ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Monday, June 8, 2020

#28 - பஞ்சதன்மாத்ர சந்தி

மணிக3ளொளகி3ஸுத்ரத3ந்த3தி3

ப்ரணவபாத்3யனு சேதனா சே

தன ஜக3த்தினொளனு தி3னதொளாடுவனு சுக2பூர்ண |

3ணிவிகெயு இவகி3ல்ல பஹுகா

ருணிகனந்தானந்த ஜீவர

3ணதொளேகாஷம்ஷ ரூபதி3 நிந்து1 நியமிஸு||28

 

மணிகளொளு = மாணிக்கத்துக்குள்

இஹ = இருக்கின்ற

சூத்ரதந்ததி = கயிறினைப் போல

ப்ரணவபாத்யனு = ஓம்கார பிரதிபாத்யனான ஸ்ரீஹரி

சேதனாசேதன ஜகத்தினொளு = ஜட சேதனாத்மகவான இந்த சரீரத்தில்

அனுதினதொளு = தினந்தோறும்

ஆடுவனு = லீலைகளை செய்வான்

சுகபூர்ண = சுகபூர்ணன் ஆனதால்

தணுவிகெயு = சோர்வு

இவகில்ல = இவனுக்கு இல்லை

பஹுகாருணிக = பஹு கருணைக்கடலான

அனந்தானந்த ஜீவர கணதொளு = பற்பல ஜீவர்களின் கணங்களில்

ஏகாம்ஷரூபதி = பிம்பரூபியாகவும், பிரதிபிம்பனான ஜீவனுக்குள்ளும்

நிந்து = இருந்து

நியமிசுவ = நடத்துகிறான்.

 

ஒரு நூலில் மாணிக்கங்களை கோர்த்தால் எப்படி அந்த நூலானது அந்த மாணிக்கங்களுக்கு ஆதாரமாக இருக்கிறதோ, அப்படி ஸ்ரீபரமாத்மன் பிரம்மாதி சேதனர்களில் இருந்து, அசேதனகளான நதி, மலை ஆகியவற்றிலும், என அனைத்து பிரபஞ்சங்களுக்கும் ஆதாரமாக இருந்து அவரவர்கள் செய்யவேண்டிய செயல்களை எப்போதும் செய்து, செய்வித்து, அவன் சுகபூர்ண ஸ்வரூபன் ஆகையால், சோர்வில்லாமல் தன் லீலைகளை செய்கிறான். கருணாசமுத்திரனான ஸ்ரீஹரி வாசுதேவ ஸ்வாம்ஷரூபத்தினால் பிரம்ம தேவரில் இருந்துகொண்டு, பிரம்மாம்சத்தினால் ருத்ரதேவரில் இருந்து, இப்படி ஸ்வாம்ஷங்கள், ராம, கிருஷ்ணாதி ரூபங்களின் அம்ஷாம்ஷ ரூபங்கள், இவற்றைத் தவிர ஜீவர்களிலும் இருந்து, அவரவர்களின் யோக்யதைக்கேற்ப செயல்களை தீர்மானித்து, செய்து, செய்விக்கிறான் என்று பொருள்.


***

No comments:

Post a Comment