சித்தஜேந்த்3ரரு மனதொ3ளிப்பரு
க்ருத்திவாஸனு அஹங்காரதி3
சித்த சேதனமானிகளு விஹகே3ந்த்ர ப2ணிபரொளு
நித்யத3லி நெலெகொண்டு3 ஹத்தொ
ம்ப3த்துமொக3 தைஜஸனு ஸ்வப்னா
வஸ்தெ2வைதி3ஸி ஜீவரனு ப்ரவிவிக்த பு4கு3வெனிப ||13
சித்தஜேந்த்ரரு = மன்மதன், தேவேந்திரன் முதலானவர்கள்
மனதொளு = மனதிற்கு அபிமானியாக
இப்பரு = இருக்கிறார்கள்
க்ருத்திவாசனு = தோல் ஆடையை தரித்திருக்கும்
ருத்ரதேவர்
அஹங்காரதி = அஹங்கார தத்வத்தில் (இருக்கிறார்)
சித்தசேதன மானிகளு = சித்த, சேதன இவற்றிற்கு அபிமானிகளான
விஹகேந்த்ர = பறவைகளில் சிறந்தவனான கருட
பணிபரொளு = மிகச்சிறந்தவனான சேஷ
நித்யதலி நெலெகொண்டு = தினந்தோறும் (எப்போதும்)
இருந்துகொண்டு
ஹத்தொம்பத்து மொக = 19 முகங்களைக் கொண்ட
தைஜஸனு = தைஜஸ நாமக பரமாத்மன்
ஜீவரன = ஜீவர்களை
ஸ்வப்னாவஸ்தெ = ஸ்வப்ன அவஸ்தையை
யைதிஸி = கிடைக்குமாறு செய்து
ப்ரவிவிக்த = விசேஷமான ஏகாந்த பதார்த்தங்களை (ஸ்வப்ன
பதார்த்தங்களை)
புக் = உண்ண வைக்கிறான்
எனிப = என்று அழைக்கப்படுகிறான்.
மனதில் மன்மதன், இந்திரன் இவர்கள் இருவரும் இருக்கிறார்கள். அஹங்கார தத்வத்தில் ருத்ரர்
இருக்கிறார். சித்தாபிமானி கருடன் சித்தத்தில் இருக்கிறான். சித்தாபிமானிகள்
பிரம்ம,
வாயுகள் என்று பாகவதத்தில் வாக்கியம் இருந்தாலும், முக்யாபிமானிகள் பிரம்ம வாயுகள், அமுக்யர்கள் கருடன் என்று
அறியவேண்டும். சேதனத்திற்கு அபிமானிகள் சேஷதேவர். இவர் சேதனத்தில் இருப்பவர்.
இவர்களில் விஸ்வ நாமக பரமாத்மனில் இருப்பதைப்போலவே, நடுவில் கஜமுகன், இடது பக்கத்தில் 9 மனித முகங்கள், வலது பாகத்தில் 9 மனித முகங்கள், என 19 முகங்களைக் கொண்ட தைஜஸ நாமக பரமாத்மன் இருந்து ஜீவருக்கு ஸ்வப்னாவஸ்தையைக்
கொடுத்து,
அதாவது, ஸ்வப்னத்தில் யானை, குதிரை முதலான பதார்த்தங்களை
ஸ்ருஷ்டித்து, அவற்றை ஜீவர்களுக்கு சம்பந்தப்படுத்தி, ஜீவர்களுக்குள் தான் இருந்து, அந்த சுகங்களை அனுபவித்து, ஜீவனுக்கு உண்ணக் கொடுப்பதால், ஜீவனுக்கு ஸ்வப்னத்தில் காணும்
பதார்த்தங்கள், அவனது ஸ்வப்னத்தில் மட்டுமே தெரியுமே தவிர, வேறு யாருக்கும் தெரிவதில்லை. ஆகையால், ‘ப்ரவிவிக்த புக்’ என்றார். தனிமையில் பிறக்கும் பொருட்களின் சம்பந்தத்தினால் கிடைக்கும் ஸ்வப்ன
சுகத்தை அனுபவிக்கிறான் என்று பொருள்.
No comments:
Post a Comment