ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Thursday, June 11, 2020

#2 - மாத்ருகா சந்தி

கபில சார்வங்கா3தி3 ரூபதி3

வபுக3ளொளு ஹஸ்தக3ந்தி4யொ

ளபரிமித கர்மக3ள மாடு3தலிப்ப தி3னதி3னதி3 |

க்ருபணவத்ஸல பார்ஷ்வதொ3ளு பர

ஸு2லி எனிஸுவ கு33 உபஸ்த2தி3

விபு3லிப41 மனுவெனிஸி துந்தி3யொளகி3ருதிஹனு ||2

 

கபில சார்வங்காதி ரூபதி = கபில, சார்வங்க முதலான ரூபங்களால்

ஹஸ்தகள சந்தியொளு = வலது, இடது கைகளின் மூட்டுகளில் இருந்து

தினதினதி = தினந்தோறும் / எப்போதும்

அபரிமித = எல்லைகள் அற்ற (எண்ணிக்கை அற்ற)

கர்மகள = கர்மங்களை

மாடுதலிப்ப = செய்து வருகிறான்

க்ருபணவத்ஸல = (பக்தர்களாக இருந்து, ஜிதேந்திரியர் ஆகாதவர்கள் க்ருபணர்கள்). அத்தகைய பக்தர்களின் ப்ரியம் கொண்ட ஸ்ரீஹரி.

பார்ஷ்வதொளு = வல இட பக்கங்களில்

பரசுபலியெனிசுவ = பர மற்றும் பலி என்னும் சுரூபங்களால் இருக்கிறான்

குத உபஸ்ததி = மல மூத்ர இந்திரியங்களில்

விபுள = நிலைத்திருக்கும்

பலிபக = பலி, பக என்னும் ரூபங்களில் இருக்கிறான்

மனவெனிஸி = மன என்னும் பெயரில்

துந்தியொளகெ = நாபியின் கீழ்ப்பாகத்தில்

இருதிஹனு = இருக்கிறான்.

 

முந்தைய பத்யத்தில் ட1, 2, 3, 4, , 1, 2, 3, 4, ந என்னும் 10 எழுத்துக்களின் பகவத்ரூபங்களை சிந்திப்பதைப் பற்றி சொல்லியிருந்தார். இந்த பத்யத்திலிருந்து துவங்கி, க முதல் ச வரிசையில் உள்ள பகவத் ரூபங்களை சிந்திப்பதைப் பற்றி விவரிக்கிறார்.

 

1=கபில, 2=கபதி, 3=கருட, 4=கர்ம, ஞ=ஞஸார என்னும் 5 ரூபங்களை வலது கை, தோளின் மூட்டு, முழங்கை சந்தி, விரல் நுனி, விரல் நடுவே இருக்கும் மூட்டு என இந்த 5 சந்திகளில் சிந்திக்க வேண்டும். இதைப்போலவே, 1=சார்வாங்க. ச2=சந்தோகம்ய, 1=ஜனார்த்தன, 2=ஜாடிதாரி ங=யம என்னும் 5 ரூபங்களை இடது 5 சந்திகளில் சிந்திக்க வேண்டும்.

 

ப-வர்க்கத்திற்கான இடங்களை சொல்கிறார். க்ருபணவத்ஸலனான ஸ்ரீஹரி, 1=பர என்னும் ரூபத்தினாலும், 2= பலி என்னும் ரூபத்தினாலும் இரு பக்கங்களில் இருக்கிறான். ப3=பலி, 4=பக எனும் இரு ரூபங்களால் மலமூத்ர உறுப்புகளில் இருக்கிறான். ம=மனு என்னும் ரூபத்தினால் நாபிக்கு கீழ் பாகத்தில் இருக்கிறான். இப்படியாக சிந்திக்க வேண்டும் என்பது கருத்து.


No comments:

Post a Comment