ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Thursday, June 11, 2020

#3 - மாத்ருகா சந்தி

ஐது3மேலொந்த3தி4க த3வு

ள்ளைது3 பத்3மவு நாபி4மூலதிd

ஐது3 மூர்த்திக3ளிஹவு அனிருத்தா3தி3 நாமத3லி |

ஐதி3ஸு13ர்ப்ப4வனு ஜீவர

நாதி3 கர்ம ப்ரக்ருதி கு3ணத3

ஹாதி3 தப்பலிகொடதெ3 வ்யாபாரக3ள மாடு3திஹ ||3

 

ஐது மேலொந்ததிக தளவுள்ள = 5+1=6 தளங்களைக் கொண்ட

ஐது பத்மவு = 5 தாமரைகள்

நாபி = நாபியில்

மூலதி = கீழே (5 தாமரைகள் இருக்கின்றன).

இவற்றில்,

அனிருத்தாதி நாமதலி = அனிருத்தாதி 5 நாமங்களைக் கொண்ட

ஐது மூர்த்திகளிஹவு = 5 ரூபங்கள் இருக்கின்றன

ஜீவர = ஜீவர்களுக்கு

கர்ப்பவனு = கர்ப்பஸ்தானத்தை

யைதிஸுத = கொடுத்தவாறு

அனாதி கர்ம = அனாதி கர்மங்களை

ப்ரக்ருதி குணகள = ப்ரக்ருதி சம்பந்தமான ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களை

ஹாதி தப்பலிகொடதெ = யோக்யதையை மீறாதவாறு

வ்யாபாரகள மாடுதிஹ = வியாபாரங்களை செய்கிறான், செய்விக்கிறான்.

 

ஐது மேலொந்ததிக தளவுள்ளைது பத்மவு நாபிமூலதிஎன்னும் வாக்கியத்திற்கு சாதாரணமாக நாபி மூலத்தில் 6 தளங்களைக் கொண்ட 5 தாமரைகள் இருக்கிறது என்றும், அவற்றில், அனிருத்தாதி 5 ரூபங்கள் உள்ளன என்றும் அர்த்தம் சொல்லலாம். மானஸ ஸ்ம்ருதி என்னும் கிரந்தத்தில்

 

ததஸ்ஸுஷும்னா ஸம்ஸக்தா நாபி ஸம்ஸ்தேஷு பஞ்சஸு |

ஷட்தளாருண பத்ரேஷு அனிருத்தாதிர் காஸ்மரேத் ||

 

என்பதே இதற்கு ஆதாரமாக இருக்கிறது. தந்த்ரசாரத்தில் 4ம் அத்தியாயம், 160ம் ஸ்லோகத்தில் :

 

மூலாதாரம் ஸமாரப்ய த்வாமூர்த்தான ம்ருஜுஸ்திதா |

மத்யேஸுஷும்னா விக்ஞேயா வஜ்ரிகார்யா ப்ரகாஷினி |

வைத்யுதா பிரம்ம நாடீதி ஸைவ பஞ்சப்ரபேதினி ||161

ப்ருஷ்டவாமாக்ர தக்‌ஷாந்தர் பேதாஸ்தேச க்ரமேணது |

ப்ரத்யும்னாதி ஸ்வரூபேண த்யேயம் ஸித்திமபீப்ஸிதா ||

 

இதன் பொருள்:

 

மத்யே = சரீரத்தின் நடுவில்

மூலாதாரம் = மூலத்தில்

சமாரப்ய = துவக்கத்தில்

ஆமூர்த்தானம் = தலை வரைக்கும்

ருஜுஸ்திதா = நீளமாக இருப்பது சுஷும்னா நாடி

 

இதன் கருத்து என்னவென்றால், மல மூத்திர உறுப்புகளுக்கு நடுவே, 2 அங்குல நீளம், 4 அங்குல அகலம் உள்ள உருண்டையான ஒரு பொருள் இருக்கிறது. அதிலிருந்தே நாடிகள் துவங்கியிருக்கின்றன. சுஷும்னா நாடி அங்கிருந்தே புறப்படுகிறது. அந்த ஒரு நாடியே, வஜ்ரிகா, ஆர்யா, ப்ரகாஷினீ, வைத்யுதா, பிரம்ம நாடி என்னும் 5 வேறுபாடுகளைக் கொண்டிருக்கிறது. ஒன்றிற்க்கு 5 ரூபங்கள் எப்படியெனில்:

 

இதே சுஷும்னா நாடியின் :

 

* பின்புறத்திற்கு வஜ்ரிகெஎன்று பெயர்.

* இடது பக்கத்திற்கு ஆர்யா

* முன் பக்கத்திற்கு ப்ரகாஷினி

* வலது பக்கத்திற்கு வைத்யுதா என்று பெயர்.

* நடு பாகத்திற்கு பிரம்ம நாடி என்று பெயர்

இந்த 5 இடங்களில் முறையே பிரத்யும்ன, அனிருத்த, வாசுதேவ, சங்கர்ஷண, நாராயண ஸ்வரூபங்களைக் கொண்ட பரமாத்மனை சிந்திக்க வேண்டும்.

 

மூலேச நாபௌ ஹ்ருதயேந்த்ரியோனி ப்ரூமத்ய மூர்த்னி த்விஷடந்தகேஷு ||161

சதுர்த்விஷஷ்டம் த்விசதுர்த்விஷட் கந்தளேஷுபத்மேஷு ஸிதாருணேஷு |

பஞ்சாத்மகோஸௌ பகவான்ஸத்யைவ த்யேயோஹ்ருதந்தான்யருணா நிதானி ||164

 

இந்த பத்யங்களின்படி, சுஷும்னா நாடியில் மூலத்திலும், நாபி, ஹ்ருதய, இந்த்ரயோனி, ப்ரூமத்ய, தலை என்னும் 6 இடங்களில் 6 தாமரைகள் இருக்கின்றன. அங்கு

 

* 4 தள தாமரை 1.

* நாபியில் 6 தளங்களைக் கொண்ட தாமரை 1

* மார்பில் 8 தளங்களைக் கொண்ட தாமரை 1

* தைத்திரிய உபநிஷத்தில் அந்தரேண தாளுகேய ஏஷஸ்தன இனாவலம்பதே, ஸேந்த்ரயோனி:என்று இந்திரயோனியின் லட்சணத்தை சொல்லியிருப்பர். அதாவது, கழுத்தின் நடுவில் உருண்டையாக இருப்பதே இந்திரயோனி. அந்த இந்திரயோனியில் 2 தள தாமரை 1.

* புருவங்களுக்கு நடுவில் 4 தள தாமரை 1.

* தலையில் 12 தள தாமரை 1.

 

என்று 6 தாமரைகள் உள்ளன. இந்த தாமரைகளில் சில சிவப்பாகவும், சில வெள்ளையாகவும் இருக்கின்றன. எது சிவப்பு எது வெள்ளை என்றால், ‘ஹ்ருதந்தான்யருஹானி’ - மூல, நாபி, மார்பு இந்த மூன்று தாமரைகளும் சிவப்பு. அவற்றிற்கு மேல் இருக்கும் தாமரைகள் மூன்றும் வெள்ளை. இவற்றில், பஞ்சாத்மகனான பரமாத்மனை - அனிருத்த, ப்ரத்யும்ன, வாசுதேவ, சங்கர்ஷண, நாராயண என்னும் 5 ரூபங்களை முறையே தியானிக்க வேண்டும் என்று சலாரி ஆசார்யரின் வியாக்யானத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

 

இது மட்டுமல்லாமல், சுஷும்னா நாடிக்கு 4 பக்கங்களிலும் 4 நாடிகள் இருக்கின்றன.

 

இடாச பிங்களாசைவ வஜ்ரிகா தாரிணேததா |

ஸபகர்வா ஹ்ருதயே ஸவ்யவஸ்தித: ||

 

அதே தந்த்ரசார 4ம் அத்தியாயத்தின் மேற்சொன்ன ஸ்லோகத்தின் அர்த்தம் பின்வருமாறு:

 

சுஷும்னா நாடிக்கு நான்கு திசைகளிலும் இடா, பிங்களா, வஜ்ரிகா, தாரணி என்னும் நான்கு நாடிகள் உள்ளன. இவற்றில், அனிருத்தாதி 4 ரூபங்களால் 4 நாடிகளிலும், நாராயண ரூபத்தினால் சுஷும்னா நாடியிலும் இருக்கிறான். ஆனால் இடா, பிங்களா என்னும் கிரமத்தில் அனிருத்தாதிகள் இருக்கிறார்கள் என்னும் விஷயத்தை விளக்குவதற்காக வஜிரகாத்யாஸுஎன்று சொல்லியிருக்கிறார்கள். வஜ்ரிகாவில் தொடங்கி அனிருத்தாதி ரூபங்கள் இருக்கின்றன. இதன் விவரம் சாந்தோக்யோ உபநிஷத்தில் இருக்கிறது.

 

ஸயேஷ ஹ்ருதினாடீஷு பஞ்சரூப: ப்ரதிஷ்டித: |

நாராயணாக்யம் ஸௌஷுய்னம் மத்யகம் ரக்தவர்ணகம் ||

ஷுக்லந்து வாஸுதேவாக்யம் நந்தின்யாமக்ரத ஸ்திதம் |

பிங்களாயாம் பிகளஞ்ச ரூபம் சங்கர்ஷணாபிதம் ||

பக்‌ஷிமேவஜ்ரிகாயாஞ்ச பீதம் ப்ரத்யும்ன நாமகம் |

இடாயாமனிருத்தாக்யம் நீலரூபம் வ்யவஸ்திதம் ||

 

சுஷும்னத்திற்கு

மேற்கில் இருக்கும் வஜ்ரிகா நாடியில் மஞ்சள் வர்ணனாக ப்ரத்யும்ன,

வடக்கில் இருக்கும் இடா நாடியில் நீல வர்ணனாக அனிருத்தன்,

கிழக்கில் இருக்கும் பிங்களா நாடியில், பழுப்பு நிறத்தில் சங்கர்ஷண

தெற்கில் இருக்கும் நந்தினி நாடியில், வெள்ளை நிறத்தில் வாசுதேவ

நடுவில் சுஷும்னா நாடியில் சிவப்பு வர்ணனாக நாராயண

 

என 5 ரூபங்களால் பகவந்தன் இருக்கிறான். இதைப் போன்ற ஆதாரங்களின் பேரிலேயே, ‘ஐதுமேலொம்ததிக தளவுள்ளைது பத்மவு நாபிமூலதிஎன்னும் பதங்களுக்கு, ஒவ்வொரு இடங்களிலும் 5-5 தாமரைகள் என்னும் அர்த்தம் சொல்வது அர்த்தமற்றது. 5 இடங்களில் 5 தாமரைகள் என்றும், இன்னொரு தாமரை, கண்ணிற்குத் தெரியாதவாறு தலையிலிருந்து 12 அங்குலம் வரை உள்ளே இருக்கிறது என்றும் அறியவேண்டும்.

 

இந்த வாக்கியத்திற்கும் மானஸஸ்ம்ருதி வாக்கியத்திற்கும் வேறுபாடு வரலாம். இதை எப்படி புரிந்து கொள்ளவேண்டுமெனில், நாபியில் 6 தள தாமரைகள், 5 இருந்தாலும், அவை ஒரே இழையில் சேர்ந்துகொண்டு, ஒன்றுக்கொன்று சம்பந்தப்படாமல் இருப்பதால், அவை ஒரே தாமரை என்பது ஸ்ரீமதாசார்யரின் அபிப்பிராயம். மானஸ ஸ்ம்ருதியின் வாக்கியத்தை அனுசரித்து, தாசராயர், அவை வெவ்வேறான 5 தாமரைகள் என்று சொல்லியிருக்கிறார் என்று அறியவேண்டும். இப்படி, 5 தாமரைகளில், அனிருத்தாதி 5 ரூபங்களால் பரமாத்மன் இருந்து, அவரவர்களின் கர்மங்களுக்கேற்ப ஜீவர்களை கர்ப்பத்திற்குக் கொண்டு வந்து, பிறக்க வைத்து, அனாதி கர்மங்களை செய்து, செய்விக்கிறான்.


No comments:

Post a Comment