மாஸ பரியந்தரவு பி3ட3தெ3 ந்ரு
கேசரிய ஷுப4நாமமந்த்ர ஜி
தாஸனதி ஏகாக்4ரசித்த1தி3 நிஷ்க1படதி3ந்த3 |
பே3ஸரதெ3 ஜபிஸலு வ்ருஜினக3ள
நாஷகை3ஸி மனோரத2க3ள ப
ரேஷ பூர்த்தியமாடி3 கொடு3வனு க1டெ3கெ3 பரக3திய ||17
மாஸ பர்யந்தரவு = ஒரு மாதம் வரைக்கும்
பிடதெ = விடாமல்
ந்ருகேசரிய = நரசிம்மனை
ஷுப நாம மந்த்ர = சுப-கரமான நாம மந்திரத்தை
ஜிதாஸனதலி = ஸ்திரமான ஆசனத்தில்
ஏகாக்ரசித்ததி = ஒரு மனத்துடன் (தியானத்தில்)
நிஷ்கபடதிந்த = மனதில் எவ்வித களங்கமும் இன்றி
பேசரதெ = எவ்வித சோர்வும் இல்லாமல்
ஜபிஸலு = ஜெபித்தால்
வ்ருஜினகள = பாவங்களை
நாஷகெயிஸி = போக்கி
மனோரதகள = மனோபீஷ்டங்களை
பரேஷ = ஸ்ரீபரமாத்மன்
பூர்த்திய மாடி = நிறைவேற்றி
கடெகெ பரகதிய = இறுதியில் பரகதியை
கொடுவனு = கொடுக்கிறான்.
இந்த பத்யத்தால், நரசிம்ம மந்திரத்தை ஜெபிப்பதன் பலன்களை விளக்குகிறார்.
ஒரு மாதம் வரைக்கும், விடாமல், சுபகரமான நரசிம்ம நாம மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். அந்த மந்திரத்தை
ஜெபிக்கும் கிரமத்தை தந்திரசாரத்தில் சொல்லியிருக்கிறார் ஸ்ரீமதாசார்யர்.
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோ முகம் |
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
||
என்னும் 32 எழுத்துக்களைக் கொண்ட மஹாமந்திரத்தை ஒரு ஸ்திரமான ஆசனத்தில் அமர்ந்து, நிலையான மனதுடன், ஜெபிக்க வேண்டும். மனதில் பக்தி இல்லாமல், பிறர் பாராட்ட வேண்டும் என்று ஜெபிப்பது கபடம் எனப்படுகிறது. அப்படியில்லாமல், பக்தியுடன், சோர்வில்லாமல் இதனை ஜெபித்தால், அனைத்து பாவங்களையும் பரிகரித்து, சர்வேஷனான ஸ்ரீஹரி அவர்களின் மனோபீஷ்டங்களை நிறைவேற்றி இறுதியில் உத்தமமான சத்கதியையும் கொடுக்கிறார்.
No comments:
Post a Comment