ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Tuesday, June 16, 2020

#18 - மாத்ருகா சந்தி

எரட3தி4க எப்பத்தெனிப ஸா

விரத3 நாடிகெ3 முக்2யவேகோ

த்தர ஷதக3ளல்லிஹவு நூராஒந்து3 மூர்த்திக3ளு |

அரிது தே3ஹதி3 கலஷனாமக

ஹரிகெ3ளெ3ளிவெந்து நைர

ந்தரதி3 பூஜிஸுதிஹரு பரமாத3ரதி3 பூ4சுரரு ||18

 

எரடதிக எப்பத்தெனிப = 72 எண்ணிக்கையில்

ஸாவிரத நாடிகெ = 72*1000 = 72000 நாடிகளில்

முக்ய = முக்கியமான

ஏகோத்தர ஷதகளு = 101 நாடிகள்

அல்லி = அந்த 101 நாடிகளில்

நூராஒந்து மூர்த்திகளு = 101 மூர்த்திகள்

இஹவு = இருக்கின்றன

அரிது = இப்படியாக அறிந்து

தேஹதி = தன் தேகத்தில்

கலஷனாமக ஹரிகெ = கலஷ என்னும் பெயருள்ள ஹரிக்கு

களெகளெந்து = 101 நாடிகளில் இருக்கும் பகவத்ரூபங்களின் கலைகள் என்று

நைரந்தரதி = நிரந்தரமாக

பூஸுரரு = பிராமணர்கள்

பரமாதரதி = மிகவும் பக்தியுடன்

பூஜிஸுதிஹரு = பூஜித்துக் கொண்டிருப்பர்.

 

பரமாத்மனுக்கு அபிஷேகங்களை செய்யும்போது நாம் செய்யும் கலஷ பூஜையின் சமயத்தில் ஆவாஹனம் செய்யவேண்டிய 101 மூர்த்திகளை, நம் தேகத்தில் இருக்கும் 101 முக்கிய நாடிகளில் பூஜிக்க வேண்டும் என்று இந்த பத்யத்தில் சொல்கிறார்.

 

நம் தேகத்தில் இருக்கும் மொத்த நாடிகள் 72,000. அவற்றில் முக்கியமானவை 101 நாடிகள். அந்த நாடிகளில் கலஷஸ்ய முகே விஷ்ணு:ஆகிய ஸ்லோகங்களால், கலசத்தில் கலச நாமக பரமாத்மனை சிந்தித்து 101 மூர்த்திகளை ஆவாஹனம் செய்யும் சம்பிரதாயம், தந்த்ரசார ரீதியாக தேவதார்ச்சன மந்திரத்தில் இருக்கிறது.

 

ஏகபஞ்சாஷத் வர்ணானாம் சதுர்விம்ஷதி மூர்த்தய: |

ஆத்மாத்யா வாசுதேவாத்யா விஷ்வாத்யா மத்ஸ்ய கச்சபௌ |

க்ரோடோ ந்ருசிம்ஹ: ஸவடுர்ஜாமதக்னி ரகூத்வஹௌ |

வாஸிஷ்டயாதவௌ க்ருஷ்ணாவாத்ரேயோ புத்தகல்கினௌ |

சிம்ஷு மாரஸ்சேதி ஷதங்கலா: கலஷதேவதா: ||

 

அஜாதி 51, கேசவாதி 24, ஆத்ம, அந்தராத்ம, பரமாத்ம, ஞானாத்ம என்னும் 4 மூர்த்திகள், வாசுதேவ, சங்கர்ஷண, ப்ரத்யும்ன, அனிருத்த இவை 4, விஸ்வ, தைஜஸ, ப்ராக்ஞ, துரிய இவை 4, மத்ஸ்யாதி 10, வேதவ்யாஸ, தத்தாத்ரேய, சிம்சுமார, ஸ்ரீலட்சுமி நாராயண, என மொத்தம் 101 மூர்த்திகள். இவை கலச மூர்த்தியின் களாபூதங்கள் என்று தந்த்ரசாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த மூர்த்திகளே நம் தேகத்தில் இருக்கும் 101 முக்கிய நாடிகளில் இருக்கின்றன. இவைகளும் கலச நாமக பரமாத்மனின் கலைகள் என்று அறிந்து, மிகவும் பக்தியுடன், ஞானிகளான பிராமணர்கள் பூஜித்து வருவார்கள். பிராமணர் என்றால் பிரம்மஞானிகள் என்று பொருள். பிராமணராக பிறந்தவர் அனைவரும் இப்படி பூஜிக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. செய்கிறார்கள்என்று சொல்லினால், சம்பிரதாயத்தை சொல்கிறார். இதனால், அதிகாரிகள் அனைவரும் இப்படிதான் செய்யவேண்டும் என்பது கருத்து. 

No comments:

Post a Comment