ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Friday, June 12, 2020

#6 - மாத்ருகா சந்தி

ஹ்ருத3ய தொ3ளகி3ஹுதஷ்டத3ள கம

லத3ரொளகெ3 ப்ராதேஷ நாமக

நுதி3த பா4ஸ்கரனந்தெ தோர்பனு பி3ம்ப3னெந்தெனிஸி |

பது3ம சக்ர சுஷங்க2 சுக2தா

ங்தகடக முகுடாங்கு3லீயக

பத3க கௌஸ்துபஹார க்3ரைவெயாதி பூ4ஷிதனு ||6

 

ஹ்ருதயதொளகெ = இதயத்தில்

அஷ்டதள கமலவு = 8 தளமுள்ள தாமரை

இஹது = இருக்கிறது

அதரொளகெ = அதற்குள்

ப்ராதேஷ நாமக = ப்ராதேஷ நாமகனான ஸ்ரீபரமாத்மன்

உதிதபாஸ்கரனந்தெ = உதய சூரியனைப் போல

பதும சக்ர சுஷங்க சுகதா = பத்ம, சக்ர, சங்க, கதா ஆகியவற்றை

அங்கத = தோள்களில் தரித்து

கடக = வாள்/கேடயம்

முகுட = கிரீடம்

அங்குலீயக = மோதிரம்

பதக, கௌஸ்துபஹார = பதக்கம், கௌஸ்துப ஹாரம்

க்ரைவேயாதி = கழுத்தில் அணியும் வகைவகையான மாலைகள்

பூஷிதனு = இவற்றை அணிந்தவனாக

பிம்பனெந்தெனிஸி = பிம்பரூபி என்னும் பெயரில்

தோர்ப்பனு = தரிசனம் அளிக்கிறான்.

 

இதயத்தில் இருக்கும் 8 தள கமலத்தில், ப்ராதேஷ நாமகனாக வசிக்கும் பகவந்தனை பூஜிக்கும் கிரமத்தை பாகவத 2ம் ஸ்கந்தம் 2ம் அத்தியாயம் கீசித்ஸ்வதேஹாந்த ஹ்ருதயாவகாஷே ப்ராதேஷ மாத்ரம் புருஷம் வஸந்தம்என்னும் 9ம் ஸ்லோகத்தில் துவங்கி, 13ம் ஸ்லோகம் வரைக்கும் விவரிக்கிறது. அதையே தாசராயர் இந்த பத்யத்தில் விவரிக்கிறார்.

 

இதயத்தில் 8 தள தாமரை இருக்கிறது. அதற்குள், ப்ராதேஷ நாமகனாக பிம்பரூபி பரமாத்மன், உதயசூரியனைப் போல ஒளிர்ந்துகொண்டு பத்ம, சக்ர, சங்கு, கதா, மற்றும் பற்பல ஆபரணங்களை அணிந்தவனாக ஒளிர்கிறான். இத்தகைய பரமாத்மனின் உபாசனையை அதற்கு தகுதியானவர்கள் செய்யவேண்டும் என்பது கருத்து.


No comments:

Post a Comment