டும்
நரரல்ல = அவர்கள் சாமான்யரான மனிதர் என்று
அறியக்கூடாது
அவரு ஆடுவுதே = அவர்கள் என்ன பேசினாலும்
வேதார்த்த = அது வேத அர்த்தங்களுக்கு சமம் என்று
எண்ணவேண்டும்.
முக்தி ஆகவேண்டுமென்றாலும், அபரோக்ஷம் கிடைக்கவேண்டும் என்றாலும், அதற்குமுன் முதலில் ஜீவரின் ஸ்வரூப யோக்யதையை அறிந்துகொண்டு, யார்யாரிடம் எப்படி எப்படி இருக்கவேண்டும் என்னும் விஷயத்தை அறிந்து, அந்த சன்னிதானத்திற்கேற்ப உபாசனை செய்வது முக்கிய சாதனை என்று சொல்கிறார்.
அதனால் இந்த சந்திக்கு ஜீவ ப்ரகரண சந்தி என்று பெயர்.
வேதங்களில், ஸ்வரித, அனுதாத்த, உதாத்த, ப்ரசய ஆகியவை இருக்கின்றன. ஸந்தி, விஸர்க, பிந்து ஆகியவை ஸ்மிருதி வாக்கியங்களில், வேதங்களிலும் கூட வருகிறது. ஸ்வரித, அனுதாத்த, உதாத்தங்களின் லட்சணங்களை அறியவேண்டுமெனில் சங்கீத சாஸ்திரங்களில் கொஞ்சம்
அறிமுகம் இருக்கவேண்டும். ‘ஸரிகம பதநி’ என்னும் 7 ஸ்வரங்கள் ஆரோகண கிரமத்தில் ஒன்றைவிட ஒன்று அதிக ஸ்வரத்தில் இருக்கும்.
நிதபமகரிஸ என்று அவரோகண கிரமத்தில் சொல்லும்போது ஒன்றுக்கொன்று குறைந்த ஸ்வரத்தில்
சொல்ல வேண்டும். இதில் ம ப த என்னும் 3 ஸ்வரங்களை எடுத்துக்கொண்டால்,
* ம என்பது அனுதாத்த ஸ்வரம்.
* ப என்பது ஸ்வரித
* த என்பது உதாத்த
* ப என்னும் ஸ்வரம் யதாஸ்திதியாக
உச்சரிப்பது. இதற்கு ஸ்திர என்றும் பெயர்.
* பஞ்சமத்தைவிடவும் ஒரு நிலை கீழாக
உச்சரிப்பது ம (மத்யம).
* பஞ்சமத்தைவிடவும் ஒரு நிலை மேலாக
உச்சரிப்பது த (தைவத).
* வேதங்களில் சரிசமமாக உச்சரிப்பது
ஸ்வரித,
* நீசஸ்வரமே அனுதாத்த,
* உச்ச ஸ்வ்ரமே உதாத்த,
* ப்ரசய என்றால் உதாத்தத்தை
உச்சரிக்கும்போது ஸ்வரித, அனுதாத்த, உதாத்தங்களை ஒரே சொல்லின் இறுதியில் ஒரே சமயத்தில் உச்சரிக்கும் ஸ்வரவிசேஷம்
ஆகும்.
* ஸந்தி என்றால் இரு சொற்களை
சேர்ப்பது அதாவது ‘பிராணாபானாவிடாயாம்’ என்னும் சொல்லில் ப்ராண, அபான,
என்னும் இரு சொற்களை சேர்க்கும்போது ப்ராணாபானௌ என்று ஆகிறது. இதற்கு சந்தி
என்று பெயர்.
* விஸர்க்க, பிந்து ஆகியவை மேலே சொன்னதைப் போல.
இவற்றில் 50 எழுத்துக்களின் பெயராலும், உதாத்த நாமகனாகவும், அனுதாத்தாதி நாமங்களால்
அழைக்கப்பட்டு அங்கங்கு வியாப்தனாக இருக்கிறான் என்று அறிந்து, உபாசனை செய்யவேண்டும். மேலும்,
ஸர்வே வேதா யத்பதமாமனந்தி, வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்ய:
ஆகிய ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லியிருப்பதைப் போல
அனைத்து வேதங்களும், புராணங்களும், பரமாத்மனையே புகழ்கின்றன. அவனே அனைத்து ஸ்ருதி, ஸ்ம்ருதிகளால் புகழப்படுபவன் என்று அறிந்து, யார் உபாசனை செய்கிறார்களோ அவரை சாதாரண மனிதர் என்று எண்ணாமல், தேவதாம்சர் என்று அறியவேண்டும் என்று சந்தியின் அறிமுகமாக இந்த
பத்யத்திலிருந்து உத்தம ஜீவனின் ஸ்வரூபத்தை விளக்குகிறார் தாசராயர்.
ஈஷனலி விக்3ஞான ப4க3வ
த்தா3ஸரலி சத்ப4க்தி விஷய நி
ராஸெ மித்2யாவாத3த3லி ப்ரத்3வேஷ நித்யத3லி |
ஈ ஸமஸ்த ப்ராணிக3ளலி ர
மேஷ நிஹனெந்த3ரிது அவரபி4
லாஷெக3ள பூரைஸுவுதெ3 மஹயக்3ஞ ஹரிபூஜெ ||2
ஈஷனலி = பரமாத்மனிடம்
விக்ஞான = விசேஷமான ஞானம்
பகவத்தாசரலி = பகவத் பக்தர்களிடம்
ஸத்பக்தி = சிறந்த பக்தி
விஷய = விஷய சுகங்களில்
நிராஸெ = ஆசையை துறப்பது
மித்யாவாததலி = ஜகத் பொய் என்று சொல்லும் மித்யா
வாதத்தில்
நித்யதலி = தினந்தோறும்
ப்ரத்வேஷ = அதிகமாக த்வேஷத்தைக் காட்டுவது
ஈ சமஸ்த ப்ராணிகளலி = இந்த அனைத்து பிராணிகளிடமும்
ரமேஷ = லட்சுமிபதியானவன்
நிஹனெந்தரிது = இருக்கிறான் என்று அறிந்து
அவரபிலாஷெகள = அவர்களின் விருப்பங்களை
பூரெயிஸுவுதெ = நிறைவேற்றுவதே
மஹயக்ஞ ஹரிபூஜெ = மிகப்பெரிய யக்ஞம், ஹரிபூஜை
ஸ்ரீபரமாத்மனே சர்வோத்தமன். அனைத்து
பிரபஞ்சங்களிலிருந்து வேறுபட்டவன். அனைத்து உலகங்களையும் படைத்து, நடத்துபவன் என்னும் விசேஷ ஞானத்தைப் பெற்று, பகவந்தன் நம் ஸ்வாமி, நாம் அவனின் தாசன் என்று அறிந்து
உபாசனை செய்யும் பக்தரிடம் உத்தமமான பக்தி செய்வது; சம்சார சுகங்களில் நிராசை; உலகமே பொய், நானே ஈஸ்வரன் என்று சொல்லும் மதங்களை பின்பற்றுவர்களில் விசேஷமான த்வேஷம்; சராசரங்களால் நிறைந்த இந்த உலகத்தில் ஸ்ரீஹரி அனைத்து இடங்களிலும்
வியாபித்திருக்கிறான் என்று அறிந்து, பிராணிகளின் விருப்பங்களை
நிறைவேற்றுவதே மிகப்பெரிய யாகம் என்றும், அதுவே பரமாத்மனின் மிகப்பெரிய பூஜை
என்றும் அறியவேண்டும். இப்படி இருப்பவர்கள் யோக்யஜீவிகள் என்பது கருத்து.
த்ரித3ஷ ஏகாத்மகனெனிஸி பூ4
உத3க ஷிகி2யொளு ஹத்து கரணதி3
அதி4பரெனிஸுவ ப்ராணமுக்2யா தித்யரொளு நெலெஸி |
விதி3தனாகி3த்த3னவரத நிர
வதி4க மஹிமனு ஸகல விஷயவ
நித4ன நாமக சங்கருணாஹ்வயதி3 ஸ்வீகரிப ||3
த்ரிதஷ = 3+10=13 ரூபங்களைக்
கொண்டவனாகவும்
ஏகாத்மனெனிஸி = ஏகாத்மன் என்று பெயர் பெற்று
பூ = பூமி
உதக = தண்ணீர்
ஷிகியொளு = நெருப்பு, என இவை மூன்று ரூபங்களாலும்
ஹத்து கரணதல்லி = கண் முதலான 10 இந்திரியங்களிலும்
அதிபரெனிஸுவ = அதன் அபிமானிகள் என்று அழைக்கப்படும்
ப்ராணமுக = வாயுதேவரே முதலான
ஆதித்யரொளு = தேவதைகளில்
நிதன நாமக = நிதன என்னும் பெயர் கொண்ட
ஸங்கருஷணாஹ்வயனு = சங்கர்ஷண நாமக பரமாத்மன்
நெலஸி = நிலைத்திருந்து
விதிதனாகித்து = ஞானிகளிக்கு தெரிபவனாக இருந்து
அனவரத = எப்போதும் இருப்பவன்
நிரவதிக மஹிமய = எல்லைகளற்ற மகிமைகளைக் கொண்டவனான
சகலவிஷயவ = இந்த தேகத்தில் அனுபவிக்கும் அனைத்து விஷய
போகங்களை
ஸ்வீகரிப = ஏற்றுக் கொள்கிறான்.
முந்தைய பத்யத்தில் சொன்னவாறு, ஜீவனின் யோக்யதையை அறிந்து, அவரவர்களின் மனோபீஷ்டங்களை
நிறைவேற்றினால், ஸ்ரீஹரி அதனை அன்புடன் ஏற்றுக்கொள்கிறான். ஆகையால், பகவத் பூஜையை செய்வது போலாயிற்று என்று சொல்கிறார்.
ப்ருத்வி, தண்ணீர், நெருப்பு என்று பெயருள்ள இந்த மூன்றும், அன்னம், தண்ணீர், நெருப்பு என்னும் மூன்றையும் குறிப்பால் உணர்த்தும் பெயர்கள் என்று
அறியவேண்டும். இவை மூன்றிலிருந்து பிறப்பது, வாத,
பித்த, ஸ்லேஷ்ம என்னும் மூன்று தாதுக்கள். பிரளய காலத்தில், ருத்ராந்தர்கதனாக இருந்து, உலகத்தை எரித்து (அழித்து)
சம்ஹாரம் செய்வதால், சங்கர்ஷண மூர்த்திக்கு, நிதன மூர்த்தி என்று பெயர்.
இத்தகைய சங்கர்ஷணன்,
* வாத பித்தாதி மூன்றில் மூன்று
ரூபங்களிலும்;
* கண், காது ஆகிய 10 இந்திரியங்களில் அவற்றின் அபிமானிகளான வாயு முதலான தேவதைகளில் 10 ரூபங்களாலும்;
* மனதில் ஏகாத்மன் என்னும் ஒரு
ரூபத்திலும் இருந்து,
ஞானிகளுக்கு மட்டும் தெரிந்தவாறு, அபார மகிமைகளைக் கொண்டவன் ஆகையால்,
* நாம் பிறருக்கு செய்யும்
பூஜாதிகளையும்,
* நாம் அனுபவிக்கும் சுகங்களையும், * கேட்பது, பார்ப்பது முதலான அனைத்து விஷயபோகங்களையும் ஏற்றுக்கொள்கிறான்.
இப்படியாக அறிந்து, அனுபவிக்கும் விஷய போகங்களும்கூட பகவத் பூஜையே ஆகும் என்பது கருத்து.
த3ஹிக தை3ஷிக காலிக த்ரய
க3ஹன கர்மக3ளுண்டு இத3ரொளு
விஹித கர்மக3ளரிது நிஷ்காமகனு நீனாகி3 |
ப்ருஹதி நாமக பா4ரதீஷன
மஹித ரூபவ நெனெது3 மனத3லி
அஹரஹர் ப3க3வந்தக3ர்ப்பிஸு பரமப4கு3தி1யலி ||4
தஹிக = தேக சம்பந்தமாக
தைஷிக = தேச சம்பந்தமாக
காலிக = கால நேரம் சம்பந்தமாக
த்ரய = இந்த மூன்றை
கஹன கர்மகளுண்டு = செய்யவேண்டிய கர்மங்கள் உள்ளன
இதரொளு = இவற்றில்
விஹித கர்மகளரிது = கண்டிப்பாக செய்யவேண்டிய
கர்மங்களை அறிந்து
நிஷ்காமகனு = பலனை எதிர்பார்க்காமல்
நீனாகி = நீ இரு
ப்ருஹதி நாமக = 72000 நாடிகளில் இருக்கும் ப்ருஹதி நாமகனான
பாரதீஷன = முக்யபிராணதேவரின்
மஹித ரூபவ = மிகச்சிறந்த ரூபங்களை
மனதலி = மனதில்
நெனெது = நினைத்து (சிந்தித்து)
அஹரஹ = தினந்தோறும்
பகவந்தகர்ப்பிஸு = பகவந்தனுக்கு அர்ப்பணம் செய்
பரமபகுதியலி = மிகுந்த பக்தியுடன்
மனிதர்கள் செய்யவேண்டிய கர்மங்கள் மூன்று விதங்கள்.
அவை:
* தைஹிக -> தேகத்தால் செய்யவேண்டிய செயல்கள். உதாரணம் நமஸ்காரங்கள்.
* தேஷிக -> தேச சம்பந்தமானவை. உதாரணம் காசி முதலான க்ஷேத்திரங்களுக்கு செல்லும்போது
அங்கு செய்யவேண்டிய தீர்த்த ஸ்ரார்த்தம் ஆகியவற்றை செய்வது
* காலிக -> கால சம்பந்தமானவை. உதாரணம்: சந்தியாவந்தனம், சிரார்த்தம், சங்கிரமணங்களில் செய்யும் தர்ப்பணம் ஆகியவை.
இப்படி மூன்று விதமான கர்மங்களில் விதிப்படி அனைத்து கர்மங்களையும்
செய்ய வேண்டுமெனில் அது மிகவும் கஷ்டமான காரியமாகும். ஆகையால், இந்த மூன்று வித கர்மங்களில் நமக்குத் தகுதியான கர்மங்கள் என்றால், எந்த செயல்களை நாம் கண்டிப்பாக செய்ய வேண்டுமோ அவற்றை அறிந்து, பலன்களை எதிர்பாக்காமல், பகவத் ப்ரீதிக்காக மட்டும் செய்யவேண்டும்.
மேலும் 72,000 நாடிகளில் இருக்கும்
வாயுதேவருக்கு ப்ருஹதி என்று பெயர். இத்தகைய ப்ருஹதி சந்தஸ்ஸிற்கு புகழ்பெற்ற
ப்ருஹதி நாமகனாத வாயுதேவரை சிந்தித்து, அவரின் அந்தர்யாமியான பகவந்தனுக்கு, தினந்தோறும் நாம் செய்யும் கர்மங்களை மிகுந்த பக்தியுடன் சமர்ப்பிக்க
வேண்டும்.
மூருவித4 கர்மக3ளொளகெ3 கம்
ஸாரி பா4ர்க3வ ஹயவத3ன ஸ
ம்ப்ரேரகனு தானாகி3 நவ ரூபங்க3ளனெ த4ரிஸி |
ஸூரி மானவ தா3னவரொளு வி
காரஷூன்யனு மாடி3 மாடி3ஸி
ஸாரபோ4க்தனு ஸ்வீகரிஸி கொடு3திப்ப ஜீவரிகெ3 ||5
மூருவித கர்மகளொளகெ = முந்தைய பத்யத்தில் கூறிய
மூன்று வித கர்மங்களில் (தைஹிக, தேசிக, காலிக)
கம்ஸாரி = ஸ்ரீகிருஷ்ணன்
பார்கவ = பரசுராமன்
ஹயவதன = ஹயக்ரீவ என்னும் மூன்று ரூபங்கள்
சம்ப்ரேரகனு = இருந்து வழி நடத்துகிறான்
தானாகி நவ ரூபங்களனெ தரிஸி = கிருஷ்ண ரூப 3, பரசுராம ரூப 3, ஹயக்ரீவ ரூப 3 என மொத்தம் 9 ருபங்களை தரித்து
ஸூரி = தேவதைகளில்
மானவ = மனிதர்களில்
தானவரொளு = தைத்யர்களில் இருந்து
விகார ஷூன்யனு = விகாரம் இல்லாதவனாக
மாடி மாடிஸி = தேவ மானவ தானவர் செய்யும் சாத்விக ராஜஸ
தாமஸ கர்மங்களை செய்து செய்வித்து
சாரபோக்தனு ஸ்வீகரிஸி = அந்த சாத்விக கர்மங்களின்
பலன்களை ஏற்றுக்கொண்டு
ஜீவரிகெ = ஜீவர்களுக்கு
கொடுதிப்ப = கொடுக்கிறான்
தைஹிக, தைசிக, காலிக என்னும் கர்மங்கள், சாத்விக, ராஜஸ,
தாமஸ என்னும் மூன்றுவித ஜீவராசிகளில் தனித்தனியாக இருக்கிறது. மூன்று வித
ஜீவராசிகள் என்றால் தேவதைகள், மனிதர், தைத்யர்கள் என்று பொருள். தைஹிக கர்மங்களுக்கு தலைவன் கிருஷ்ணரூபியான
பரமாத்மன். தேஷிக கர்மங்களின் தலைவன் பரசுராமன். காலிக கர்மங்களின் தலைவன்
ஹயக்ரீவன். இந்த மூன்று வித ஜீவர்களில் மூன்று வித கர்மங்களை நடத்துபவனாக, 3*3=9 ரூபங்களால் அங்கங்கு நிலைத்திருக்கிறான்.
No comments:
Post a Comment