ஆம்னயப்ரதிபாத்3ய ஸ்ரீப்ர
த்3யும்ன தே3வனு தேஹதொ3ளகெ3 ஸு
ஷும்னதீடா3 பிங்க3ள3தி3 விஷ்வாதி ரூபத3லி |
நிர்மலாத்மனு வாணி வாயு ச
துர்முக2 ரொளித்தகி2ல ஜீவர
கர்ம கு3ணவனுஸரிஸி நடெ3வனு விஷ்வவ்யாபக1னு ||20
ஆம்யன ப்ரதிபாத்யனாத = வேதங்களில் புகழப்பட்டவனான
நிர்மலாத்மனு = உலகம் முழுதும் வியாபித்திருக்கும்
ஸ்ரீப்ரத்யும்ன தேவனு = ஸ்ரீப்ரத்யும்ன ரூபி
தேஹதொளகெ = நம் தேகத்தில்
சுஷும்னதி = சுஷும்னா நாடியில்
இடபிங்களதி = இடா, பிங்களா நாடிகளில்
ஸ்ரீவிஷ்வாதி ருபதலி = விஷ்வ, தைஜஸ,
ப்ராக்ஞ என்னும் மூன்று ரூபங்களில்
வாணி = சரஸ்வதி தேவியர்
வாயு, சதுர்முகரொளித்து = வாயு, பிரம்மதேவரில் இருந்து
அகிலஜீவர = அனைத்து ஜீவர்களையும்
கர்ம = கர்மங்களை
குணவனுசரிஸி = சத்வாதி குணங்களுக்கேற்ப
நடெவனு = செயல்களை செய்து செய்விக்கிறான்.
வேதங்களால் புகழப்படுபவனான, நிர்தோஷ ஸ்வரூபியான, அனைத்து உலகங்களிலும் அனைத்து இடங்களிலும் வியாபித்திருப்பவனான, ஸ்ரீபரமாத்மன் ப்ரத்யும்ன நாமகனாக, சுஷும்னா, இடா, பிங்களா என்னும் மூன்று நாடிகளில் வியாப்தனாக இருக்கிறான். அந்த நாடிகளில் அபிமானிகளாக, சரஸ்வதி, வாயுதேவர், பிரம்மதேவர் இருக்கிறார்கள். அவர்களில் கண்டரூபியாக ப்ரத்யும்னனே, விஸ்வ, தைஜஸ, ப்ராக்ஞ என்னும் 3 ரூபங்களில் இருந்து, அனைத்து ஜீவர்களின் தகுதிக்கேற்ப, அவரவர்களின் வினைப்பயன்களுக்கேற்ப கர்மங்களையும், சத்வாதி குணங்களுக்கேற்ப செயல்களை செய்து செய்விக்கிறான்.
No comments:
Post a Comment