ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Wednesday, June 17, 2020

#19 - மாத்ருகா சந்தி

இத3க்கெ காரணவெனிஸுவுது3 எர

டதி4க த3ஷ நாடிக3ளொளகெ3 சுர

நதி3யெ மொத3லாத3கி2 தீர்த்த23ளிஹவு கரணத3லி

பது3மனாப4னு கேஷவாதி3

த்வித3ஷ ரூபதலிப்பனல்லதி1

ம்ருதுவாத3 சுஷும்னதொளகெ3 காத்மனெனிஸுவனு ||19

 

இதகெ = மேற்சொன்ன நாடிகளுக்கு

காரணவெனிஸுவ = மூலகாரணம் என்று பெயர் பெற்ற

எரடதிக தஷ நாடிகளொளகெ = 2+10=12 நாடிகளில்

சுர நதியே மொதலாத அமல தீர்த்தகளு = களங்கமற்ற (தோஷங்களற்ற) புண்ணிய தீர்த்தங்கள்

இஹவு = இருக்கின்றன

பதுபனாபனு = பத்பனாப மூர்த்தி

கேஷவாதி த்விதஷ ரூபதலி = கேசவ, நாராயண முதலான 12 ரூபங்களில்

அல்லி = அந்த 12 நாடிகளில்

இப்ப = இருக்கிறான்

அதி ம்ருதுலவாத சுசும்னதொளகெ = மிகவும் மிருதுவான சுஷும்னா நாடியில்

ஏகாத்மனெனிஸுவனு = ஏகாத்ம என்னும் பெயரில் அழைத்துக்கொண்டு இருக்கிறான்.

 

மேற்சொன்ன 101 நாடிகளுக்கு, மூலகாரணம் (ஆதாரம்) என்று சொல்லக்கூடிய 12 நாடிகளில் சிந்திக்கவேண்டிய மூர்த்திகளை சொல்கிறார்.

 

மேற்சொன்ன 101 நாடிகளுக்கு மூலாதாரமான நாடிகள் 12. இவற்றில் கங்கை முதலான 12 நதிகள், அதாவது அந்த நதிகளின் அபிமான தேவதைகள் வசிக்கின்றனர். அந்த நாடிகள் மற்றும் நதிகளின் பெயர்களை ஸ்ரீவிஜயதாசர் தமது சுளாதியில் தெரிவிக்கிறார்.

 

ஒந்தொந்து நதிகளு குந்தாதெ ஹன்னெரடாரல்லிஹவு

மந்தாகினி இடா நாடியல்லி

பானு நந்தனெ பிங்களா நாடியல்லி

கங்காதி நாடியல்லி உண்டு காவேரி

ஹஸ்தினீகெ ஸிந்து நதியென்னி

தாம்ரபர்ணீ ஸந்தீதெ நோடி எம்புனாடியல்லி

சந்துள்ள கோமதி மத்யனாடியல்லி

புன்னாடி கண்டீகெ நோடி

சரஸ்வதி நாடியல்லி நந்தா

கிருஷ்ணவேணி குஹதி ஸோமனந்தினி

தாபதீ ஷங்கிணி நாடியல்லி வாஸவெந்து திளி

கோதெ வாருணி நாடியல்லி அந்தவாத பூஷா (பூர்ணா)

பயஸ்வினீயிந்த புட்டிபாது அல்லிகல்லி பொந்திகொண்டிப்பவு

ஞானிகளு துதிஸி மிந்து பரம பதவீய படகொம்போரு

ப்ருந்தாரக வந்த்ய விஜயவிட்டலரெயன

சந்தர்ஷன மாள்ப மஹாத்மரு பல்லரு.

 

இந்த சுளாதியில் சொல்லியிருக்கும்படி:

 

1 இடா நாடியில் மந்தாகினி

2 பிங்களா நாடியில் யமுனை

3 கங்காதி நாடியில் காவேரி

4 ஹஸ்தினி நாடியில் சிந்து

5 அலம்ப நாடியில் தாமிரபரணி

6 மத்ய நாடியில் கோமதி

7 புன்னாடி நாடியில் கண்டிகி

8 சரஸ்வதி நாடியில் நந்தா கிருஷ்ணவேணி

9 குஹு நாடியில் காவேரி

10 ஷங்கிணி நாடியில் தபதி

11 வாருணி நாடியில் கோதாவரி

12 பூஷா நாடியில் பயஸ்வினி

 

இப்படி 12 நாடிகளில் 12 நதிகளை அறிந்து ஞான தீர்த்தத்தில் ஸ்னானம் செய்யவேண்டும் என்று ஸ்ரீவிஜயதாசர் தமது சுளாதியில் விளக்கியிருக்கிறார். இதே போல பிராமணர்களில் வலது காதிலும் இருக்கின்றனர். கேசவ முதல் தாமோதர வரைக்குமான 12 ரூபங்களால் ஸ்ரீபரமாத்மன் அந்த நாடிகளில் இருக்கிறான். அனைத்து நாடிகளுக்கும் மூலாதாரமான, நடுவில் இருப்பதான சுஷும்னா நாடியில், ஸ்ரீபரமாத்மன் ஏகாத்மன் என்னும் பெயரில் வசிக்கிறான். இப்படியாக அறிந்து சிந்திப்பதால், அந்தந்த நதிகளில் ஸ்னானம் செய்த பலன் கிடைக்கிறது என்று பொருள்.


No comments:

Post a Comment