திலஜ வர்த்திகளனுஸரிஸி ப்ர
ஜ்வலிஸி தீபக3ளாலயத3 க
த்தலெய ப4ங்கிஸி தத்பதா3ர்த்த4வ தோருவந்த3த3லி |
ஜலருஹேக்ஷண தன்னவர மன
தொளகெ3 ப4க்தி ஞான கர்மகெ
ஒலிது பொளெவுத தோருவனு கு3ண ரூப க்ரியெக3ளனு ||21
திலஜ வர்த்திகள = எண்ணெய், வத்திகளை அனுசரித்து
ப்ரஜ்வலிஸி தீபகளு = எரியும் தீபங்கள்
ஆலயத = வீட்டின்
கத்தலெய = இருட்டினை
பங்கிஸி = நீக்கி
தத்கத = அந்த வீட்டில் இருக்கும்
அர்த்தவ = பதார்த்தங்களை (பொருட்களை)
தோருவந்ததலி = எப்படி காட்டுகிறதோ
ஜலருஹேக்ஷண = தாமரைக் கண்ணனான ஸ்ரீஹரி
தன்னவர = தன் பக்தர்களின்
மனதொளகெ = மனதில்
பக்திஞான கர்மகெ = அவன், பக்தி, ஞானத்துடன் செய்யும் கர்மங்களுக்கு
ஒலிது = தரிசனம் அளித்து
பொளெவுத = அபரோக்ஷத்தில் தரிசனம் அளித்து
குணரூப க்ரியேகளனு = தன் குண, ரூபங்கள், க்ரியைகளை
தோருவனு = அவரவர்களின் யோக்யதைக்கேற்ப காட்டுகிறான்.
ஸ்ரீபரமாத்மன் பிராணிகளின் பக்தி, ஞான கர்மங்களுக்கு மெச்சி, தன் குண ரூப க்ரியைகளை
காட்டுகிறான் என்கிறார் தாசராயர்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, வர்த்திகளை விட்டு, தீபத்தை ஏற்றினால், அந்த தீபம் அந்த எண்ணெய், வர்த்திகளுக்கேற்ப, அதாவது அதிக எண்ணெய், திடமான வர்த்தி இருந்தால் அதிக ஒளியுடனும், குறைவான எண்ணெய், சிறிய வர்த்தி இருந்தால், குறைந்த ஒளியுடனும் எரியும். அதுபோலவே, தாமரைக் கண்ணனான ஸ்ரீஹரி, நம் மனஸ் என்னும் வீட்டில் கர்ம என்னும் பாத்திரத்தை வைத்து, பக்தி என்னும் எண்ணெய், ஞானம் என்னும் வர்த்திகளை வைத்து, ஸ்ரீபரமாத்மன் என்னும் தீபத்தை ஏற்றினால், நம் அஞ்ஞானம் என்னும் இருட்டில் தெரியாத பகவந்தனின் குணங்களை ரூபங்களை க்ரியைகளை காட்டுகிறான். பக்தியுடன், பகவத் ப்ரீத்யர்த்தமாக நிஷ்காம்ய (எதையும் எதிர்பார்க்காமல்) கர்மங்களை செய்தால், அவரவரின் யோக்யதைக்கேற்ப பரமாத்மனின் ஸ்வரூபஞானம் ஆகிறது. அதற்கு பரமாத்மன் ப்ரீதனாகி, அபரோக்ஷத்தில் தான் தன்னுடைய ரூபங்களைக் காட்டுகிறான். பிறகு, பரமாத்மனின் குணங்கள், அவன் செய்யும் ஸ்ருஷ்ட்யாதி கர்மங்கள், அவரவர்களின் யோக்யதைக்கேற்ப பரமாத்மன் அவரவர்களுக்கு காட்டிக் கொள்கிறான் என்று பொருள்.
No comments:
Post a Comment