ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Tuesday, June 9, 2020

#30 - பஞ்சதன்மாத்ர சந்தி

ஆதி3தே1யரு திளியதி3ஹ கு3

வேத3மானிக3ளெ ந்தெ3னிப வா

ண்யாதி33ளு ப3ல்லரவரரியத3 கு3ணக3ணங்களனு |

வேத33ல்லனு பொ3ம்மனரியத3

கா34கு3ணக3ள லகுமி ப3ல்லளு

ஸ்ரீத4ரொப்ப3னுபா1ஸ்ய த்கு3ணபூர்ண ஹரியெந்து3 ||30

 

ஆதிதேயரு = தேவதைகள்

திளியதிஹ = அறியாத

குண = பரமாத்மனின் குணங்களை

வேதமானிகளெந்தெனிப = வேதாபிமானிகள் என்று எண்ணும்

வாண்யாதிகளு = சரஸ்வதி பாரதியர்

பல்லரு = அறிவர்

அவரரியத = சரஸ்வதி, பாரதிதேவியர் அறியாத

குணகணங்களனு = குணங்களை

வேத = பிரம்மதேவர்

பல்லனு = அறிவார்

பொம்மனரியத = பிரம்மதேவர் அறியாத

அகாதகுணகள = அபாரமான குணங்களை

லகுமி பல்லளு = லட்சுமிதேவி அறிவார்

ஸ்ரீதரனு = லட்சுமிதேவியை வக்‌ஷஸ்தளத்தில் தரித்த

ஒப்பனு = ஸ்ரீதரனான ஸ்ரீஹரியே

உபாஸ்ய = வணங்கத்தக்கவன் (சிறந்தவன்)

ஸத்குணபூர்ண = மிகச்சிறந்த குணபூர்ணனான

ஹரியெந்து = ஹரி என்னும் பரமாத்மனே என்று (லட்சுமிதேவி அறிவார்).

 

முந்தைய மூன்று பத்யங்களால், லட்சுமிதேவியரின் மகாமகிமைகளை சொல்லி, அத்தகைய ரமாதேவியர் பரமாத்மனின் அபார குணங்களை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார் என்னும் வசனங்களால் விசேஷமான பகவத்மகிமைகளை கூறுகிறார்.

 

ருத்ராதி தேவதைகள் அறியாத பகவத் மகிமைகளை வேதாபிமானிகள் என்றே அழைக்கப்படும் சரஸ்வதி, பாரதி தேவியர் அறிவர். அவர் அறியாத குணங்களை பிரம்மதேவர் அறிவார். பிரம்மதேவருக்கும் தெரியாத மகா மகிமைகளை லட்சுமிதேவி அறிவார். தன் மார்பில் லட்சுமிதேவியரை தரித்திருக்கும், சர்வசத்குண பூர்ணன், ஹரி என்று அழைக்கப்படுபவனுமான, பரமாத்மன் ஒருவனே அனைவரையும்விட உத்தமன்; உபாஸ்யன் என்கிறார்.

***
 

No comments:

Post a Comment