நாஸிகதி3 நாஸத்ய த3ஸ்ரரு
ஷ்வாஸமானி ப்ராண பா4ரதி
ஹம்ஸ த4ன்வந்த்ரிக3ளு அல்லல்லிப்ப ரவரொளகெ3 |
பே4ஷ பா4ஸ்கரரக்ஷியுக3ள க
தீ4ஷரெனிபரு அவரொளகெ3 ல
க்ஷ்மீஷ த3தி4வாமனரு நிய்யாமிசுதலிருதிஹரு ||8
நாஸிகதி = மூக்கில்
நாஸத்ய தஸ்ரரு = நாஸத்ய, தஸ்ர என்னும் அஸ்வினி தேவதைகள் இருவரும் (பிராணேந்திரியத்திற்கு அபிமானியாக
இருக்கிறார்கள்)
ஷ்வாஸமானி ப்ராண பாரதி = ஷ்வாஸத்திற்கு அபிமானிகளான
வாயுதேவர் மற்றும் பாரதிதேவி (இவர்களும் அங்கு இருக்கின்றனர்)
அவரொளகெ = அஸ்வினி தேவதைகளுக்கு உள்ளே, ப்ராண பாரதி தேவியருக்குள்ளும்
அல்லல்லி = அந்தந்த இடங்களில்
ஹம்ஸ தன்வந்த்ரிகளு = ஹம்ஸரூபி ஸ்ரீபரமாத்மனும், தன்வந்த்ரி தேவரும்கூட
இப்பரு = இருக்கின்றனர்.
பேஷபாஸ்கரரு = சந்திர சூர்யர்கள் (ப=
நட்சத்திரங்களுக்கு; ஈஷ= தலைவன் ஆகையால், பேஷ = சந்திரன்).
லக்ஷ்மீஷ = லட்சுமிபதியான நாராயணன்
ததிவாமனரு = ததிவாமனதேவர்
நியாமிஸுத = இவற்றை தீர்மானித்தவாறு
இருதிஹரு = இருக்கிறார்
’நாஸத்யதஸ்ரௌ பரமஸ்யனாஸெ’ என்னும் பாகவத வாக்கியத்தினால் நாஸத்ய-தஸ்ர என்னும் அஸ்வினி தேவதைகள் இருவர் இட, வல மூக்குகளுக்கு அபிமானிகளாக அங்கு இருக்கின்றனர். அங்கிருந்து கொண்டு, ஸ்வாஸ உஸ்வாஸ செயல்களை செய்து, செய்வித்து, ஸ்வாஸாபிமானிகளாக, பிராண பாரதி தேவியர் இருக்கின்றனர். இந்த நான்கு பேரிலும் அந்தந்த இடங்களில் இருந்து, ஹம்ஸ, தன்வந்த்ரி என்னும் இரு பகவத்ரூபங்களை சிந்திக்க வேண்டும். இரு கண்களுக்கு அபிமானிகள் சந்திர சூர்யர்கள். அவர்களின் அந்தர்யாமியாக ஸ்ரீநாராயணன் மற்றும் ததிவாமனன் இருந்து, பார்க்கும் செயல்களை தீர்மானிக்கின்றனர்.
No comments:
Post a Comment