ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Friday, June 19, 2020

26-30 மாத்ருகா சந்தி

க்‌ஷீர த3தி4 நவனீத க்4ருததொ3ளு

சௌரப4ஸாஹ்வய னெனிஸி ஷா

ந்தீரமண ஞான க்ரியேச்சா ஷக்தியெந்தெ3ம்ப3

ஈரெரடு3 நாமத3லி கரெஸு

பாரதீ வாக்3தே3வி வாயு

ரோரு ஹானரல்லி நெலெசிஹரெல்ல காலத3லி ||26

 

க்‌ஷீர = பால்

ததி = தயிர்

நவனீத = வெண்ணெய்

க்ருத = நெய், இவற்றில்

ஸௌரப ரஸாஹ்வயனெனிஸி = வாசனை ரூபத்திலும், சுவை ரூபத்திலும் அழைத்துக்கொண்டு

ஷாந்தீரமண = சாந்திபதியான அனிருத்தன்

ஞான க்ரியேச்சா ஷக்தியெந்தெம்ப = ஞான, செயல்கள், விருப்பம், சக்தி என்று அழைக்கப்படும்

ஈரெரடு நாமதலி = 4 நாமங்களில்

கரெஸுவ = அழைக்கப்படும்

பாரதி வாக்தேவி = பாரதி சரஸ்வதிதேவியர்

வாயு சரோருஹாஸனரல்லி = வாயுதேவர், தாமரையில் அமர்ந்திருப்பவரான பிரம்மதேவரில்

எல்ல காலதலி = எல்லா காலங்களிலும்

நெலெஸிஹரு = நிலைத்திருக்கிறார்

 

பால், தயிர், வெண்ணெய், நெய் இந்த நான்கிலும் இருக்கும் மணம், சுவை இவற்றின் ஸ்வரூபனாக, சாந்திபதியான அனிருத்தன், நான்கு ரூபங்களால்,

 

* ஞானரூபத்தினால் பிரம்மதேவரிலும்,

* க்ரியா ரூபத்தினால் வாயுதேவரிலும்,

* இச்சா ரூபத்தினால் சரஸ்வதிதேவியிலும்,

* சக்தி ரூபத்தினால் பாரதி தேவியரிலும்

எப்போதும் இருக்கிறார் என்று சிந்திக்க வேண்டும்.

 

ஸு3ளெண்டு நவப்ரஜேஷரு

ஷ்வஸன க3ஐவத்து ஏகா

3ஷ திவாகரரனிது ருத்3ரரு அஷ்வினிக3ளெரடு3 |

3ஷவிஹீன ஷதாக்2 ஸு

ரொளகெ3 சதுராத்ம நிய்யா

மிஸுவ பி3ரம்ம மீர க23ப ப2ணீந்த்ரரொளகி3த்து ||27

 

வஸுகளெண்டு = அஷ்ட வசுக்கள்

பவப்ரஜேஷரு = ஒன்பது ப்ரஜேஷர்கள்

ஷ்வஸன கணவெளேளு = 50 மருத்களர்கள்

ஏகாதச திவாகரரு = 11 சூரியர்கள்

அனிது ருத்ரரு = அவ்வளவே (11) ருத்ரர்கள்

அஸ்வினிகளெரடு = அஸ்வினி தேவதைகள் இருவர்

தஷவிஹீன ஷதாக்ய = 10 குறைவான 100 எண்ணிக்கையிலான (90)

ஈ ஸுமனசரொளகெ = இந்த தேவதைக்குள்

சதுராத்ம = அனிருத்தாதி 4 ரூபாத்மகன்

பிரம்ம சமீர ககப பணீந்த்ர = பிரம்ம வாயு கருட சேஷ

ஒளகித்து = இவர்களின் உள்ளிருந்து

நியாமிஸுவ = ப்ரேரகனாக (அவர்களை வழிநடத்துபவனாக) இருக்கிறான்.

 

* த்ரோண, ப்ராண, த்ருவ, அர்க்க, அக்னி, தோஷ, வசு, விபாவசு என்று 8 பேர் அஷ்ட வசுக்கள்.

* மரீச்யாதி 9 பேர் ப்ரஜேஷர்கள்

* மருத்கணர் 49 பேர். அவர்களுடன் இந்திரனை சேர்த்தால் 50 வருகிறது

* சூரியர்கள் 11 பேர். உருக்ரம என்னும் சூரியன், பரமாத்மனின் அவதாரமே ஆனதால், அவனை விட்டுவிட்டு 11 சூரியர்கள் என்கிறார்கள்.

* அவ்வளவே ருத்ரர்கள் என்றால் 11 ருத்ரர்கள்

* அஸ்வினி தேவதைகள் இருவர்.

 

ஆக மொத்தம் 91 தேவதைகள். ஆனால், பத்யத்தில் 100க்கு 10 குறைவு, அதாவது 90 என்றிருக்கிறது. இந்த வேறுபாட்டை எப்படி சரிப்படுத்துவது என்றால், அஸ்வினி தேவதைகள் இருவரும் ஒரே காலத்தில் பிறந்து, ஒரே பெயரில் அழைக்கப்பட்டு இருவரும் ஒன்றாகவே இருப்பதால், அந்த தேவதைகளை ஒன்று என்றே எண்ணிக்கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆகையால் 90 தேவதைகளே வருகிறது. ஸ்ரீஹரி, அனிருத்த, பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ ரூபங்களால், பிரம்ம, வாயு, கருட, சேஷ என்னும் நால்வரில் இருந்து, மேற்சொன்ன 90 தேவதைகளில் நுழைந்து அவர்களின் செயல்களை நடத்துபவனாக இருக்கிறான்.

 

தோருதிப்பனு சக்ரத3லி ஹீ

ங்கார நாமக ஷங்க23லி ப்ரதி

ஹார க3தெ3யலி நித4ன பத்3மத3லிப்ப ப்ரஸ்தாவ |

காருணிகனுத் கீத2 நாமதி3

மாரமணனைரூபக3ள ஷ

ங்கா2ரி மொத3லாதா3யுத33ளொளு ஸ்மரிஸி த4ரிசுதிரு ||28

 

சக்ரதலி = சக்ர முத்திரையில்

ஹிங்கார நாமக = ஹிங்கார நாமக பரமாத்மன்

தோருதிப்பனு = காட்டிக் கொள்கிறான்

ஷங்கதலி = சங்கு முத்திரையில்

ப்ரதிஹார = ப்ரதிஹார நாமக பரமாத்மன்

கதெயலி = கதை முத்திரையில்

நிதன = நிதன நாமக பரமாத்மன்

பத்மதலி = பத்ம முத்திரையில்

ப்ரஸ்தாவ = ப்ரஸ்தாவ நாமக பரமாத்மன்

இப்ப = இருக்கிறான்

உத்கீத = உத்கீத நாமக பரமாத்மன்

நாமதி = நாம முத்திரையில் இருக்கிறான்

காருணிகன = கருணைக்கடலான

மாரமணன = லட்சுமிபதியின்

ஐரூபகள = 5 ரூபங்களை

சங்காதி மொதலாத = சங்கு சக்ர முதலான

ஆயுதகளொளு = ஆயுத ரூபமான 5 முத்திரைகளில்

ஸ்மரிஸி = சிந்தித்து

தரிசுதிரு = அவற்றை தரித்துக் கொண்டிரு.

 

* சக்ர முத்திரையில் ஹிங்கார நாமத்திலும்

* சங்கு முத்திரையில் ப்ரதிஹார நாமத்திலும்

* கதை முத்திரையில் நிதன நாமத்திலும்

* பத்ம முத்திரையில் ப்ரஸ்தாவ நாமத்திலும்

* நாம முத்திரையில் உத்கீத நாமத்திலும்

பரமாத்மன் இருக்கிறான். இப்படி மகா கருணைக்கடலான ஸ்ரீபரமத்மன், இந்த 5 ரூபங்களால் 5 முத்திரைகளில் இருக்கிறான் என்று சிந்தித்து, முத்திரைகளை தரிக்க வேண்டும் என்பது கருத்து.

 

தனுவெ ரத2 வாகா3பி4மானியெ

கு3ணவெனிஸுவளு ஸ்ரோத்ரத3லி ரோ

ஹிணி ஷஷாங்கரு பாஷபாணிகளஷ்வ வெந்தெ3னிஸி

இனனு சஞ்ஞாதே3வியரு இஹ

ரனலலோசன ஸூதனெனிஸு

ப்ரணவபாத்3ய ப்ராண நாமக ரதி2கனெனிஸுவனு ||29

 

தனுவெ = சரீரமே

ரத = ரதம்

வாகாபிமானியெ = வாக்கிற்கு அபிமானியான உமாதேவி

குணவெனிஸுவளு = கயிறு என்று அழைத்துக் கொள்கிறாள்

ஸ்ரோத்ரதொளு = காதுகளில்

ரோஹிணி ஷஷாங்கரு = ரோஹிணிதேவி மற்றும் அவளின் கணவனான சந்திரன்

பாஷபாணி = லகான் பிடித்துக் கொள்கிறான்

இனன = சூரியனின்

சஞ்ஞாதேவியரு = அவனின் மனைவி சஞ்ஞாதேவி

அஷ்வனெந்தெனிஸி = குதிரை என்று சொல்லிக்கொண்டு

இஹரு = இருக்கிறார்கள்

அனலலோசன = அக்னி நேத்ரனான ருத்ரதேவர்

ஸூதனெனிஸுவ = சாரதி என்று சொல்லிக்கொண்டு

ப்ரணவபாத்ய = ஓம்கார ப்ரதிபாத்யனான (முக்யபிராணானந்தர்கத)

ப்ராண நாமக = பிராண நாமக ஸ்ரீபரமாத்மன்

ரதிகனெனிஸுவனு = ரதிகன் என்ற பெயரில் இருக்கிறான்

 

நம் தேகமே ரதம்.

வாக் அபிமானியான பார்வதி தேவியே கயிறு.

காதுகளின் அபிமானியான ரோஹிணி மற்றும் சந்திரன், கயிறைப் பிடித்திருப்பர்.

சூர்யன் மற்றும் அவர் மனைவி சஞ்ஞாதேவியர் கண்களில் இருந்து குதிரைகளாக இருப்பர்.

மனோபிமானிகளான ருத்ரர் சாரதியாக இருக்கிறார்

ஓம்காரத்தால் புகழப்படுபவனான, முக்யபிராணாந்தர்கதனான, ப்ராண நாமக ஸ்ரீபரமாத்மன், ரதிக (தேரில் வீற்றிருப்பவன்) என்று சிந்தித்து, தேகத்திற்கு அலங்காரங்களை செய்யவேண்டும் என்று பொருள்.

 

இதற்கு ஆதாரம், மானஸ ஸ்ம்ருதியில் இருக்கிறது.

 

விஷ்ணோராயதனம் திவ்யந்தேஹாக்யம் வைஷ்ணவம்ரதம் |

சூர்யஸ்ச சூர்ய பார்யாச சக்‌ஷுத்வய ஸமாஸ்ரிதௌ |

வாஜிரூபௌ ததாசோமஸ்தத்பத்னீச ஸ்ருதிஸ்திதௌ |

ஹயபாஸௌ வஹந்த்யேதி தத்தந்த ப்ரக்ரஹாத்மிகா |

உமாவாசிஸ்திதாஞேயா தத்பதிர்மனஸி ஸ்தித: |

சம்ப்ரோக்த: ஸாரதிஸ்தர்ஸ்மி ரதேப்ராண: ப்ரதிஷ்டித: |

ப்ரக்ருஷ்டஞ்ஞானரூபத்வா த்ப்ராணே ப்ராணோ ஹரி:ஸ்ம்ருத: |

அதிதிஷ்டதி விஷ்ணுஸ்து தஸ்மாத்தேஹமலம்கரேத ||

 

இதன் அர்த்தம்:

 

நம் தேகமானது, பரமாத்மன் வசிக்கத் தகுந்த, திவ்யமான, வைஷ்ணவ ரதம். சூரியனும் அவனின் மனைவியும் இரு கண்களில் இருந்து, குதிரைகளைப் போல இருக்கின்றனர். சந்திரனும் அவனது மனைவியும், காதுகளில் இருந்து, குதிரைகளின் லகானைப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். உமாதேவி, வாக்கினில் கயிறாக இருக்கிறார். அவளின் கணவனான ருத்ரதேவர், மனஸ்ஸில் இருந்து, சாரதியாக இருக்கிறார். ரதத்தில் பிராணதேவர் நாயகனாக அமர்ந்திருக்கிறார். அவரில் அந்தர்யாமியாக ப்ராண என்னும் பெயருடைய ஸ்ரீபரமாத்மன் இருக்கிறார்.

 

ப்ர=மிகச்சிறந்த ஆ=ஆனந்த ஸ்வரூபனான ண=ஞானஸ்வரூபமாக இருப்பவன், இதுவே பிராண என்று பரமாத்மனுக்குப் பெயர். இத்தகைய விஷ்ணுவிற்கு ரதமாக இருப்பதால், இந்த தேகத்தை நன்கு அலங்கரிக்க வேண்டும், என்று பிரமாண வாக்கியம் சொல்கிறது. இதே அபிப்பிராயத்தையே தாசராயரும் சொல்கிறார்.

 

அமித மஹிமனபார கு3ணக3

மித வர்ணாத்மக ஸ்ருதி ஸ்ம்ருதி

3மிலாப1வெ தத3பி4மானிக3ளெந் தெ3னிஸிகொம்ப3 |

1மலம்ப4வ ப4ஸுரேந்த்ரா

த்யமரரனுதி3ன திளியலரியரு

ஸ்வமஹிமெக3ளா த்3யந்த மத்4யக3ளரிவ சர்வக்3||30

 

அமித மஹிமன = எல்லைகளற்ற மகிமைகளைக் கொண்ட

அபார குணகள = எல்லைகற்ற நற்குணங்களைக் கொண்ட

ஸமித வர்ணகள = எல்லைகள் உள்ள எழுத்துக்களைக் கொண்ட ஸ்ருதி ஸ்ம்ருதிகளின்

கமிஸலாபவெ = எல்லைகளைக் காணமுடியுமோ?

ததபிமானிகளெ ந்தெனிஸி கொம்ப = ஸ்ருதிஸ்ம்ருதிகளுக்கு அபிமானிகள் என்று புகழப்படும்

கமலசம்பவ = பிரம்மதேவர்

பவ = ருத்ரதேவர்

சுரேந்த்ராதி = தேவேந்திர முதலான

அமரரு = தேவதைகள்

அனுதின = தினந்தோறும்

திளியலு = பகவன்மகிமைகளை அறிய முயன்றாலும்

அரியரு = முழுமையாக அறியமாட்டார்கள்

ஸ்வமஹிமெகள = தன் மகிமைகளை

அத்யந்த மத்யகள = ஆதி, மத்ய, அந்தம் ஆகியவற்றை

சர்வக்ஞ = சர்வக்ஞனான பரமாத்மன் ஒருவனே

அரிவ = அறிவான்.

 

ஸ்ரீஹரி எல்லைகளற்ற மகிமைகளைக் கொண்டவன். இவனது அபாரமான நற்குணங்களை மக்கள் அறியவேண்டுமெனில், ஸ்ருதிகளாலும், ஸ்ம்ருதிகளாலும், அறியவேண்டும். அப்படியிருந்தாலும், அந்த ஸ்ருதி, ஸ்ம்ருதிகள், தங்களுக்கு தெரிந்த வரையிலான குணங்களை மட்டுமே சொல்கிறதே தவிர, பகவந்தனின் முழுமையான மகிமைகளை அதனால் சொல்ல முடியாது. ஏனெனில் ஸமிதவர்ணாத்மகஎழுத்துக்கள் எல்லைகளைக் கொண்டவை. அத்தகைய எழுத்துக்களைக் கொண்ட ஸ்ருதி, ஸ்ம்ருதிகளுக்கும் எல்லை உண்டு. அபரிமிதமான பகவந்தனின் குணங்களின் எல்லைகளை, எல்லையுள்ள ஸ்ருதி ஸ்ம்ருதிகள் விளக்கமுடியுமோ? என்றும் சாத்தியமில்லை. அதன் அபிமானிகளான பிரம்ம ருத்ராதிகளும்கூட முழுமையாக அறியமாட்டார்கள். தத்தம் தகுதிக்கேற்பவே அறிவர். அத்தகைய மகிமைகளின் எல்லைகளை அறிந்தவர் யார்? அதாவது, சர்வக்ஞனான பரமாத்மன் ஒருவனே தன் மகிமைகளின் ஆதி, மத்ய, அந்த ஆகியவற்றை அறிவான் என்பது கருத்து. 

No comments:

Post a Comment