ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Tuesday, June 23, 2020

11-15 ஜீவப்ரகரண சந்தி

வ்யாபகனு தானாகி3 ஜீவ ஸ்வ

ரூபதே3ஹவ ஒளஹொரகெ3 நி

ர்லேபனாகி3ஹ ஜீவக்ருத கர்மக3ளனாசரிஸி |

ஸ்ரீபயோஜ 4வேரரிந்த்ர ப்ர

தீப வர்ண ஸ்வமூர்த்தி மத்4யக3

தா பொளெவ விஷ்வாதி ரூபதி3 ஸேவே கைகொ3ளுத ||11

 

ஜீவ ஸ்வரூபதேஹவ வளஹொரகெ = ஜீவனின் ஸ்வரூப தேகத்தின் உள்ளேயும் வெளியேயும்

வியாபகனு தானாகி = நிலைத்திருப்பவன் தானேயாகி

ஜீவக்ருத கர்மகளனு = ஜீவன் செய்யும் கர்மங்களை

ஆசரிஸி = செய்து

நிர்லிப்தனாகிஹ = அதன் பலன்களில் சம்பந்தப்படாமல் இருக்கிறான்

ஸ்ரீபயோஜ பவேரரிந்த = லட்சுமிதேவி, பத்ம சம்பவனான பிரம்ம தேவர், வாயுதேவர் ஆகியோரிடமிருந்து

சேவெகைகொளுத = சேவைகளை ஏற்றுக்கொண்டு

ப்ரதீபவர்ண = அப்ராக்ருத வண்ணங்களாலான

விஷ்வாதி ரூபதி = விஷ்வாதி ரூபங்களால்

ஸ்வமூர்த்தி மத்யக = ஸ்வரூபங்களின் நடுவில், மூலரூபி நாராயணன்

தா = தான்

பொளெவ = ஒளிர்கிறான்

 

ஜீவனின் ஸ்வரூப தேகத்தின் உள்ளேயும் வெளியேயும் பரமாத்மன் வியாப்தனாக இருந்து, ஜீவனின் யோக்யதைக்கேற்ப, அவரவர்கள் செய்யவேண்டிய கர்மங்களை தான் செய்து, செய்வித்து, ஸ்தூல தேகத்தில் நிலைத்திருந்து, தான் எதற்கும் சம்பந்தப்படாதவாறு இருக்கிறான்.

 

லட்ஷ்மீதராப்யா மாஷ்லிஷ்ட: ஸ்வமூர்த்திகண மத்யக: |

மூர்த்தியோஷ்டவபி த்யேயாஷ்வக்ர ஷங்கவராபயை: ||

முக்தா: ப்ரதீப வர்ணஸ்ச சர்வாபரண பூஷிதா: |

 

ஆகிய தந்த்ரசார பிரமாணத்தின்படி, இந்த சரீரத்திலும், ஸ்வரூப தேகத்திலும் விஷ்வ, தைஜஸ, ப்ராக்ஞ, துர்ய, ஆத்ம, அந்தராத்ம, பரமாத்ம, ஞானாத்ம என்னும் 8 ரூபங்களும், சக்ர சங்குகளை இரு கைகளில் தரித்தவாறு, அபய, வரத கைகளைக் கொண்டு, சர்வாபரண பூஷிதனாக ஒளிர்ந்தவாறு, பிம்பரூபியான ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீதேவி, பூதேவி சமேதனாகி பிரம்ம வாயுகளால் வணங்கப்படுகிறான் என்று ஸ்ரீமதாசார்யரின் வாக்கியத்தினால் தெரிகிறது. ஜீவனின் ஸ்வரூபத்திலும், பரமாத்மனின் பிரவேசத்தை அறிந்தாலேயே வ்யாபகனு தானாகிஎன்பதன் அர்த்தம் புரிகிறது.

 

3ருட ஸேஷ ப4வாதி நாமவ

4ரிஸி பவன ஸ்வரூப தே3ஹதி3

கரண நிய்யாமகனு தானாகி3ப்ப ஹரியந்தெ1 |

ஸிஜான வாணி பா4ரதி

4ரதனிந்தொ33கூ3டி3 லிங்க33

லிருதிஹரு மிக்காதி3 தே1யரிகி3ல்லவாஸ்தா2||12

 

கருட சேஷ பவாதி = கருட, சேஷ, ருத்ர முதலான

நாமவ = பெயர்களை

தரிஸி = தரித்து

பவன = வாயுதேவர்

ஸ்வரூபதேஹதி = ஜீவர்களின் ஸ்வரூப தேகத்தில்

கரண நியாமக = இந்திரியங்களை வழி நடத்துபவனாக

ஹரியந்தெ = பரமாத்மனைப் போல

இப்ப = இருக்கிறான்

ஸரஸிஜாஸன = பிரம்மதேவரின்

வாணி = சரஸ்வதி தேவி

பாரதி = பாரதி தேவியர், இந்த மூவரும்

பரதனிந்த ஒடகூடி = வாயுதேவருடன் சேர்ந்து

லிங்கதலி = ஜீவனின் லிங்கதேகத்தில், நியாமகராக இருக்கிறார்கள்

மிக்க = மற்ற

ஆதி தேயரிகெ = தத்வாபிமானி தேவதைகளுக்கு

ஆஸ்தான = லிங்கசரீரத்தில் இருக்கும் நிலை இல்லை.

 

ஜீவனின் ஸ்வரூப தேகத்தில் இந்திரியங்களின் வழி நடத்துபவனாக, வாயுதேவர் இருக்கிறார் என்று சொல்கிறார். வாயுதேவர், அஹங்கார தத்வாதிகளுக்கு அபிமானிகளான கருட, சேஷ, ருத்ர, ஆகியோருடன் ஆதிஎன்றதால், அனைத்து தேவதைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இத்தகைய தத்வாபிமானி தேவதைகளின் ரூபத்தை தாமே ஸ்வீகரித்து ஸ்ரீபரமாத்மன் எப்படி ஜீவனின் ஸ்வரூப-அந்த:கரணங்களின் தலைவனாக இருக்கிறானோ, அப்படியே, வாயுதேவர் இந்திரிய ப்ரேரகனாக இருக்கிறார். ஆனால், முக்கிய தலைவன் பரமாத்மன். அந்த பரமாத்மனின் வசத்தில், ஜீவன் செய்யவேண்டிய காரியங்களை, சேவகர்கள் ராஜகாரியங்களை செய்வதுபோல, இதர தேவதைகளையும் வசப்படுத்திக்கொண்டு இருக்கிறான்.

 

வாயுதேவருக்கு ஸ்வரூப தேகத்தில் பிரவேசம் இல்லை என்பது சிலரின் அபிப்பிராயம். தாசராயர் இந்த பத்யத்தில் ஹரியந்தெ பவனஎன்னும் வாக்கியத்தால், வாயுதேவருக்கு பரமாத்மனைப் போலவே ஸ்வரூப தேகத்தில் பிரவேசம் உண்டு என்று நிரூபித்திருக்கிறார். இதற்கு ஆதாரமாக ஸ்ரீமதாசார்யரின் வாக்கியமும் இருக்கிறது. நியாயவிவரணத்தில்

 

இந்த்ரியஸ்த்யை: ஸ்வரூபைஸ்து | ஸுக்ஞானம் ஜனயத்யஸௌ ||

மனஸ்தேன விசேஷேண | காம்யை: கர்ம க்ருதேவஸ: ||

ப்ருதக் ஸ்திதேன ரூபேண | ஜீவம் தாரயதிப்ரபு: ||

ஜீவஸ்திதேன ரூபேண | வேதயத்யஹ மித்யபி ||

ப்ராண ஏகோ வதீனித்யம் | பாஹ்யந்த: கரணேஷ்வர: ||

தான்யேதானிவஷான்யேவ | ததாபி க்ருபமைவஸ: ||

ப்ருதக் ஷக்தோபி தத்கைஸ்து | ஸ்வரூபைஸ்தத்க கார்யக்ருத் ||

தஸ்யேஷோ பகர்வா விஷ்ணுரேவமேவ யதாக்ரமம் ||

 

ஜீவனின் ஸ்வரூப தேகத்தில் வாயுதேவர், இந்திரியாபிமானி தேவதைகளின் ஸ்வரூபங்களை தரித்து, ஜீவன் செய்யவேண்டிய காரியங்களை செய்து, செய்விக்கிறார். மனதின் அபிமானி ரூபத்தினால், ஜீவருக்கு ஞானத்தைக் கொடுக்கிறார். பகவத் சன்னிதானத்தைக் கொண்ட முக்யபிராண ரூபத்தினால் ஜீவனை தரித்து இருக்கிறார். ஜீவனின் ஸ்வரூப தேகத்தின் இந்திரியங்களில் இருக்கும் ரூபத்தினால், நான் என்னும் அபிமானத்தை பிறக்கச் செய்கிறார். இப்படியாக பிராண தேவர் ஒருவரே அனைவரையும் வசப்படுத்தியிருப்பதால் வஷீ என்று பெயர் பெற்றிருக்கிறார். ஸ்வரூப தேகத்தின் இந்திரியங்களுக்கும், வெளிப்புற லிங்க சரீரத்தின் இந்திரியங்களுக்கும்கூட அதிபதியாக இருக்கிறார்.

 

இந்திரியங்கள் அனைத்தும் வாயுதேவரின் வசத்திலேயே இருக்கின்றன. தமக்கு தம் ரூபத்தினாலேயே அனைத்து இந்திரியங்களையும் நிர்வகிக்கும் சக்தி இருந்தாலும், தத்வாபிமானி தேவதைகளின் மேல் உள்ள கருணையால், வெவ்வேறு தத்வாபிமானி தேவதைகளின் ரூபத்தை தரித்து, கண், காது முதலான இந்திரியங்களால் செயல்களை செய்விக்கிறார். இத்தகைய வாயுதேவருக்கு தலைவன், பரமாத்மன் ஒருவனே என்று நியாயவிவரணத்தின் வாக்கியம் அர்த்தம் சொல்கிறது.

 

இதைத்தவிர, பாகவத தாத்பர்ய தீபிகாவில்:

 

ஸ்வரூபேந்த்ரிய தேஹேஷு மாதரிஷ்வாபிதானத: |

தத்தே லிங்கஷரீரஸ்த: ஸூத்ரனாமா மஹாப்ரபு: ||

 

ஜீவனின் ஸ்வரூப தேகத்தின் இந்திரியங்களில் மாதரிஷ்வா என்னும் பெயரிலும், லிங்க சரீரத்தில் ஸூத்ர என்னும் பெயரிலும் வசிக்கிறார் என்று சொல்லும் பவமான சம்ஹிதாவின் ஆதாரத்தை சொல்லியிருக்கிறார்.

 

தாசராயர் இங்கு சொல்லியிருக்கும் வாக்கியம் மேற்சொன்ன ஆதாரங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அறியலாம். லிங்க சரீரத்தில் பிரம்ம, சரஸ்வதி, பாரதி, மற்றும் பரத என்றால் வாயுதேவர், ஆகியோர் இருக்கின்றனர். இந்த தேகத்தில் இதர தத்வாபிமானி தேவதைகளுக்கு பிரவேசம் இல்லை.

 

ரதத்வாத்பாத்மகே விஷ்ணௌவதவாபி ஸ்வயம் ப்ருதே: |

பரதோ வாயுருத்திஷ்டோ பாரதீ தத்ஸரவஸ்தி ||

 

என்னும் பாகவத 10ம் ஸ்கந்த தாத்பர்யத்தின்படி 4’ என்னும் பரமாத்மனில் நிலைத்திருப்பதால் பரதஎன்ற பெயரைப் பெற்றிருக்கிறார் என்றும், அல்லது, மக்களை பரண செய்வதால் (உறை போல அவர்களை காப்பதால்), பரத என்று வாயுதேவருக்குப் பெயர். பரதனின் மனைவியானதால், பாரதி என்று அவரின் மனைவிக்குப் பெயர். இந்த ஆதாரங்களாலேயே, வாயுதேவரை தாசராயர் இங்கு பரத என்று அழைத்திருக்கிறார்.

 

ஜீவனிகெ3 துஷத3ந்தெ1 லிங்க3வு

ஸாவகாஷ3தி3 பொந்தி3 ஸுத்தலு

ப்ராவரண ரூபத3லி இப்புது343வதிச்சேயலி |

கேவல ஜடப்ரக்ருதியு இதக்கதி4

தே3வதெயு மஹலகுமியெனிபளு

ஆ விரஜெய ஸ்னானபர்யந்தரதி3 ஹத்திஹுது ||13

 

ஜீவனிகெ = ஜீவர்களின் ஸ்வரூப தேகத்தை சுற்றி

துஷதந்தெ = அரிசியைச் சுற்றியிருக்கும் உமியைப் போல

லிங்கவு = லிங்க சரீரம்

ஸாவகாஷதி = ஸ்வரூப தேகத்தில் இருப்பதற்கு சிறிது இடம் கொடுத்து, அதைச் சுற்றியும்

ப்ராவரணரூபதலி = அரிசியை உமி சுற்றிக் கொண்டிருப்பதைப் போல

பகவதிச்செயலி = பரமாத்மனின் விருப்பப்படி

இப்பது = லிங்க சரீரம் இருக்கும்

இதகெ = இந்த லிங்க சரீரத்திற்கு

கேவல ஜடப்ரக்ருதியு = ஜடப்ரக்ருதி ரூபமான

மஹாலகுமி = மஹாலட்சுமியே

அதிதேவதையு = அபிமானி

ஆவிரஜெய ஸ்னான பரியந்தரதி = அந்த லிங்க சரீரம், விரஜா நதியின் ஸ்னானம் வரைக்கும்

ஹத்திஹது = ஜீவனின் ஸ்வரூப தேகத்தில் சேர்ந்து கொண்டிருக்கிறது.

 

லிங்க சரீரத்தின் லட்சணத்தை சொல்கிறார். அரிசியின் மேல் உமி எப்படி அதை மூடிக்கொண்டிருக்கிறதோ, அதைப்போல, பகவந்தனின் விருப்பப்படி, ஜீவனின் ஸ்வரூப தேகத்தின் மேல் ஒரு உறையாக, லிங்க சரீரம் இருக்கிறது. ஸ்வரூப தேகம் உள்ளே இருப்பதற்கு இடம் செய்து கொடுத்து, லிங்க சரீரம் மேலே சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த லிங்க தேகத்திற்கு அபிமானியாக மகாலட்சுமிதேவி, ஜடப்ரக்ருதியின் ரூபத்தில் இருக்கிறார். இந்த லிங்க சரீரமானது, விரஜா நதி ஸ்னானம் வரையிலும் ஸ்வரூப தேகத்தை சுற்றியிருக்கிறது. விரஜா நதி ஸ்னானம் ஆனபிறகு, லிங்க சரீரம் பங்கம் ஆகிறது.

 

ஆரதி4க தஷகளெகளுள்ள ஷ

ரீர அனிருத்343ள மத்4யதி3

ஸேரியிப்புவு ஜீவ பரமாச்சாதிக த்வயவு |

பா3ரத3ந்த3தி3 தா3னவர அதி

தூ3ரகை3ஸுத ஸ்ரீஜனார்த்த4

மூரு கு3ணதொளகி3ப்பனெந்தி3கு3 த்ரிவ்ருதெந்தெ3னிஸி ||14

 

ஆரதிக தஷகளெகளுள்ள = 16 கலைகளைக் கொண்ட

ஷரீர = லிங்க தேகம்

அனிருத்தகள = அனிருத்த சரீரங்களின்

மத்யதி = நடுவில்

ஜீவ பரமாச்சாதிக த்வயவு = ஜீவாச்சாதிக, பரமாச்சாதிக என்னும் இரு துஷ்ட ப்ரக்ருதிகள்

ஸேரி யிப்புவு = சேர்ந்து இருக்கிறது

தானவரனு = தானவர்களை

பாரதந்ததி = ஜீவனின் அருகில் வரவிடாமல்

அதிதூரகைசுத = தூரத்தில் வைத்து

ஸ்ரீஜனார்த்தன = துஷ்டர்களைக் கொல்பவனான ஸ்ரீஹரி

த்ரிவ்ருத் = த்ரிகுணங்களின் காரியங்களையும் நடத்துபவன் என்று பெயர் பெற்று

எந்திகு = எப்போதும்

மூருகுணதொளகெ = சத்வ, ரஜஸ், தமோ என்னும் மூன்று குணங்களைக் கொண்ட லிங்க சரீரத்தில்

இப்ப = இருக்கிறான்.

 

மேற்சொன்ன, 16 கலைகளுள்ள, லிங்க சரீரத்திற்கும், அனிருத்த சரீரத்திற்கும் நடுவில், ஜீவாச்சாதிக என்றும், பரமாச்சாதிக என்றும், ‘அசேத்யௌ ப்ரக்ருதீ துஷ்டேஎன்னும் பாகவத தாத்பர்ய வாக்கியத்திற்கேற்ப, துஷ்டவான இரு ப்ரக்ருதிகள் சேர்ந்திருக்கின்றன. லிங்கசரீரம், 16 கலைகளைக் கொண்டிருக்கிறது என்னும் விஷயம் 4ம் ஸந்தி, 2ம் பத்யத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

 

அரிசியின் மேல் தவிடு ஒரு உறையாகவும், அதற்கு மேல் உமி ஒரு உறையாகவும் இருக்கிறது. இதைப்போல, ஜீவாச்சாதிக, பரமாச்சாதிக என்னும் இரண்டும் சேர்ந்து கொண்டிருக்கிறன. ஜீவாச்சாதிகா என்பது ஜீவனின் ஸ்வரூபமே தெரியாமல் சுற்றிக் கொண்டிருப்பது. ஸ்ருதிகீதையின் முதலாம் ஸ்லோகம்

 

ஜயஜய ஜஹ்யஜாமஜிததோஷ க்ருஹீதகுணாம் - ஹே அஜித! தோஷக்ருஹிதகுணாம் அஜாம்ஜஹி’ - எப்போதும் யாரிடமும் தோற்காத தேவனே, குணங்களை விழுங்கி தோஷத்தையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அஜாம் - ஜீவாச்சாதிக ஸ்வரூபனான துஷ்டப்ரக்ருதியை, ஜஹி - நாசம் செய், என்று பிரார்த்தனை செய்திருக்கிறார்.

 

ஜீவாச்சாதிகாவின் உள் புறத்தில், பரமாச்சாதிகா, பரமாத்மனின் ஸ்வரூபம், ஜீவனுக்கு தெரியாமல் திரைபோல இருக்கிறது. அத்தகைய பரமாத்மாச்சாதிகா என்னும் துஷ்ட ப்ரக்ருதியை ஜஹி’ - விலக்கு என்னும் ஸ்ருதிவாக்கியம், அது பரமாத்மனின் ஸ்வரூபமாகவே இருந்தாலும், தெரிவதில்லை. ஜீவாச்சாதிக அழிந்தால், ஜீவனின் ஸ்வரூபம் தெரிகிறது. ஜீவனுக்கும் பரமாத்மனுக்கும் நடுவே திரை போட்டாற்போல பரமாச்சாதிக இருக்கிறது. அந்த திரையும் போனால், பரமாத்மனின் ஸ்வரூபத்தைக் காணலாம். இதே விஷயத்தையே விஷ்ணு ரகசியத்திலும் சொல்லியிருக்கின்றனர். த்ரிகுணாத்மகம் நிறைந்த லிங்கசரீரத்தில் பரமாத்ம அனிருத்த, தைத்யர்களின் பிரவேசம் ஆகாதவாறு ஜீவர்களைக் காக்கிறான்.

 

ருத்ரமொத3லாதமரரிகெ3 அனி

ருத்த தே3ஹவெ மனெயெனிஸுவுது

இத்3து3 கெலவ மாட3ரல்லிந்தி3த்த ஸ்தூ2லத3லி |

க்ருத்த4கி2ல தி3விஜரு பரஸ்பர

ஸ்பர்த்தெ4யிந்த3லி த்வந்த்3வகர்ம

ம்ருத்தி43ளனாசரிஸுவரு ப்ராணேஷனாக்ஞெயலி ||15

 

ருத்ர மொதலாத = ருத்ரரில் தொடங்கி அனைத்து

அமரரிகெ = தேவதைகளுக்கு

அனிருத்த தேஹவெ = அனிருத்த தேகமே

மனெயெனிஸுவுது = வீடு என்று அழைக்கப்படுகிறது

இத்து = அந்த அனிருத்த தேகத்திலும்

கெசலவ மாடரு = கண், காதுகளால் செய்யவேண்டிய பார்ப்பது, கேட்பது ஆகிய வேலைகளை செய்ய மாட்டார்கள்

அல்லிந்தித்த = அனிருத்த தேகத்திற்கு அப்பால்

ஸ்தூலதலி = ஸ்தூல தேகத்தில்

க்ருத்த = கோபத்திற்கு ஆளான

கள = தைத்யர்கள்

திவிஜரு = தேவதைகள்

பரஸ்பர = ஒருவருக்கொருவர்

ஸ்பர்த்தெயிந்தலி = சவால் விட்டுக்கொண்டு

த்வந்த்வ கர்ம ஸம்ருத்திகளன்னு = அதிகமான புண்ய பாப கர்மங்களை

ப்ராணேஷன = முக்ய பிராணதேவரின்

ஆக்ஞேயலி = ஆணையின் பேரில்

ஆசரிசுவரு = செய்கின்றனர்.

 

ருத்ர முதலான தேவதைகளுக்கு லிங்க சரீரத்தில் பிரவேசம் இல்லை என்று முந்தைய பத்யத்தில் கூறியிருந்தார். அப்படியெனில், அவர்களின் பிரவேசம் எங்கு வரைக்கும் இருக்கும் என்றால், அதை இங்கு விளக்குகிறார்.

 

ருத்ர முதலான தேவதைகள், அனிருத்த தேகத்தில் வசித்து இந்திரியங்களின் செயல்களை செய்யாமல் இருப்பார்கள். ஏனெனில், அந்த சரீரத்தில் இந்திரிய வியாபாரங்கள் இருப்பதில்லை. அதற்கு அப்பால் இருக்கும் ஸ்தூல தேகத்தில், தத்வாபிமானிகளான தேவதைகளும், தைத்யர்களும் இருப்பார்கள். இந்த இருவரும், ஒருவருக்கொருவர் சவால் விட்டுக்கொண்டு, முக்யபிராண தேவரின் ஆணையின் பேரில், முறையே புண்ணிய, பாவ கர்மங்களை அந்த ஸ்தூல தேகத்தில் செய்து வருகின்றனர். 

No comments:

Post a Comment