வாரிஜப4வாண்ட3தொ3ளு லகுமி
நாரசிம்ஹன ரூப கு3ணக3ளு
வாரிதி3யொளிஹ தெரெக3ளந்த3தி3 ஸந்த3ணிஸி இஹவு |
காரணாம்ஷாவேஷ வ்யாப்த1வ
தார வ்யக்தாவ்யக்த கார்யக3
ளீரயிது ஸுவிபூ4தி அந்தர்யாமி ரூபக3ளு ||27
வாரிஜபவாண்டதொளு = பிரம்மாண்டத்தில்
லகுமி நாரசிம்ஹன = லட்சுமி நரசிம்மதேவரின்
ரூபகுணகளு = ரூப குணங்கள்
வாரிதியொளிஹ = கடலில் இருக்கும்
தெரெகளந்ததி = அலைகளைப் போல
சந்தணிஸி = வியாபித்துக்கொண்டு
இஹவு = இருக்கிறது
காரண = அனிருத்தாதி ஸ்ருஷ்டிக்கு காரணனான
ரூபத்தினாலும், அம்ஷ ப்ரதிபிம்ப ருபத்தினால் ஜீவர்களிலும்
ஆவேஷ = விசேஷ ஆவேசத்தினால் பலராம, லட்சுமணாதிகளிலும்
வ்யாப்த = பிரம்மாண்டத்தில் அனைத்து இடங்களிலும்
நிலைத்திருந்தும்
அவதார = ராம, கிருஷ்ணாதி அவதார ரூபங்களாலும்
கார்ய = கார்ய ரூபங்களால் பிரபஞ்சத்திலும்
ஞானிகள ஹ்ருதயாகாஷதல்லி = ஞானிகளில் இதயங்களில்
வ்யக்த = வியாப்தனாகி
அஞ்ஞானிகளல்லி = அஞ்ஞானிகளில்
அவ்யக்த = மறைந்திருந்தும், அல்லது, பிரம்மாதி ரூபங்களால் அஞ்ஞானிகளுக்கு மறைந்திருந்து, வாசுதேவாதி ரூபங்களால் சஜ்ஜனர்களுக்கு தரிசனம் அளித்தும்
ஈரயிது சுவிபூதி = 2*5-10 வித விபூதி ரூபங்களாலும்
அந்தர்யாமி ரூபகளு = அனைத்து இடங்களிலும் அந்தர்யாமி
ரூபங்களாலும்
(இப்படியாக பரமாத்மன் கடல் அலைகளைப்
போல, தனித்தனியாகக் கண்டாலும், அனைத்து அலைகளும் சேர்ந்து எப்படி
ஒரே ஒரு கடலாக இருக்கிறதோ, அதுபோலவே அனேக ரூபாத்மகனாகி ஒருவனே
இருக்கிறான்).
லட்சுமி நரசிம்ம நாமகனான ஸ்ரீலட்சுமி நாராயணன், கடலில் அனந்தானந்தமாக அலைகள் எப்படி ஒன்றின் மேல் ஒன்றாகி ஒரே சமயத்தில்
தெரிகிறதோ அப்படி, காரண ரூபம், அம்ச,
ஆவேஷ,
வியாப்த, அவதார, கார்ய, அவ்யக்த, வ்யக்த, 10 வித விபூதி, அந்தர்யாமி என்னும் அனந்தானந்த ரூபங்களால் ஒரே சமயத்தில் காட்டிக்கொள்கிறான்.
காரண, அம்ச முதலான ரூபங்கள் என்று எந்த
ரூபங்களை சொல்கிறார் என்றால்: ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு காரணரூபங்கள் - வாசுதேவ, சங்கர்ஷண, ப்ரத்யும்ன, அனிருத்த என்னும் நான்கு ரூபங்களை, ஸ்ருஷ்டி, ஸ்திதிகளுக்காக எடுத்தான் என்று நிர்ணயத்தின் முதலாம் அத்தியாயத்தில் - ‘இத்தம் விசிந்த்ய பரமஸ்ஸது வாசுதேவ நானா பபூவ நிஜமுக்தி பதப்ரதாதா’ என்னும் ஆறாம் ஸ்லோகத்தில் துவங்கி, 9ம் ஸ்லோகம் வரைக்கும் வாசுதேவாதி
நான்கு ரூபங்களின் செயல்களை சொல்லியிருக்கிறார் ஸ்ரீமதாசார்யர். அந்த ஸ்லோக
அர்த்தங்களைப் பார்த்தால், அனிருத்தாதி ரூபங்கள், ஸ்ருஷ்டி, ஸ்திதிகளுக்கு காரணம் என்று புரியும்.
‘மமைவாம்ஷோ ஜீவலோகே ஜீவபூதஸ்ஸனாதன:’ என்னும் கீதா வாக்கியத்தின்படி, அம்ச என்றால், பிரதிபிம்ப என்றும், ஜீவரே பிரதிபிம்பரூபம் என்றும் சொல்லியிருக்கிறார்.
அத்தகைய ஜீவரில், ஜீவனாக இருப்பவை அம்ஷ ரூபங்கள், ஆவேஷ ரூபங்கள் என்றால் லட்சுமி, பிரம்ம, சேஷாதிகள், பலராம, லட்சுமண ஆகியவர்களில் இருப்பவை.
நர: பல்குன இத்யாத்யா விசேஷாவேஷினோ ஹரே: |
வாலி சாம்பாதயஷ்சைவ கிஞ்சிதாவேஷினோ ஹரே: ||
என்னும் நிர்ணய 2ம் அத்தியாயம் 33ம் ஸ்லோகத்தின் வாக்கியத்தால், அர்ஜுனாதிகள் விசேஷ ஆவேச
உள்ளவர்கள் என்றும், வாலி,
சாம்பாதிகள் பரமாத்மனின் கிஞ்சித் (கொஞ்சம்) ஆவேசம் உள்ளவர்கள் என்றும்
அறியவேண்டும். இவையே ஆவேஷ ரூபங்கள்.
வியாப்த ரூபங்கள் என்றால், பிரம்மாண்டத்தில் அனைத்து இடங்களிலும் நிலைத்திருக்கும் ரூபங்கள் என்று
பொருள். அவதார ரூபங்கள் - ராம, கிருஷ்ணாதிகள். கார்யரூப உலகத்தின்
அனைத்து பிராணிகளிலும், பிரம்ம, ருத்ராதி ரூபங்களால் ஸ்ருஷ்ட்யாதிகளை செய்திருந்தாலும், அவர்களின் தேகத்தில் தான் அஞ்ஞானிகளுக்கு அவ்யக்தானாகவே காட்டிக்கொள்வார்.
அல்லது,
அனைத்து இடங்களிலும், அனைத்து சரீரங்களில் இருந்தாலும், அஞ்ஞானிகளுக்கு தெரிய மாட்டார். ஞானிகளுக்கு அனைத்து இடங்களிலும் தெரிவார்.
அல்லது சாதாரண மனிதர்களுக்கு வாசுதேவாதி ரூபங்களால் தெரியாமலும், ராம,
கிருஷ்ணாதி ரூபங்களால் தெரிந்தும் இருக்கிறான்.
விபூதி ரூபங்கள் பத்து. அவை : நீத, சாதாரண, விசேஷ, சஜாதி, விஜாதி, நைஜ, அஹித, விஜாதி, கண்ட மற்றும் அகண்ட என்று ஐந்தாம் சந்தியில் விளக்கமாக பார்த்திருக்கிறோம். அந்தர்யாமி அனைத்து இடங்களிலும் இப்படியாக அனந்தானந்த ரூபியாகி இருக்கிறான் என்று பொருள்.
No comments:
Post a Comment