ஹரிகதா2ம்ருதசார கு3ருக3ள
கருணதிந்தா3பநிது பே1ளுவே
பரம ப4கவத்3ப4க்தரித3னாத3ரதி கேளுவுது3
ஆவ பரபொ3ம்மனதி விமலா
ங்கவப3த்தரு எந்தெ3னிப ரா
ஜீவ ப4வமொத3லா த3மரரனுதி3னதி3 ஹரிபத3வ |
சேவிபரிக3னுகூல ரல்லதெ3
தாவு இவரனு கெடி3ஸப3ல்லரே
ஸ்ரீவிலாஸாஸ்பத3ன தா3சரிகு3ண்டே1 அபஜயவு ||1
ஆவ பரபொம்மன = எந்த ஸ்ரீபரமாத்மனின்
அதி விமல = மிக அழகான
அங்காவ பத்தரு = அங்கங்களை ஆதரவாக
எந்தெனிப = என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள்
ராஜீவபவ மொதலாத = பிரம்மதேவரே முதலான
அமரரு = தேவதைகள்
அனுதினதி = எப்போதும்
ஹரிபதவ = பரமாத்மனின் பாத கமலங்களை
சேவிதராகி = சேவை செய்பவர்களாக
அனுகூலரல்லதெ = அனுகூலர்களாக இருப்பார்களே தவிர
தாவு = பிரம்மாதி தேவதைகள்
இவரன = இந்த பக்தர்களை
கெடிஸபல்லரெ = கெடுப்பார்களா?
ஸ்ரீவிலாஸாஸ்பதன = லட்சுமிதேவியரின் மூலமாக பல
செயல்களைப் புரியும் பரமாத்மன்
தாசரிகெ = பக்தர்களுக்கு
உண்டே = இருக்கிறதா?
அபஜயவு = தோல்வி? (என்றும் இல்லை என்று பொருள்).
ஜீவனின் லட்சணங்களையும், ஸ்வரூபதேகத்தில், லிங்க தேகத்தில், அனிருத்த தேகத்தில் இருக்கும் பகவத் ரூபங்களையும் சென்ற சந்தியில் தாசராயர்
விளக்கியிருந்தார். இந்த சந்தியில், எந்தெந்த இடங்களில் எந்தெந்த
விதமாக பகவந்தனை சிந்திக்க வேண்டும் என்னும் விஷயத்தை சொல்வதற்காக, சர்வபிரதீக - அனைத்து இடங்களிலும் சிந்திக்க வேண்டிய பரமாத்மனின் ப்ரதிமா
ஸ்தானம் என்று பொருள். அத்தகைய சந்தியை இங்கு துவக்குகிறார்.
ஸ்ரீபரபிரம்மனின், மிகவும் அழகான அற்புதமான அங்கங்களை ஆதரவாகக் கொண்டிருப்பதால், பிரம்மாதி தேவதைகளுக்கு அங்காவபத்தர் என்று பெயர். இத்தகைய பரமாத்மனின் நாபிக் கமலத்திலிருந்து பிறந்த
பிரம்மதேவர் முதலான தேவதைகள், தினந்தோறும் ஸ்ரீபரமாத்மனின்
சேவையையே செய்துகொண்டிருக்கும் பக்தர்களுக்கு என்றைக்கும் விரோதம் செய்வதில்லை.
தத்வாபிமானிகள் அத்தகைய பக்தர்களின் பக்தியை மேலும் வளர்த்து சுக சாதனைகளையே
செய்விக்கின்றனர். லட்சுமிதேவியின் மூலமாக பல செயல்களைப் புரியும் ஸ்ரீபரமாத்மனின்
தாசர்களுக்கு தோல்வி என்பது உண்டா? என்றைக்கும் இல்லை.
அப்படியெனில், பாண்டவர்கள் கஷ்டப்பட்டதாக பாரத கிரந்தங்களில் சொல்லியிருப்பது பொய்யா? என்றால், ‘தேஷாம் துக்காதிகம் கிஞ்சிதஸுரா வேஷதோ பவேத்’ என்னும் பாகவத தாத்பர்யத்திற்கேற்ப, வினைப்பயன்களுக்கேற்ப சில
பக்தர்களுக்கு அவ்வப்போது துக்கங்கள் வந்தாலும், அவற்றை அவர்களுக்குள் இருக்கும் தைத்யர்களே அனுபவிப்பர். அந்த துக்கங்கள்
அவர்களின் முக்திக்கு தடங்கலாக இருப்பதில்லை. அதாவது, முக்திக்கு தடையாகும் பாவங்களை பரமாத்மன் அவர்களை செய்ய விடுவதில்லை. இதுவே
இந்த பத்யத்தின் கருத்து.
ஸ்ரீத2னங்க்4ரி சரொஜயுக3ளெ
காத3ஷ ஸ்தா2னாத்மதொ3ளகி3
ட்டா1த3ரதி3 ஸந்துதிஸுவவரிகெ3 ஈ நவக்3ரஹவு |
ஆதி3தே1யரு ஸந்த1தா1தி4
வ்யாதி4க3ள பரிஹரிஸுத1வரனு
காது3கொண்டி3ஹ ரெல்லரொந்தா3கீ3ஷ நாக்3ஞெயலி ||2
ஸ்ரீதன = ஞான ஐஸ்வர்யத்தைக் கொடுக்கும் பரமாத்மனின்
அங்க்ரி = பாதங்கள் என்னும்
சரோஜ = கமலங்கள்
யுகள = இரண்டையும்
ஏகாதஷ ஸ்தான்ன = 11ம் இந்திரியமான
ஆத்மதொளகெ = மனதில்
இட்டு = வைத்து
ஆதரதி = மரியாதை பக்தியுடன்
ஸந்துதிசுவ = நன்றாக ஸ்தோத்திரம் செய்யும்
பக்தரிகெ = பக்தர்களுக்கு
ஈ நவக்ரஹவு = நவக்கிரகம் என்று அழைக்கப்படும்
ஆதிதேயரு = தேவதைகள், அல்லது, சந்திரசூர்யாதி நவக்கிரகங்கள் / தத்வாபிமானி தேவதைகள்
யல்லரொந்தாகி = இவர்கள் அனைவரும் ஒன்றாக கூடி (ஒரே
மனதுடன்)
ஈஷன = பரமாத்மனின்
ஆக்ஞெயலி = ஆணைப்படி
ஸந்தத = எப்போதும்
ஆதி = மனோவ்யாதி
வ்யாதிகள = ரோகாதிகள் இவற்றை
பரிஹரிஸுத = பரிகரித்து
அவரன = அந்த பக்தர்களை
காதுகொண்டிஹரு = பாதுகாத்து வருகின்றனர்.
பரமாத்மனின் பக்தர்களுக்கு, சூர்ய, அங்காரக, சனி முதலான நவக்கிரக தேவதைகள்கூட உதவிகரமாகவே இருக்கிறார்கள் என்று
சொல்கிறார். பக்தர்களுக்கு ஞான, ஐஸ்வர்யங்களைக் கொடுக்கும்
பரமாத்மனை மனதில் வைத்து, எப்போதும் பஜித்துக்
கொண்டிருக்கும் பக்தர்களுக்கு நவக்கிரக தேவதைகளின் சஞ்சாரத்தினால் ஆபத்துகள்
வருவதில்லை என்கிறார்.
த்வாதஷாஷ்டம ஜன்மஸ்தா: ஷன்யர்காங்கார கோகுரு: |
குர்வந்தி ப்ராணஸந்தேஹம் ஸ்தானப்ரஷ்டம் தனக்ஷயம் ||
சனி, சூர்ய, அங்காரக, குரு ஆகிய கிரகங்கள் ஒருவருடைய ஜென்ம ராசியிலிருந்து 12, 8ம் ஸ்தானங்களுக்கு வரும்போது, அவர்களுக்கு மரணபயத்தைக்
காட்டுவார்கள். மற்றும் இடம் விட்டு இடம் பெயரச் செய்வார்கள். செல்வம் களையுமாறு
செய்வார்கள் என்னும் ஜ்யோதிட சாஸ்திரத்திற்கேற்ப சொல்லும் பலன்கள், வியாதிகள் ஆகியவற்றை பரிகரித்து, பகவந்தனின் ஆணைப்படி அவர்களை
காப்பாற்றுவார்கள்.
மேதி3னிய மேலுள்ள கோ3ஷ்பா
தோ3த3கக3ளெல்ல மலதீர்த்த2வு
பாத3பா1த்3ரி த4ராதளவெ சுக்ஷேத்ர ஜீவக3ண
ஸ்ரீத3ன ப்ரதிமெக3ளு அவரு
ம்போ3த3னவெ நைவேத்3ய நித்யதி3
ஹாதி3னடெ3வுதெ3 நர்தன க3ளெந்த3ரித1வனெ யோகி3 ||3
மேதினிய மேலுள்ள = பூமியின் மேல் இருக்கும்
கோஷ்பாதோதககளெல்ல = பசுவின் குளம்பில் தேங்கும்
நீரிலிருந்து துவங்கி, ஏரி,
குளம் வரைக்குமான நீர் நிலைகள் அனைத்தும்
அமல தீர்த்தவு = தோஷங்கள் அற்ற, தூய்மையான தீர்த்தம் என்று
பாதப = மரங்கள்
அத்ரி = மலைகள்
தராதலவெ = பூமி இவை அனைத்தும்
ஸுக்ஷேத்ர = உத்தமமான தீர்த்த க்ஷேத்திர
ஜீவகண = அனைத்து ஜீவகணங்கள்
ஸ்ரீதன = ஞான, ஐஸ்வர்யங்களைக் கொடுப்பவனான ஸ்ரீஹரியின் பிரதிமைகளைவிட
அவரும்ப = அவர்கள் உணவு உண்ணும்
ஒதனவெ = அன்னமே
நைவேத்ய = நைவேத்தியம்
நித்யதிஹாதினடெவுதே = தினமும் நடக்கும் பாதையே
நர்த்தனகளு = நடனம்
எந்தரிதவனே = என்று அறிந்தவனே
யோகி = ஞானி
அனைத்துமே பரமாத்மனின் சன்னிதானம் என்று அறிந்து
உபாசனை செய்பவர்களுக்கு, அவை தீர்த்தங்களாகவும், க்ஷேத்திரங்களாகவும், ப்ரதிமைகளாகவும், தெரிகிறது. இப்படி உபாசனை செய்வதற்கு வியாப்தோபாசனை என்று பெயர். தகுதி
உள்ளவர்களுக்கான வியாப்தோபாசனை செய்யும் கிரமத்தை இங்கு சொல்கிறார் தாசராயர்.
சாதாரணமான மாட்டுக் குளம்பில் தேங்கும் நீர் மிகவும்
குறைவாகவே இருக்குமல்லவா? அவ்வளவு சிறிய நீரிலிருந்து, குளம் குட்டை ஏரி வரையிலான நீர்நிலைகள் அனைத்தும் தீர்த்தங்கள் என்றும், மரங்கள், மலைகள், பூமி முதலான அனைத்தும் உத்தம க்ஷேத்திரங்கள் என்றும், ஜீவகணங்கள் அனைத்தும் பரமாத்மனின் பிரதிமைகள் என்றும், அவர்கள் உண்ணும் அன்னாதிகளே நைவேத்தியம் என்றும், தினமும் வழியில் நடப்பதே நடனம் என்றும் யார் அறிகிறாரோ, அவர் சாமான்யமானவர் அல்ல. அவரையே மஹா ஞானிகள் என்று சொல்ல வேண்டும்.
சர்வதே3ஷவு புண்யதே3ஷவு
சர்வகாலவு புண்யகாலவு
சர்வஜீவரு தா3னபாத்ரரு மூரு லோகதொ3ளு |
சர்வமாதுக3ளெல்ல மந்த்ரவு
சர்வகெலஸக3ளெல்ல பூஜெயு
ஷர்வவந்த்யன விமலமூர்த்தி த்3யானவுள்ளவகெ3 ||4
சர்வவந்த்யன = ருத்ரதேவரால் வணங்கப்படும்
ஸ்ரீபரமாத்மனின்
விமல = தூய்மையான
மூர்த்தி = மூர்த்திகளை
த்யான உள்ளவகெ = என்றைக்கும் சிந்திக்கும்
வியாப்தோபாசகர்களுக்கு
சர்வதேசவு புண்யதேசவு சர்வகாலவு புண்யகாலவு = அனைத்து
இடம், காலங்களும் புண்ணிய இடங்கள், காலங்களே
மூரு லோகதொளு = மூன்று உலகங்களிலும் இருக்கும்
சர்வஜீவரு தானபாத்ரரு = அனைத்து ஜீவர்களும் தான
பாத்ரர்களே
சர்வமாதுகளெல்ல = பேசும் பேச்சுக்கள் அனைத்தும்
மந்த்ரவு = ஜெபிக்க வேண்டிய மந்திரங்கள் எவ்வளவு
உண்டோ அவை அனைத்தும் என்று அறியவேண்டும்
சர்வகெலஸகளு = செய்யும் அனைத்து வேலைகளும்
எல்ல பூஜெயு = அனைத்து விதமான பகவத் பூஜைகள்
முந்தைய பத்யத்தில் சொன்னதையே இங்கு விவரிக்கிறார்.
மேலே சொன்னதைப் போல, அனைத்து இடங்களிலும் இருக்கும் பகவத்ரூபங்களை சிந்திக்கும்
வியாப்தோபாசகர்களுக்கு
கங்காதிகளே புண்ணிய தீர்த்தங்கள் என்றும்,
அயோத்யாதிகளே புண்யக்ஷேத்திரங்கள் என்றும்,
பிராம்மணாதிகளே தானபாத்ரர் என்றும்,
அஷ்டாக்ஷர த்வாதசாக்ஷரங்களே ஜெபிக்கத் தகுந்த
மந்திரங்கள் என்றும்,
பிரதிமாதிகளே பூஜைக்குத் தகுந்தவை என்று அல்ல.
தமக்குள் இருக்கும் பிம்ப மூர்த்தியை அனைத்து
இடங்களிலும் உபாசிக்கும் உபாசகர்களுக்கு ‘ப்ரணமேத் தண்டவத் தோமௌ அஷ்வசண்டால கோகரம்’ என்னும் பாகவத 11 ஸ்கந்த வாக்கியத்திற்கேற்ப நாய், பசு,
கழுதை முதலான அனைத்திலும் இருக்கும் பகவத்ரூபங்களுக்கு பரஸ்பரம் வேறுபாடு
இல்லையென்று உபாசனை செய்யவேண்டும் என்று அறியவேண்டும்.
ப்ரதிமாஸ்வ ப்ரபுத்தானம் சர்வத்ர விதிதாத்மனாம் -
என்னும் வாக்கியத்திற்கேற்ப, அப்ரபுத்தர் என்றால், அனைத்து இடங்களிலும் இருக்கும் பகவத் ரூபங்களை வேறுபாடின்றி ஒன்றாகவே அறியும்
யோக்யதை இல்லாதவர்கள் என்று பொருள். இத்தகையவர்கள், பிரதிமைகளிலேயே பூஜை செய்யவேண்டும். அத்தகைய ஞானம் உள்ளவர்கள், அனைத்து இடங்களிலும் உபாசனை செய்யலாம். மேலும், பாகவத 11ம் ஸ்கந்தத்தின்படி ‘யாவத்ஸர்வேஷு பூதேஷு
மத்பாவோனோபஜாயதே | தாவதேவ முபாஸீத’ என்னும் ஸ்ரீகிருஷ்ணனின் வாக்கியத்தின்படி, அனைத்து இடங்களிலும் இருக்கும் என் ரூபத்தில் யாருக்கு வேறுபாடு
தோன்றுவதில்லையோ, அவர்களும் பிரதிமாதிகளிலேயே பூஜிக்க வேண்டும் என்றார். ஆனால் இந்த உபாசனை
செய்வது ஒன்றும் கஷ்டமான விஷயமல்ல. அது எப்படி என்றால்:
பரமாத்மன் அனைத்து இடங்களிலும் கண்டிப்பாக
இருக்கிறான். பகவத்ரூபங்களுக்கு பரஸ்பரம் வேறுபாடு இல்லை. ஜீவ ஜடர்களைவிட
பரமாத்மன் வேறுபட்டவன் என்னும் சிறிதளவு ஞானம், கொஞ்சம் சாஸ்திரம் படித்தவர்களுக்கும்கூட இருக்கிறது. இப்படி இருக்கையில், அனைத்து இடங்களிலும் வியாப்தோபாசனை செய்கிறோம் என்று யாத்திரைகளை,
பூஜாதிகளை, ஜபங்களை விட்டுவிட வேண்டும் என்று
அர்த்தமல்ல. அறிவது என்றால் என்ன? வெறும் அறிவது மட்டும் அல்ல.
அறிந்தவற்றை அனுஷ்டானத்திற்கு கொண்டு வரவேண்டும். புலியைக் கண்டால், பாம்பைக் கண்டால், நமக்குள் இருக்கும் பகவத்ரூபத்திற்கும், ப்ரதிமாதிகளில் இருக்கும் பகவத் ரூபத்திற்கும், புலி ஆகியவற்றில் இருக்கும் பகவத் ரூபத்திற்கும் பரஸ்பரம் வேறுபாடு இல்லை
என்பது புரிந்தால், பிரமாதிகளில் நமக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கிறதோ, திருப்பதி முதலான க்ஷேத்திரங்களில் இருக்கும் ஸ்ரீனிவாசனின் பிரதிமைகளைக்
கண்டால் எப்படி பயமில்லாமல் நிற்கிறோமோ, நம் தேகத்தினால் நமக்கு எப்படி
பயம் இல்லையோ, மேலும் அதில் எப்படி அன்பு பெருகுகிறதோ, அப்படியே புலியிலும், நம்மிலும் இருப்பவன் ஒருவனே
ஆனபிறகு,
அந்தப் புலி நம்மை என்ன செய்யும்? நாம் ஏன் அவற்றைக் கண்டு பயப்பட
வேண்டும்?
இத்தகைய ஞானம் முழுமையாக வந்து, அதை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்து, எந்த பிராணிகளைக் கண்டாலும் பயப்படாமலும், வெறுப்படையாமலும், மனம் ஸ்திரமடைந்தால், அப்போது வியாப்தோபாசனை செய்வதற்கு
அதிகாரம் வந்திருக்கிறது என்று அறியலாம்.
இத்தகைய ஞானம் யாருக்கு இருக்கிறதோ, அவருக்கு அனைத்து தேசமும் புண்ணியதேசங்களே. அனைத்து காலங்களும் பர்வ காலங்களே.
அனைத்து பிராணிகளும் பாத்ரரே. அனைத்து பேச்சுகளும் மந்திரங்களே. செய்யும் செயல்கள்
அனைத்தும் பகவத் பூஜைகளே ஆகிறது என்று இந்த பத்யத்தில் விளக்குகிறார்.
தே3வகா2ர தடாக1 வாபி ஸ
ரோவரக3ளபி4மானி ஸுரரு க
ளேவரதொ3ளிஹ ரோமகூபக3ளொளகெ3 தும்பி3ஹரு |
ஆ வியத்க3ங்கா3தி நதி3க3ளு
பா4விஸுவு தெ3ப்பத்தெரடெ3னிப
ஸாவிர சுநாடிக3ளொளகெ3 ப்ரவஹிஸுதலிஹவெந்து3 ||5
தேவகார = தேவர்களால் உருவாக்கப்பட்ட நீர்வீழ்ச்சி
தடாக = ஏரி
வாபி = இறங்கி குளிக்கத்தகுந்த கிணறு
ஸரோவர = குளம், இவற்றின்
அபிமானி ஸுரரு = அபிமானி தேவதைகள்
களெவரதொளகெ = இந்த சரீரத்தில்
இஹ = இருக்கிறார்கள்
ரோமகூபகளொளகெ = மயிர்க்கால்களில்
தும்பிஹரு = நிறைந்திருக்கிறார்கள்
ஆ வியத்கங்காதி நதிகளு = ஆகாய கங்கை வரைக்கும்
இருக்கும் புண்ணிய நதிகள் அனைத்தும்
பாவிசுவுது = அனுசந்தானம் செய்து
எப்பத்தெரடெனிப சாவிர = 72,000
நாடிகளொளகெ = நாடிகளுக்குள்
ப்ரவஹிஸுதலிகவெந்து = பாய்ந்து ஓடுகின்றன என்று
இந்த சரீரத்திலேயே தீர்த்தக்ஷேத்திர அபிமானி
தேவதைகள் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்.
No comments:
Post a Comment