ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Thursday, June 11, 2020

#1 - மாத்ருகா சந்தி

ஹரிகதா2ம்ருதசார கு3ருக3

கருணதிந்தா3பநிது பே1ளுவே

பரம ப4கவத்34க்தரித3னாத3ரதி கேளுவுது3

 

சந்தி 8: மாத்ருகா சந்தி

 

பாத3மானி ஜயந்தனொளகெ3 ஸு

மேத4 நாமக1னிப்ப த3க்‌ஷிண

பாத33ங்கு3டத3ல்லி ப1வனனு பா4ரப்4ருத்3ரூப1 |

காது3கொண்டி3ஹ ட1ங்கி11ரமொத3

லாத3னாமதி3 ந்தி43ளலீ

ரைது3 ரூபத3லித்து ந்தத நடெது3 நடெஸுதலி ||1

 

பாதமானி = பாதங்களுக்கு அபிமானியான

ஜயந்தனொளகெ = ஜயந்தனில்

சுமேத நாமகனிப்ப = சுமேத என்னும் பரமாத்மன்

இப்ப = இருக்கிறான்

தக்‌ஷிண பாததங்குடதல்லி = வலது கால் கட்டை விரலில்

பவனனு = வாயுதேவர், அதன் அந்தர்யாமியாகி

பாரப்ருத்ரூப = பாரப்ருத் எனும் பெயருள்ள ரூபத்தினால்

காதுகொம்டிஹ = காத்துக் கொண்டிருக்கிறான்

டங்கிதர மொதலாத = டங்கி, தாரா முதலான பெயர்களில்

நாமதி = பெயர்களில்

சந்திகளு = துடையிலிருந்து பாதம் வரைக்கும் உள்ள முட்டிகளில்

ஈரைது ரூபதலித்து = 10 ரூபங்களில் இருந்து

நடெது = தானும் நடந்து

நடெசுதலி = மக்களாலும்கூட நடத்தி வைக்கிறான்.

 

முந்தைய சந்திகளில், பஞ்சமகாபூதங்கள், பஞ்ச தன்மாத்ரா குணங்களுடன் கூடிய பாஞ்சபௌதிக சரீரங்களில் பகவத் உபாசனா கிரமத்தை சொல்லி, சந்தி 11ல் ஏகபஞ்சாஷத் வர்ணகத மாகளத்ரனுஎன்று 51 எழுத்துக்களில் பரமாத்மன் சரீரங்களில் இருக்கிறான் என்று குறிப்பால் உணர்த்துகிறார். இந்த சந்தியில் 51 எழுத்துக்களில் இருக்கும் பகவத் ரூபங்களை, தந்த்ரசாரத்தில் சொல்லியபடி, மாத்ருகான்யாச கிரமத்தின்படி எந்தெந்த இடங்களில் சிந்திக்க வேண்டும் என்னும் விஷயத்தை சொல்கிறார்.

 

பாதாபிமானி ஜெயந்தனில், சுமேத நாமகனான பரமாத்மன் இருக்கிறான். வலது காலின் கட்டைவிரலில் வாயுதேவர் இருக்கிறார். அவருக்குள் பாரப்ருத் எனும் பெயருள்ள பரமாத்மன் இருக்கிறான். இந்த ரூபங்கள் 51 எழுத்துக்களுக்கு சம்பந்தப்படாத வேறு ரூபங்கள். வலது துடையிலிருந்து, முழங்கால், பாதங்கள், விரல்கள், இவற்றில் இருக்கும் மூட்டுகள், விரல்களின் நுனி என இந்த 5 இடங்களில் டங்கி முதலான 5 ரூபங்கள், அதாவது, மாத்ருகான்யாச க்ரமத்தில் சொல்லியிருப்பதைப் போல டங்கி, டகல, டரக, டரீ, ணாத்ம என்னும் 5 ரூபங்களால், இதைப்போலவே இடது பக்கத்தில், துடையிலிருந்து 5 மூட்டுகளில் தார, தப, தண்டீ, தன்வி, நம்ய என்னும் 5 ரூபங்களாலும் இருந்து, தான் அந்த தேகத்தில் இருந்து நடந்தவாறு (செயல்களை செய்தவாறு), அந்த தேகத்தை நடக்க வைத்தும் (செயல்களை செய்வித்தும்) இருக்கிறான்.


No comments:

Post a Comment