மத்தெ சித்தே3ஹத3 ஒளகெ3 எ
ம்ப3த்து1 சாவிரதே3ளுனூரி
ப்பத்த1யிது3 நரசிம்ஹ ரூபத3லித்து3 ஜீவரிகெ3 |
நித்யத3லி ஹக3லிருளு ப3ப்ப1ப1
ம்ருத்யுவிகெ3 தா ம்ருத்யுவெனிஸுவ
ப்4ருத்யவத்ஸல ப4யவினாஷன பா4க்யசம்ப1ன்ன ||15
மத்தெ = மேற்சொன்ன ரூபங்கள் இல்லாமல்
சித்தேஹத ஒளகெ = ஜீவனின் ஸ்வரூப தேகத்தில்
எம்பத்து சாவிரதேளு நூரிப்பத்தயிது = 80,725
நரசிம்ஹ ரூபதலித்து = நரசிம்ம ரூபத்தில் இருந்து
ஜீவரிகெ = ஜீவர்களுக்கு
நித்யதலி = எப்போதும்
ஹகலிருளு = இரவும் பகலும்
பப்ப = வருவான்
அபம்ருத்யுவிகெ = துர்மரணத்திற்கு
தா = தானே
அபம்ருத்யுவெனிஸுவ = தானே துர்மரணம் என்றவாறு
ப்ருத்யவத்ஸல = பக்தவத்ஸலன்
பயவினாஷன = பயங்களை போக்குபவன்
பாக்ய சம்பன்ன = செல்வங்களை அளிப்பவன்.
ஸ்வரூப தேகத்தில் இருக்கும் பகவத் ரூபங்களை
சொல்கிறார்.
நரசிம்ம என்னும் ரூபத்தின் எண்ணிக்கை ந=5 ர=2 ஸி=7 ம்=0 ஹ=8, 52708. இதனை வலது பக்கத்திலிருந்து பார்த்தால், 80725 ரூபங்களால் நரசிம்மன், ஜீவனின் ஸ்வரூப தேகத்தில் இருந்து, ஜீவருக்கு தினந்தோறும், இரவும் பகலும் வரும் துர்மரணத்திற்கே துர்மரணம் எனப்படுகிறார். அதாவது, துர்மரணத்தை பரிகரிக்கிறவன் என்று பொருள். தன் பக்தர்களில் மிகவும் அன்பு கொண்டவன், பக்தர்களின் பயங்களைப் போக்குகிறவன், ஆறு நற்குணங்களைக் கொண்டவன். ஆகையாலேயே, துர்மரணத்தைப் போக்குகிறான் என்று பொருள்.
No comments:
Post a Comment