ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Sunday, June 14, 2020

#11 - மாத்ருகா சந்தி

ஜ்யோதியொளகி3ப்ப கபிலனு புரு

ஹூதமுக2 தி3க்பதிக3ளிந்த3

மேதனாகி3ஹ தக்‌ஷிணாக்‌ஷிய முக2தொ3ளிஹ விஸ்வ

ஸ்வேத வர்ண சதுர்பு4ஜனு

ம்ப்ரீதியிந்த3லி ஸ்தூ2ல விஷயவ

சேதனரிகு3ண்டு3ணிப ஜாக்3ரதெயித்து ந்ருக3ஜாஸ்ய ||11

 

ஜ்யோதிரொளகெ = கண்ணின் ஒளியில்

கபில = கபில நாமக பரமாத்மன்

இப்பனு = இருக்கிறான்

ஸ்வேதவர்ண = வெள்ளை வண்ணத்தில்

சதுர்புஜனு = நான்கு தோள்களைக் கொண்ட

ந்ருகஜாஸ்ய = 18 மனித முகங்கள், 1 யானை முகம் என மொத்தம் 19 முகங்களைக் கொண்டவனான

விஸ்வ = விஸ்வ நாமக பரமாத்மன்

புருஹூத முக = தேவேந்திரன் முதற்கொண்டு

திக்பதிகளிந்த = திக்பாலகர்களால்

ஸமேதனாகி = உடன்

தக்‌ஷிணாக்‌ஷிய = வலது கண்ணின்

முகதொளு = முன் பாகத்தில்

இஹ = இருக்கிறான். இந்த விஸ்வரூபியான பரமாத்மன், சேதனர்களுக்கு மிகவும் அன்புடன்

ஜாக்ரதி இத்து = ஜாக்ரதெ அவஸ்தையில் இருந்து (விழித்திருந்து)

ஸ்தூல விஷயவ = ஸ்தூலமான விஷய சுகத்தை

உண்டு = தான் ஸ்வீகரித்து

உணிப = உண்ண வைக்கிறான்.

 

கபில நாமக பரமாத்மன் கண்ணின் ஒளியில் இருக்கிறான். விஸ்வ நாமக பரமாத்மன் இந்திராதி அஷ்ட திக்பாலகர்களால் வணங்கப்பட்டு, அவர்களுடன், வலது கண்ணின் முன்பாகத்தில் இருக்கிறான். இந்த பரமாத்மன், வெள்ளை நிறத்தில், நான்கு தோள்களைக் கொண்டவனாக இருக்கிறான். மனிதனின் முகமும், யானைமும் முகமும் இவனுக்கு இருக்கிறது என்று தாசராயர் ந்ருகஜாஸ்யஎன்னும் பத்யத்தினால் சொல்கிறார்.

 

அதற்கு மொத்தம் எவ்வளவு தலைகள் என்று சொல்லாமல் இருந்தாலும், ‘ந்ருகஜாஸ்யஎன்றால், மனித மற்றும் யானையின் முகம் என்று சொன்னபிறகு, ஒரே முகம் இல்லை என்பது புரிந்துவிட்டது. அப்படியெனில், எவ்வளவு முகங்கள் என்றால், மாண்டூக உபநிஷத்தில் :

 

அஷ்டாதஷ முகான்யஸ்ய புமாகாராணி சர்வஷ: |

மத்யமந்து கஜாகாரஸ்சதுர்பாஹு: பர: புமான் ||

 

மனித முகங்கள் - 18. நடுவில் ஒரு முகம் மட்டும் யானையின் முகம். 4 தோள்களைக் கொண்ட பரமபுருஷன் என்று சொல்லியிருக்கிறார்கள். அதே அர்த்தத்தையே இங்கு புரிந்து கொள்ளவேண்டும். இந்த விஸ்வ நாமகன், ஜீவர்களுக்கு ஜாக்ரதெ அவஸ்தையைக் கொடுக்கிறான். ஆகையால், ஜீவர்கள் ஜாக்ரதெ அவஸ்தையில் அனுபவிக்க வேண்டிய விஷய சுகங்களை அவர்களின் கண்களில் இருந்துகொண்டு, அன்புடன், தான் அனுபவித்து, ஜீவர்களுக்கும் சுகங்களைக் கொடுக்கிறான். அதில் சில விசேஷங்கள் உள்ளன. அது என்னவெனில்:

 

விஸ்வரூபியான பரமாத்மனுக்கு 19 முகங்கள் என்று சொல்கின்றனர். அதில் எந்தெந்த முகத்திலிருந்து யார்யாருக்கு ஜாக்ரதெ அவஸ்தையைக் கொடுக்கிறான் என்னும் விஷயத்தை, ப்ரகாஷ சம்ஹிதா என்னும் கிரந்தத்தில் விளக்கமாக சொல்லியிருக்கின்றனர். அது என்னவெனில்:

 

தக்‌ஷிணாகதோ விஷ்வ: ஸத்வஸ்த: ஸத்யபாகத: |

உத்தமானாம் மத்யமானாம் னீசானாம் தத்வமானினாம் |

த்ரிபிர்முகை: ஸவ்யகதைரவஸ்தா ஜாக்ருதாஹ்வயா |

கரோத்யவஸ்தாமம் த்யஸ்தைஸ்த்ரிபிராஸ்யை: ஸஏவஹி |

நிரம்ஷானாஞ்ச ஸாம்ஷானாம் ஜாக்ருதா ஸம்ப்ரவர்தக: |

பும்ஸாமேவம் வாமகாஸ்யை: ஸ்த்ரீணாமேவம் கரிஷ்யதி ||

 

சேதனர்களின் வலது கண்ணில் விஷ்வ நாமக பரமாத்மன் சத்வகுணம் நிறைந்தவனாக, தத்வாபிமானிகளான தேவதைகளில் உத்தமரான பிரம்மாதிகளுக்கும், மத்யமரான இந்திராதிகளுக்கும், அதமரான புஷ்கராதிகளுக்கும், இத்தகைய மூன்று முகங்களால் ஜாக்ருத அவஸ்தையைக் கொடுக்கிறார். அந்த மூன்று முகங்களுக்கு நடுவே இருக்கும் மூன்று முகங்களால் மனுஷ்யோத்தமர், மனுஷ்யரில் மத்யமர், அதமர் என்னும் மூன்றுவித மக்களுக்கும் ஜாக்ரத அவஸ்தையைக் கொடுக்கிறார்.

 

அடுத்த மூன்று முகங்களால், தைத்யோத்தமர், மத்யமர், அதமரான ஸாம்ஷர், நிரம்ஷரான தைத்யர் இவர்களுக்கு ஜாக்ருத அவஸ்தையைக் கொடுக்கிறார். இப்படியே வலதுபக்கத்து ஒன்பது முகங்களால் புருஷர்களுக்கு ஜாக்ரத அவஸ்தையைக் கொடுக்கிறார். இதைப்போலவே யானை முகத்திற்கு இடது பக்கத்தில் இருக்கும் ஒன்பது முகங்களால் தேவ, மானுஷ, தைத்ய என்னும் பெயர்களால் ஸ்த்ரியர்களுக்கும் ஜாக்ரதெ அவஸ்தையைக் கொடுக்கிறார். இந்த விசேஷ அர்த்தங்களையே தாசராயர் இந்த பத்யத்தில் சொல்லியிருக்கிறார். 

No comments:

Post a Comment