ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Sunday, June 7, 2020

#26 - பஞ்சதன்மாத்ர சந்தி

ஸ்ரீரமேஷன மூர்த்திக3ளு நவ

நாரி குஞ்சரத3ந்தெ1 ஏகா1

கா1ர தோ1ர்ப்புவு அவயவாஹ்வய அவயவக3ளல்லி |

பே3ரெ பே3ரெயெ க1ங்கொ3ளிஸுவ ஷ

ரீரதொளு நானாப்ரகார வி

கா1ரசூன்ய விராடனெனிசுவ பது3மஜாண்ட3தொ3ளு ||26

 

ஸ்ரீரமேஷன = ஸ்ரீலட்சுமிபதியின்

மூர்த்திகளு = ரூபங்கள்

நவனாரி குஞ்சரதந்தெ = 9 பெண்களைக் கொண்ட ஒரு யானையின் ரூபமாக செய்வதற்கு நவனாரி குஞ்சர என்று பெயர். இதைப்போல

ஏககார தோர்ப்புவு = ஒரே உருவமாகத் தெரியும்

அவயவாஹ்வய = அவயவங்கள் என்று பெயருள்ள ஸ்ரீஹரி

அவயவகளல்லி = கை, கால் முதலான அவயவங்களில்

பேரெ பேரெய கங்கொளிசுவ = கை வேறு, கால் வேறு என்று காட்டிக் கொள்கிறான்

ஷரீரதொளு = சரீரங்களில்

நானாப்ரகார = அனேக விதங்களாக

ஏகாரஷூன்ய = நிர்விகாரனாக இருக்கிறான்.

பதுமஜாண்டதொளு = பிரம்மாண்டத்தில்

விராடனெனிசுவ = பிரம்மாண்டத்தையே தன் சரீரமாக செய்துகொண்டு விராட்புருஷன் என்று பெயர் உள்ளவனாக இருக்கிறான்.

 

நவனாரி குஞ்சர என்னும் படத்தில் எப்படி 9 பெண்களின் உடல்கள் ஒரே யானை போல தோன்றுகிறதோ, மற்றும் அவர்களை வேறுபடுத்தினால் ஒன்பது பெண்கள் எப்படி தனித்தனியாக இருப்பரோ, அப்படியே ஒவ்வொரு சரீரத்திலும் தானே கை, கால் முதலான அவயவங்களின் ரூபனாக, 24 தத்வங்களின் பெயர்களில், ஒரே சரீரமாக காண்பித்துக் கொள்கிறான்.

 

ஞானிகளுக்கு

* கைகளில், கையின் உருவமாக, கை என்று அழைத்துக்கொண்டு,

* பாதங்களில், பாதத்தின் உருவமாக, பாதம் என்று அழைத்துக்கொண்டு,

 

இப்படியே ஒவ்வொரு உறுப்பிலும், அந்தந்த உருவமாக, அந்தப் பெயரில் வெவ்வேறாகத் தெரிகிறான். இப்படி இருந்தாலும், மனுஷ்யாதிகளின் சரீரத்தின் உறுப்புகளுக்கு வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றில் அந்தர்யாமியாகி தான் நிர்விகாரனாக இருக்கிறான். இது மட்டுமல்லாமல், 14 உலகங்களாலான இந்த பிரம்மாண்டத்தையே தனது சரீரமாக ஆக்கிக்கொண்டு, தானே கை, கால்களின் உருவத்தில் காண்பித்துக் கொண்டு, ’விராட்ரூபிஎனப்படுகிறான். பாதாள மேதஸ்யஹி பாரமூலம்என்னும் பாகவத 2ம் ஸ்கந்த வாக்கியங்களால், விராடரூபத்தை புரிந்து கொள்ளலாம். இத்தகைய மகாமகிமைகளைக் கொண்டவன் பரமாத்மன் என்பது பொருள்.

***
 

No comments:

Post a Comment