ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Saturday, June 6, 2020

#24 - பஞ்சதன்மாத்ர சந்தி

ஒந்து3 ரூபதொ3ளொந்த3 வயவதொ3

ளொந்து3 ரோமதொ3ளொந்து3 தே3ஷதி3

பொந்தி3 இப்பவஜாண்டனந்தானந்த1 கோடி13ளு |

ஹிந்தெ3 மார்க்காண்டே3ய காணனெ

ஒந்தெ3 ரூபதி3 ஸ்ருஷ்டி ப்ரயவ

இந்தி3ரேஷனொளெனிதச்சரி அப்ரமேய சதா3 ||24

 

ஒந்து ரூபதொளு = பரமாத்மனின் அனந்தானந்த ரூபங்களில் ஒன்றில்

ஒந்தவயவதொளொந்து = கை, கால் ஆகிய உறுப்புகளில் ஏதாவது ஒன்றில்

ஒந்து ரோமதொளித்து = அனேக மயிர்களில் ஒரு மயிரில்

ஒந்து தேஷதி = ஒரு பாகத்தில்

அஜாண்ட = பிரம்மாண்டங்கள்

அனந்தானந்த கோடிகளு = அனந்தானந்த எண்ணிக்கை உள்ளவைகளாக

பொந்தி இப்பவு = சேர்ந்திருக்கிறது

ஹிந்தெ = பிரளயத்தில்

ஒந்து ரூபதி = பிரளய சமயத்தில், வடபத்ர சாயியாக படுத்திருந்த ஒரு ரூபத்தில்

ஸ்ருஷ்டி பிரளயவ = வெளியில் பிரளயத்தையும், பரமாத்மனின் வயிற்றில் இருந்துகொண்டு ஸ்ருஷ்டி காரியங்களை

மார்க்கண்டேய = மார்க்கண்டேய ரிஷிகள்

காணனெ = பார்க்கவில்லையா?

இந்திரேஷனொளு = லட்சுமிபதியிடம்

ஏனிதச்சரி = இது என்ன ஆச்சரியம்?

ஸதா = அனைத்து காலங்களிலும்

அப்ரமேய = இப்படி இருக்கிறான் - என்பதை நம்மால் நினைத்துக்கூட பார்க்கமுடியாது.

 

ஸ்ரீபரமாத்மனின் அனந்தானந்த ரூபத்தில் ஒரு ரூபத்தின், அனேக இந்திரியங்களில் ஒரு இந்திரியத்தின், பற்பல மயிர்களில் ஒரே ஒரு மயிரின், பற்பல பாகங்களில் ஒரேயொரு பாகத்தில், அனேக கோடி பிரம்மாண்டங்கள் அடங்கியிருக்கின்றன. இதனைக் கண்டவர் யார் என்றால், அவர் மார்க்கண்டேய ரிஷிகள். பரமாத்மனைக் குறித்து தவம் செய்து, ‘ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹார ரூபமான உன் மாயையை நாம் பார்க்க வேண்டும்என்று வேண்ட, பரமாத்மன் மார்க்கண்டேய ரிஷிகளுக்கு பிரளயத்தைக் காட்டினான். பிரளய நீரில் வடபத்ரத்தில் படுத்திருக்கும் பகவத்ரூபத்தைக் கண்டு, அந்த ரூபத்தை தூக்கிக்கொள்ள அருகில் வர, குழந்தை வடிவில் இருந்த பகவந்தன், மூச்சுக்காற்றை பலமாக இழுக்க, மார்க்கண்டேய ரிஷிகள் அந்த ஸ்வாசத்தால் இழுக்கப்பட்டு பரமாத்மனின் வயிற்றில் நுழைந்து, அதில் பிரம்மாண்டம் முதலான அனைத்து பிரபஞ்சங்களையும் கண்டார். ஆகையால், அந்த பகவந்தனின் மகிமை நம்மால் நினைத்துப் பார்க்கமுடியாதது. இத்தகைய மகிமைகளைக் கொண்ட லட்சுமிபதி, மார்க்கண்டேயருக்கு ஸ்ருஷ்டி பிரளயாதிகளை தன் ஒரே ரூபத்தினால் காட்டியிருப்பதில் நமக்கு எவ்வித ஆச்சரியமும் இல்லை.

***
 

No comments:

Post a Comment