ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Thursday, June 18, 2020

21-25 மாத்ருகா சந்தி

அப்த3யன ருது மாஸ பக்‌ஷ ஸு

ஷப்ததிந்த3லி கரெஸுதலி நீ

லப்த வர்ணனிருத்த3 மொதலாதை3து3 ரூபத3லி |

ஹப்பிஹனு சர்வத்ரத3லி கரு

ணாப்4தி நால்வத்தைது3 ரூபதி3

லப்4யனாகு3வனீபரிய தே4னிசுவ ப4குதரிகெ3 ||21

 

அப்த = மழை

அயன, ருது, மாஸ, பக்‌ஷ, இவற்றின்

சுஷப்ததிந்தலி = உத்தமமான பெயர்களால்

கரெஸுத = அழைக்கப்பட்டு

நீலாப்ஜவர்ண = நீல குவளையைப் போல வண்ணம் கொண்ட

அனிருத்த மொதலாத ஐது ரூபதலி = அனிருத்த முதலான 5 ரூபங்களில்

சர்வத்ரதலி = அனைத்து இடங்களிலும்

கருணாப்தி = கருணா சமுத்திரனான ஸ்ரீபரமாத்மன்

ஹப்பிஹனு = வியாப்தனாக இருக்கிறான்

ஈ பரி = இப்படியாக

தேனிஸுவ = தியானம் செய்யும்

பகுதரிகெ = பக்தர்களுக்கு

நால்வத்தைது ரூபதி = 45 ரூபங்களால்

லப்யனாகுவனு = தியானத்தில் தெரிகிறான்.

 

ஆண்டு 1

அயனம் 2

ருது 6

மாதம் 12

பட்சம் 24

என மொத்தம் 45 ரூபங்கள்.

 

கருணா சமுத்திரனான ஸ்ரீஹரி 45 ரூபங்களால், மேற்சொன்ன சம்வத்ஸராதிகளில் அந்தந்த பெயர்களில் இருந்து, இந்த 45 பெயர்களை அறிந்து யார் பரமாத்மனை தியானிக்கிறார்களோ, அத்தகைய பக்தர்களுக்கு தியானத்தில் தன்னை காட்டிக் கொள்கிறான்.

 

ஐது3ரூபாத்மகனு இப்ப

த்தைது3 ரூபத3லிப்ப மத்ஹதி3

நைது3 திதி2 இப்பத்து நாலகரிந்த3 பெச்சிலு |

ஐது3வுது3 அரவத்ததி4

ரைது3 தி3ஸாஹ்வயனொளகெ3 மன

தொய்த3வகெ3 தாபத்ரயத3 மஹதோஷ வெல்லிஹுது3 ||22

 

ஐது ரூபாத்மகனு = அனிருத்தாதி 5 ரூபாத்மகனான ஸ்ரீஹரி

இப்பத்தைது ரூபதலிப்ப = அப்யாதி (ஆண்டுகளில் தொடங்கி) ஐந்திலும், ஒவ்வொன்றிலும் 5 ரூபங்களில் இருந்து

இப்ப = இருக்கிறான்

அதினைது திதி = பிரதமை முதல் பௌர்ணமி வரையிலான சுக்ல பட்சத்தில் 15 திதிகளில் மற்றும் பிரதமை முதல் அமாவாசை வரையிலான கிருஷ்ண பட்சத்தில் 15 திதிகளில்

இப்பத்து நால்கரிந்த பெச்சிஸலு = ஒரு ஆண்டில் இருக்கும் 24 பட்சங்களில் இதை பெருக்கினால் (24*15)

அரவத்ததிக முன்னூரு = 360 நாட்கள்

யைதுவது = ஆகிறது

ஆத திவஸாஹ்வய = அந்த நாட்களின் பெயர்களைக் கொண்ட பரமாத்மனுக்குள்

மனதோய்தவகெ = நன்றாக மனது வைத்தவனுக்கு

தாபத்ரய = கஷ்டங்கள்

மஹதோஷ = பெரிய தோஷங்கள்

எல்லிஹது = எங்கு இருக்கிறது? (இல்லை என்று பொருள்).

 

அனிருத்தாதி 5 ரூபனாத ஸ்ரீஹரி, சம்வத்ஸர, அயன, ருது, மாஸ, பட்ச என்னும் ஐந்தில் ஒவ்வொன்றிலும், அனிருத்த, ப்ரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ, நாராயண என்னும் ஐந்து ரூபங்களில் இருக்கிறான். இப்படி அனிருத்தாதி 5 ரூபங்களை, சம்வத்ஸராதி 5ல் பெருக்கினால், 25 வருகிறது. இந்த 25 ரூபங்களால் பரமாத்மன் சம்வத்ஸராதிகளில் இருக்கிறான். மேலும் 1 பட்சத்திற்கு 15 திதிகள். ஒரு மாதத்திற்கு சுக்ல, கிருஷ்ண என்று 2 பட்சங்கள். 12 மாதங்களுக்கு 24 பட்சங்கள். பரமாத்மன் 360 ரூபங்களால் அந்த நாட்களில் திவசஎன்று அழைக்கப்பட்டு இருக்கிறான். இத்தகைய பரமாத்மனில் மனதை வைத்து திடமாக சிந்திப்பவர்களுக்கு கஷ்டங்கள் என்னும் தோஷங்கள் என்றும் வருவதில்லை என்று பொருள்.

 

தி3வஸ யாம முஹூர்த்த க4டிகா

த்3வயவக3ளொளகி3த்து க3ங்கா3

ப்ரவஹத3ந்த3தி3 கால நாமக ப்ரவஹிஸு1லிப்ப |

இவன கு3ண ரூப க்ரியங்க3

நிவஹதொ3ளு முளுக்3யாடு3தலி பா4

ர்க3வி தானந்தா3த்மளாகி3ஹ ளெல்லகாலத3லி ||23

 

திவஸ = பிரதமை முதலான திதிகள்; அல்லது பகல்

யாம = நாழிகை

முகூர்த்த = 2 நாழிக்கைக் காலம்

கடிகாதி = களிகை முதலான

அவயவகளொளித்து = காலங்களில் இருந்து

கங்காப்ரவஹதந்ததி = கங்கையின் பிரவாகத்தைப் போல

கால நாமக = கால நாமகனான பரமாத்மன்

ப்ரவஹிஸுதலி = கங்கை பிரவாகமானது எப்படி இடைவிடாமல் தொடச்சியாக வருகின்றதோ, அதைப்போல ஒரு நொடி முடிந்தால் அதைத் தொடர்ந்து அடுத்து வருகிறது

இப்ப = இருக்கிறான்

இவன = இந்த பரமாத்மனின்

குணரூப க்ரியங்கள = ஆனந்தாதி குணங்கள், அப்ராக்ருத ரூபங்கள், ஸ்ருஷ்ட்யாதி செயல்கள் இவற்றின்

நிவஹதொளு = குளத்தில்

முளுக்யாடுதலி = மூழ்கி எழுந்தால்

பார்கவி = ரமாதேவி

ஸதானந்தாத்மகளாகி = எப்போதும் ஆனந்தஸ்வரூபளாகி

இஹளு = இருக்கிறாள்

எல்ல காலதலி = பிரளயாதி காலங்களிலும் கூட.

 

நாட்கள், யாம, முகூர்த்த, களிகை ஆகியவை நாட்களின் அங்கமாகும். இவற்றில் கங்கா பிரவாகத்தைப் போல, கால நாமக பரமாத்மன் எப்போதும் பிரவகித்துக்கொண்டே இருக்கிறான். கங்கையில் தண்ணீர் பிரவாகமானது எப்படி இடைவிடாமல் தொடர்ச்சியாக வருகிறதோ, முன்சென்ற நீர் எப்படி மறுபடி திரும்பி வராதோ, அதுபோல களிகைக்குப் பின் களிகை, முகூர்த்தத்திற்குப் பின் முகூர்த்தம் என சென்று, அதுவே இரவு, பகல் என வருகிறது. சாதாரண நதியின் பிரவாகத்திலும்கூட இந்த நிலையே காணப்படும். அதற்கு கங்கை என்று ஏன் சொல்லவேண்டும் என்றால், மற்ற நதிகளில் சில காலம் தண்ணீரே இல்லாமல் காணப்படலாம். ஆகையால், தொடர்ச்சியாக இருக்கக்கூடிய கங்கையை உதாரணமாக கொடுத்தார் என்று அறியலாம்.

 

இத்தகைய பகவந்தனின் ஆனந்தாதி குணங்கள், அப்ராக்ருதமான அனந்தானந்த ரூபங்கள், ஸ்ருஷ்ட்யாதி அனந்தானந்த செயல்கள், இவற்றைக் கொண்ட பகவன் மகிமைகள் என்னும் பெரிய குளத்தில், ரமா தேவியர் மூழ்கியெழுந்து, அதாவது, அவற்றின் கரைகளைக் காணாமல், அவற்றைத் தேடும் முயற்சியில் நிரந்தரமாக இருக்கின்றனர் என்று பொருள். யாராவது ஒரு செயலை செய்யப்போய், அது முடியவில்லையெனில், மனம் கஷ்டப்படும். அப்படி ரமாதேவியரும் கஷ்டப்படுவாரோ என்றால், இல்லை. எப்போதும் ஆனந்தஸ்வரூபளாகவே, குதூகலத்துடன் பகவந்தனின் புதுப்புது மகிமைகளை தேடிக்கொண்டிருக்கிறார்.

வேத3ததிக3ளமானி லகுமி த4

ராத4ரன ரூப க்ரியெகள

தி3 மத்4யாந்தவனு காணதெ3 மனதி3 யோசிஸுத

ஆத3பெனெ ஈதனிகெ3 பத்னி க்ரு

போ13தி4யு ஸ்வீகரிஸி3னு லோ

காதி4பனு பி4க்‌ஷுகன மனெயௌதணவ கொம்ப3ந்தெ ||24

 

வேத ததிகள = வேதங்களுக்கு

மானி = அபிமானியான

லட்சுமி = லட்சுமிதேவியர்

தராதரன = தலைவனான, பரமாத்மனின்

க்ரியெ குணகள = செயல்களை, குணங்களின்

ஆதி மத்யாந்தவனு காணதெ = ஆதி, மத்திய, அந்தம் இவற்றைக் காணாமல்

ஈதனிகெ = இப்படிப்பட்டவருக்கு

பத்னி = மனைவி

ஆதபெனெ = அனைத்து அவதாரங்களிலும் நானே மனைவி ஆகிறேன் என்றூ

மனதி = மனதில்

யோசிஸுத = யோசித்தவாறு இருக்கிறார்

க்ருபோததியு = கருணைக்கடலான ஸ்ரீஹரி

லோகாதிபனு = மகாராஜன்

பிக்‌ஷுகன மனெயௌதனவ = ஏழையின் விருந்தை

கொம்பந்தெ = ஏற்றுக்கொள்வதைப் போல, ஏற்றுக்கொள்கிறான்.

 

வேத சமூகங்களுக்கு அபிமானியான ரமாதேவியர், ஸ்ரீபரமாத்மனின் குணரூபக்ரியைகளின் ஆதி, மத்ய, அந்தங்களைக் காணமுடியாமல், மனதில் வியப்படைந்தவாறு, இத்தகைய பரமாத்மனுக்கு, அனைத்து அவதாரங்களிலும் நானே மனைவியாக இருக்கிறேன் என்று சிந்திக்கிறாள். இப்படி தான் அவருக்கு எப்போதும் மனைவி ஆவோமோ இல்லையோ என்னும் சந்தேகம் ரமாதேவிக்கு இல்லை. எப்போதும் அவதாரம் ஆகும், எப்போதும் நான் அந்த அவதாரத்தின் மனைவியாவோம் என்னும் எதிர்பார்ப்பில் இருக்கிறார் என்று அர்த்தம். பரமாத்மன் ஸ்வ-ரமணன் ஆன காரணத்தால், ரமாதேவியரால் தனக்கு எதுவும் ஆகவேண்டியதில்லை என்றாலும், தான் கருணைக்கடலான காரணத்தால், அவளின் சேவைக்கு மகிழ்ந்து, ஏழையின் விருந்தை மகாராஜனானவன் ஏற்றுக்கொள்வதைப் போல, தான் அவளை ஏற்றுக்கொள்கிறான்.

 

கோவித3ரு சித்தைஸுவுது ஸ்ரீ

தேவியொளகி3ஹ நிகி2லகு3ண த்ருண

ஜீவரலி கல்பிஸி யுகுதியலி மத்து க்ரமதி3ந்த3

தே3வதே3வகி இப்பளெந்த3ரி

தா3 விரிஞ்ச ஜனனி ஈதன

ஆவகால3 அரியளந்தவ நரர பாடே3னு ||25

 

கோவிதரு = ஞானிகள்

சித்தைஸுவுது = இங்கு சொல்லப்படும் விஷயத்தை சித்தத்தில் வைத்துக் கொண்டு

ஸ்ரீதேவியொளகெ = ஸ்ரீதேவியில்

இஹ = இருக்கும்

நிகிலகுண = அனைத்து குணங்கள்

த்ருண ஜீவரலி = ஜீவர்களில் மிகச்சிறியதான கிருமி ஜீவிகளில்

கல்பிஸி = இருக்கிறான் என்று சிந்தித்து

யுகுதியலி = திட்டத்தில்

மத்து க்ரமதிந்த = த்ருண முதல் பிரம்மன் வரை இருக்கும் தாரதம்யத்தில் குணங்களை அதிகப்படுத்திக் கொண்டே போனால், எவ்வளவு குணங்கள் ஆகுமோ அவ்வளவு

தேவி தேவியு = தேவியர்களுக்கு தேவியான ரமாதேவி

இப்பளெந்து = இருக்கிறாள் என்று

அரிது = அறிந்து

ஆவிரிஞ்சிய = பிரம்மதேவர

ஜனனி = தாயான ரமாதேவியர்

ஈதன = இந்த பரமாத்மனின் மகிமைகளை

யாவகாலதலி = எல்லா காலங்களிலும்

அரியளு = அறியமாட்டார்கள்

எந்தேனே = என்றபிறகு

நரர பாடேனு = சாதாரண ஜீவர்களைப் பற்றி என்ன சொல்வது?

 

பண்டிதர்கள் இந்த விஷயத்தில் சிறிது கவனம் செலுத்த வேண்டும். லட்சுமிதேவியரிடம் இருக்கும் குணங்களானது, ஒரு அதம ஜீவியான கிருமியிடமும் இருக்கிறது என்று நினைப்போம். அந்த கிருமியைவிட உத்தம ஜீவர்களில் இருக்கும் குணங்களை எண்ணிக்கொண்டே வருவோம். இப்படி மனிதர், தேவதைகள் என தாரதம்யத்தின்படி குணங்களை எண்ணிக்கொண்டே வந்தால், பிரம்மதேவர் வரை வந்தால், எவ்வளவு குணங்கள் வருகிறது? அவ்வளவு குணங்கள் ரமாதேவியரிடம் இருக்கிறது என்று சிந்திப்போம். இத்தகைய குணங்களைக் கொண்ட ரமாதேவியர், தமது இவ்வளவு குணங்களால் பரமாத்மனின் குணங்களை எப்போதும் தேடிக்கொண்டிருந்தாலும், அவற்றின் கரையைக் காணமாட்டார். இவருக்கே இப்படி சொன்னபிறகு, அதி அல்பரான மனிதர்களின் கதி என்ன? பகவந்தனின் அருளினாலேயே பகவன் மகிமைகளை தத்தம் தகுதிக்கேற்ப சிறிதளவு அறியவேண்டும் என்பது பொருள். 

No comments:

Post a Comment