நேத்ரக3ளல்லி வஸிஷ்ட விஷ்வா
மித்ர பா4ரத்வாஜ கௌ3தம
ரத்ரி யா ஜமத3க்னி நாமக3ளிந்த3 க1ரெஸுதலி |
ப1த்ரதா1பக1 ஷக்ர ஸுர்ய த4
ரித்ரி பர்ஜன்யாதி3ஸுரரு ஜ
கத்ரயேஷன ப4ஜிபரனுதி3ன பரமப4கு3தி1யலி ||10
நேத்ரகளலி = கண்களில்
வசிஷ்ட விஷ்வாமித்ர பாரத்வாஜ கௌதம அத்ரி ஜமதக்னி =
இத்தகைய ரிஷிகள்
நாமகளிந்த கரெசுதலி = இந்த நாமங்களால் அழைக்கப்பட்டு
பத்ரதாபக = ருத்ரதேவர்
ஷக்ர = இந்திரன்
சூர்ய = சூரியன்
தரித்ரி = பூமி
பர்ஜன்ய = வருணன்
ஆதி = ஆகியோர்
சுரர் = தேவதைகள்
ஜகத்ரயேஷன = மூன்று உலகங்களுக்கும் தலைவனான
பஜிபரு = ஸ்தோத்திரம் செய்வர்
அனுதின = தினந்தோறும்
பரமபகுதியலி = மிகுந்த பக்தியுடன்
முந்தைய ஸ்லோகத்தில் கன்றின் ரூபத்தில் இருக்கும்
வாயுதேவர், ருத்ராதி தேவதைகளால் வணங்கப்படுகிறார் என்பதை சொல்லியிருப்பார். இங்கு, அந்த தேவதைகளின் உபாஸனா கிரமத்தை சொல்கிறார்.
வசிஷ்டாதி நாமங்களால், ருத்ராதி தேவதைகள் கண்களில் இருந்துகொண்டு, உபாசனை செய்கின்றனர் என்று இந்த பத்யத்தில் சொல்கின்றனர். இதற்கு மூல
கிரந்தமான மானஸ ஸ்ம்ருதியில், கண்களில் எந்தெந்த பாகங்களில், யார் யார் எந்தெந்த நாமங்களால் இருக்கிறார்கள் என்னும் விஷயத்தை
சொல்லியிருக்கின்றனர். அது என்னவெனில்:
ஸ்வேததாராஸ்திதஸ்சந்த்ரோ வஸிஷ்டாக்ய சுரேஷ்வர: |
நயனே ரக்தராஜிஸ்தோ ருத்ரோகௌதம நாமக: |
க்ருஷ்ணதாராஸ்திதோ வன்ஹிர் ஜமதக்னிரிதி ஸ்ம்ருத: |
கமனீயாதித்ய ஸம்ஸ்தோவிஷ்வாமித்ராபித:ஸ்தித: |
வாரிகோ வருண: ஸாக்ஷாத் பரத்வாஜாபிதஸ்ததா |
அதராவர்த்தினீ சம்ஸ்தா ப்ருத்வி கஷ்யப நாமிகா |
உத்தராயாம் த்யுனாம்னாயாம் பாரதீ ஹ்ருத்ரினாமிகா |
ஏதேஹ்யக்ஷீணமனஸ: ஸப்ததேவா உபாஸதே ||
* கண்களின் வெள்ளைப் பகுதியில்
சந்திரன் இருக்கிறான். அங்கேயே தேவேந்திரன், வசிஷ்ட நாமகனாக வசிக்கிறான்.
* கண்ணின் ஓரத்தில் சிவப்புப்
பகுதியில் ருத்ரர், கௌதம என்னும் பெயரில் இருக்கிறார்.
* கண்ணின் கருப்புப் பகுதியில் அக்னி, ஜமதக்னி என்னும் பெயரில் இருக்கிறான்.
* பார்க்கும் பார்வையில் சூர்யன், விஸ்வாமித்ர நாமகனாக இருக்கிறான்.
* கண்ணீரில் வருணன், பாரத்வாஜ நாமகனாக இருக்கிறான்.
* கண்ணின் கீழ் பாகத்தில் பூமிதேவி, கஷ்யப நாமகளாக இருக்கிறாள்.
* கண்ணின் மேல் பாகத்திற்கு த்யு
என்று பெயர். அங்கு பாரதி தேவியர், அத்ரி என்னும் பெயரில் இருக்கிறார்
No comments:
Post a Comment