மௌளியொளிஹ வாசுதே3வனு
ஏளதி4க நவஜாதி3 ரூபவ
தா1ளி முக2தொ3ளு நயன ஸ்ரவணாத் யவயவக3ளல்லி |
ஆளரஸு தானாகி3 ஸத1த1 ஸு
லீலெகை3யுதலிப்ப சுக2மய
கே1ளி கே1ளிஸி நோடி3 நோடி3ஸி நுடி3து3 நுடி3ஸுவனு ||17
மௌளியொள = நெற்றியில்
இஹ = இருக்கிறான்
வாசுதேவனு = வாசுதேவ மூர்த்தி
ஏளதிக நவ = 7+9=16
அஜாதி ரூபவ தாளி = அ,ஆ,இ முதலான 16 எழுத்துக்களின் தலைவனான அஜ, ஆனந்த, இந்திர முதலான ரூபங்களை தரித்து
முகதொளு = முகத்தில்
நயன ஸ்ரவணாத்யவயவகளல்லி = கண், காது ஆகிய அவயவங்களில்
ஆளரஸு தானாகி = நண்பனும், தலைவனும் தானேயாகி
ஸதத = எப்போதும்
ஸுலீலெ கைவுதலிப்ப = மிகச்சிறந்த லீலைகளை
செய்திருப்பான்
சுகமய = சுகஸ்வரூபமான பரமாத்மன்
கேளி = காது கொடுத்து தான் கேட்டு
கேளிஸி = ஜீவனை கேட்கச் செய்து
நோடி = கண்களால் பார்த்து
நோடிஸி = ஜீவனை பார்க்கச் செய்து
நுடிது = தான் பேசி
நுடிஸுவனு = ஜீவர்களை பேசச் செய்வான்.
தலையின் நடுவில் இருக்கும் பிரம்மரந்த்ரம் என்று
சொல்லக்கூடிய இடத்தில், வாசுதேவ ரூபியான பரமாத்மன், அ-கார முதல் அ: வரை இருக்கும் 16 எழுத்துக்களின் தலைவனான, அஜ,
ஆனந்த, இந்திர முதலான 16 ரூபங்களை தரித்து, முகத்தில் கண், காது ஆகிய உறுப்புகளில், மாத்ருகான்யாசத்தில் சொல்லிய
விதத்தில், அந்தந்த இடங்களில், தலைவனாகவும், நண்பனாகவும் இருந்து, செயல்களை செய்கிறான். தான் சுக
ஸ்வரூபனாக இருந்தாலும், எதற்கும் சம்பந்தப்படாமல், அனைவரின் காதுகளில் தான் கேட்டு, ஜீவர்களை கேட்கச் செய்கிறான். தான்
பார்த்து,
ஜீவர்களை பார்க்கச் செய்கிறான். தான் பேசி, ஜீவர்களை பேசச் செய்கிறான்.
No comments:
Post a Comment