ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Saturday, June 13, 2020

#7 - மாத்ருகா சந்தி

த்வித3பத்3மவு ஷோபி2புது க

ண்ட23லி முக்யபிராண தன்னய

ஸு3தியிந்தொ3டகூடி3 ஹம்ஸோபாஸனெய மாள்ப |

உத3கவன்னாதி33ளிக3வகா

ஷத3னு தானாகி3த்து3 தா3னா

பி43னு ஷப்த3வ நுடி3து3 நுடி3ஸுவ சர்வஜீவரொளு ||7

 

த்விதலபத்மவு = 2 தளமுள்ள தாமரை

ஷோபிபுது = மலர்ந்திருக்கிறது

கண்டதலி = இதயத்தில்

முக்யபிராண = முக்யபிராணதேவர்

தன்னய = தன்னை

சுததியிந்தொடகூடி = தன் மனைவியுடன்

ஹம்ஸோபாஸனெய = ஹம்ஸ மந்திர ஜெபத்தை

மாள்ப = செய்கிறார்

உதகவன்னாதிகளிகெ = தண்ணீர், அன்னம் ஆகியவற்றிற்கு

அவகாஷவனு = இடம் கொடுக்கிறான்

தானாகித்து = தானே இருந்து

உதானாபிதனு = உதான நாமகனாகி

சர்வஜீவரொளு = அனைத்து பிராணிகளுக்குள்ளும் இருந்து

நுடிது = பேசி

நுடிஸுவ = பேசுமாறு செய்கிறான்.

 

இதயத்தில் இரு தளம் உள்ள தாமரை மலர்ந்திருக்கிறது. அதில், உதான நாமகனான வாயுதேவர் தம் மனைவியுடன் வசித்து, ஸ்வாஸ, உஸ்வாஸ ரூபமான ஹம்ஸமந்திர ஜப ரூப உபாசனையை செய்து கொண்டிருக்கிறார். பிராணிகள் உண்ணும் அன்னம், தண்ணீர் ஆகியவற்றை வயிற்றுக்குச் செல்ல இடம் கொடுக்கிறார். தான் அங்கிருந்து பேசியவாறு, பிராணிகளை பேசவைத்துக் கொண்டிருக்கிறார்.

 

பிராணாபான விடாயாஞ்ச பிங்களாயாஞ்ச சர்வத: |

வ்யானஸ்ஸந்திஷு சர்வத்ர உதானோ பிரம்மனாடிக: ||

 

என்னும் பாகவத 2ம் ஸ்கந்தம் ஸ்லோகத்திலிருந்து, ப்ராண, அபான, வாயுகள், இடா, பிங்களா நாடிகளில் இருக்கிறார்கள் என்றும் வ்யான பிராணதேவன், அனைத்து மூட்டுகளிலும், உதான வாயுதேவர் பிரம்ம நாடி, அதாவது மூலாதாரத்திலிருந்து தலை வரைக்கும் போகும் மத்யபிரதேசத்தில் இருக்கும் சுஷும்னா நாடியில் இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த நாடியில் உதான வாயுதேவர் வியாப்தராக இருந்து இதயத்தில், அதே சுஷும்னா நாடியின் மத்யபகுதியில் இருக்கிறார்.


No comments:

Post a Comment