ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Saturday, June 20, 2020

31-32 மாத்ருகா சந்தி

வித்த தே3ஹாகா3ர தா3ரா

பத்ய மித்ராதிக3ளொளகெ3 ஹரி

ப்ரத்யகா3த்மனு எந்தெ3னிஸி நெலெஸிப்பனெந்த3ரிது3 |

நித்யத3லி ந்த்ருப்தி ப3டி3ஸு

உத்தமாத4ம மத்4யமர க்ருத

க்ருத்ய னாகு3ன்மத்தனாக3தெ3 ப்4ருத்யனானெந்து3 ||31

 

வித்த = செல்வம்

தேஹ = சரீர

ஆகார = வீடு

தாரா = கணவன் / மனைவி

அபத்ய = மக்கள்

மித்ராதிகளொளகெ = நண்பர் ஆகியோரில்

ஹரி = ஸ்ரீஹரி

ப்ரத்யகாத்மனு = ஜீவர் அல்லாமல் வேறாக இருக்கிறான்

எந்தெனிஸி = என்று சொல்லிக்கொண்டு

நெலெஸிப்பனு = அனைத்து ஜீவர்களின் அந்தர்யாமியாக இருக்கிறான்

எந்தரிது = என்று அறிந்து

நித்யதலி = தினந்தோறும்

உத்தமாதம மத்யமர = கணவன் / மனைவி, மக்கள் நண்பர் ஆகியோர் உத்தமரோ, மத்யமரோ, அதமரோ ஆகட்டும்

ஸந்த்ருப்தி படிசுத = நன்றாக திருப்திப்படுத்தி

க்ருதக்ருத்யனாகு = செய்யவேண்டிய பகவத்பூஜா ரூபமான சாதனையை செய்தேன் என்று நினைத்து

உன்மத்தனாகதெ = என் தேகம், என் மனைவி என்று பைத்தியம் போல் சொல்லித் திரியாமல்

ப்ருத்யனானெந்து = பரமாத்மனின் சேவகன் நான் என்று சிந்தித்திரு.

 

தான், தன் கணவன்/மனைவி, மக்கள், செல்வம் ஆகியவற்றில் பரமாத்மனே அந்தந்த உருவத்தில் அவர்களில் இருக்கிறான் என்று நினைத்து, கணவன்/மனைவி மக்களை, மிகுந்த அன்புடன்; நான் காக்கவில்லையெனில் அவர்கள் கதி என்ன என்னும் கர்வத்துடன், ஸ்வதந்த்ர கர்த்ருத்வ அபிமானத்தில் பைத்தியமாகாமல்; மனைவி மக்களின் பாதுகாப்பும்கூட பகவத்பூஜை என்றும், நான் பரமாத்மனின் சேவகன். எனக்குள் இருந்து அவனே அனைத்தையும் செய்விக்கிறான் என்று சிந்திக்க வேண்டும்.

 

மனைவி மக்கள் ஆகியோர் அவர்கள் உத்தமரோ, மத்யமரோ, அதமரோ அதாவது, அவர்கள் உன்னிடம் அதிக அன்பு செலுத்துகிறாரோ, உதாசீனம் செய்கிறாரோ அல்லது வெறுக்கிறாரோ, அத்தகையவர்களில் அவர்களைப் போலவே நீயும் இருக்காமல், அனைவருக்குள்ளும் பரமாத்மனே இருந்து, அப்படி செய்விக்கிறான் என்று சிந்தித்து, நீ அவர்களை சமமாக பாவிக்க வேண்டும்.

 

அல்லது, உன்னைவிட உத்தமர், உனக்கு சமர், உன்னைவிட நீசர் இத்தகையவர்களில்;

 

அல்லது, உத்தம பிராமணாதிகள் என்றால் குருகள் முதலானவர்கள். மத்யமர் சாதாரண மக்கள். அதமர் நீசர் இவர்களிலும் பகவந்தன் சமமாக இருக்கிறான் என்று நினைத்து, உன் சக்திக்கேற்ப, அவரவர்களின் யோக்யதைக்கேற்பவும், அவர்கள் அனைவரையும் நன்றாக திருப்திப்படுத்த வேண்டும் என்பது கருத்து.

 

தே3வதே3வேஷன ஸுமூர்த்தி க

ளேவரக3ளொளக3னவரத

ம்பா4விஸுத பூஜிஸுத நோடு3ஸுகி2ஸுதிரு பி33தெ3 |

ஸ்ரீவர ஜகன்னாத2விட்டல

தா ஒலிது3 காருண்யத3லி ப4

நோவ பரிஹரிஸுவனு ப்ரவித11 பதிதபாவனனு ||32

 

தேவ தேவேஷன = தேவதைகளுக்கெல்லாம் தேவனான பரமாத்மன்

சுமூர்த்தி = திவ்ய மூர்த்திகளும்

களெவரகளொளகெ = சரீரங்களில்

அனவரத = நித்யமான

ஸம்பாவிஸுத = போற்றியவாறு

பூஜிஸுத = பூஜித்து

நோடுத = பார்த்தவாறு

சுகிசுதிரு பிடதெ = விடாமல் சுகப்படு (ஆனந்தப்படு).

ப்ரவிதத = அனைத்து இடங்களிலும் இருப்பவனும், பதித பாவனனுமான

ஸ்ரீவர = லட்சுமிபதியான

ஜகன்னாதவிட்டலனு = தாசராயரின் பிம்பமூர்த்தியான ஜகன்னாதவிட்டலன்

தா ஒலிது = தான் மகிழ்ந்து

காருண்யதலி = கருணையால்

பவனோவ = பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியின் வேதனையை

பரிஹரிசுவனு = நீக்குகிறான்.

 

பிரம்மாதி அனைத்து தேவதைகளுக்கும் ஸ்வாமியான ஸ்ரீபரமாத்மனின் மூர்த்திகள், உத்தம, மத்யம, அதமர்களான அனைத்து பிராணிகளிலும் இருக்கிறது என்று சிந்தித்து, இப்படி அனைத்து இடங்களிலும் பகவத்ரூபங்களை சிந்தித்து, அந்த ரூபங்களை இடைவிடாமல் சிந்தித்தவாறு சுகப்பட வேண்டும். இப்படி செய்வதால் வரும் பலன் என்னவெனில், அனைத்து இடங்களிலும் வியாப்தனான, பதித பாவனனான, லட்சுமிபதியான, ஸ்ரீஜகன்னாத விட்டல நாமக பிம்பரூபியான ஸ்ரீபரமாத்மன் மகிழ்ந்து, சம்சாரம் என்னும் நமது வேதனையை பரிகரிக்கிறான்.

 

இத்துடன் மாத்ருகா சந்தி என்னும் எட்டாம் சந்தியின் உரை முடிவுற்றது.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.

 


No comments:

Post a Comment