ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Friday, June 12, 2020

#4 - மாத்ருகா சந்தி

நாபி4யலி ஷட்கோண மண்ட3

தீப4விஷ்யத் பி3ரம்மனொளு மு

க்தாப ஸ்ரீப்ரத்யும்னனிப்பனு விபுத43ஸேவ்ய |

ஷோபி4ஸுத கௌஸ்துப4வெ மொதலா

தா34ரண ஆயுத43ளிந்த ம

ஹாப4யங்கர பாபபுருஷன ஷோஷிஸுத நித்ய ||4

 

நாபியலி = நாபிக் கமலத்தில்

ஷட்கோண மண்டலதி = ஆறு கோணங்களைக் கொண்ட மண்டலத்தின் நடுவில்

ஈ பவிஷ்யத் பிரம்மனொளு = அடுத்த கல்பத்தில் பிரம்மபதவியை அடையும் வாயுதேவரில்

முக்தாப = முத்தினைப் போல ஒளிரும்

ஸ்ரீபிரத்யும்னனிப்பனு = ஸ்ரீபிரத்யும்னரூபி பகவந்தன் இருக்கிறான்

விபுதகணசேவ்ய = அவன், பிரம்மாதி தேவதைகளால் வணங்கப்படுபவன்

கௌஸ்துபவெ மொதலாத = கௌஸ்துப முதலான

ஆபரண = ஆபரணங்களால்

ஆயுதகளிந்த = சக்ராதி ஆயுதங்களால்

ஷோபிஸுத = அலங்கரித்துக்கொண்டு

மஹாபயங்கர = மகா பயங்கரனாகி

பாபபுருஷன = பாப புருஷனை

நித்ய = தினந்தோறும்

ஷோஷிசுத = வென்றவாறு (அழித்தவாறு)

 

முந்தைய பத்யத்தில், மூலாதாரத்திலிருந்து துவங்கி தலை வரைக்கும், 6 இடங்களில் இருக்கும் 6 தாமரைகளில், தலையில் இருக்கும் ஒரு தாமரையைத் தவிர, பாக்கி 5 தாமரைகளில் இருக்கும் பகவந்தனின் அனிருத்தாதி ரூபங்களை சொல்லியிருந்தார். இந்த பத்யத்திலிருந்து, அந்த தாமரையில் இருக்கும் த்ரிகோண மண்டலங்களை, அதில் இருக்கும் பகவத்ரூபங்களின் சிந்தனையை சொல்லியவாறு, பாபபுருஷ விசர்ஜனா லட்சணத்தையும் கூறுகிறார்.

 

மூலாதாரத்தில் துவங்கி, மேற்சொன்ன ஆறு தாமரைகளிலும், மத்திய பிரதேசத்தில் 6 மண்டலங்கள் இருக்கின்றன.

* முக்கோண மண்டலம்,

* அறுகோண மண்டலம்

* 12 கோண மண்டலம்,

* வட்ட மண்டலம்

* முக்கோண மண்டலம்

* வட்ட மண்டலம் என மொத்தம் ஆறு மண்டலங்கள் உள்ளன. இதற்கு ஆதாரம்:

 

த்ரிகோணவன்ஹௌச ஷடஸ்ரவாயோ த்விஸ்தாவதஸ்ர த்விஸ்தாவதஸ்ர ரவிவ்ருத்த ஷஷித்ரிவன்ஹௌ |

வ்ருத்தே வதாவபி விசிந்த்யமிதம் தஷார்த்தரூபம் ஸிதம் ததகிளம் ஹ்ருதயாத்பரஸ்தம் || 165

 

என்னும் இந்த ஆதாரத்தினால், மேற்சொன்ன விதத்தில் 6 மண்டலங்கள் இருக்கின்றன.

 

த்ரிகோண மண்டலம் - அக்னி மண்டலம் என்றும்,

அறுகோண மண்டலம் - வாயு மண்டலம் என்றும்,

12 கோண மண்டலம் - சூர்ய மண்டலம் என்றும்,

வட்ட மண்டலம் - சந்திர மண்டலம் என்றும் இதனுடன் இன்னொரு த்ரிகோண & வட்ட மண்டலங்கள் சேர்ந்து, மொத்தம் 6 மண்டலங்கள் உள்ளன. இவற்றில், அனிருத்தாதி 5 ரூபங்களை சிந்திக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். இவற்றில், இந்த பத்யத்தில், நாபியில் இருக்கும் அறுகோண் மண்டலத்தில் சிந்திக்க வேண்டிய பகவத்ரூபங்களைப் பற்றி சொல்கிறார்.

 

நாபியில் ஷட்கோண மண்டலம் இருக்கிறது. அதில் நீல வர்ணனாக, அடுத்த கல்பத்தில் பிரம்மபதவியை வகிக்கப்போகும் வாயுதேவர் இருக்கிறார். அவரில் அந்தர்யாமியாக, தேவதைகளால் வணங்கப்படுபவனான, ஸ்ரீபிரத்யும்னன், நீலமணிகளின் நடுவே இருக்கும் முத்தினைப் போல ஒளியுள்ளவனாக, கௌஸ்துப முதலான ஆபரணங்களை அணிந்தவனாக, சக்ர சங்கு முதலான ஆயுதங்களை தரித்தவனாக, அலங்கரிக்கப்பட்டவனாக, மகாபயங்கரனான பாபபுருஷனை தினந்தோறும் வென்று கொண்டிருக்கிறான். பாபபுருஷனின் லட்சணங்களை பாபபுருஷ விசர்ஜன மந்திரத்தில் பிரம்மஹத்யா ஷிரஸ்கஞ்சஆகிய வாக்கியங்களால் சொல்லியிருப்பர்.

 

பாபபுருஷனுக்கு பிரம்மஹத்யவே சிரஸ். ஸ்வர்ணஸ்தேய என்னும் மகாபாபமே இரு தோள்கள். சுராதான என்பதே மார்பு. குருஸ்த்ரி கமன என்னும் மகாபாபமே இடுப்பு. இத்தகைய மஹாபாபங்களே இரு பாதங்கள். மற்ற பாவங்களே இதர உறுப்புகள். கையில் கத்தி, கேடயம் ஆகியவற்றை தரித்துக்கொண்டு, கருப்பு வண்ணமாக இருக்கிறான் என்று இடது இடுப்பில் சிந்தித்து, பின் அந்த பாபபுருஷனை நாபி பிரதேசத்திற்கு இழுத்து வருவதாக நினைத்து, நாபியில் :

 

ஷட்கோண மண்டல மத்யஸ்தோ நீலவர்ணோ வாயுபீஜவாச்ய: பரமாத்மா வாய்வந்தர்யாமி ஸ்ரீப்ரத்யும்னோ பகர்வா மச்சரீரஸ்தம் பாபபுருஷம் வாயுனா ஷோஷயதுஎன்று உச்சரித்து வாயு பீஜமான யம்என்னும் பீஜாக்‌ஷரத்தை 6 முறை, ஓம்காரத்துடன் சேர்த்து சொல்லி, அந்த பாபபுருஷன் உலர்ந்தான் (அழிந்தான்) என்று சிந்திக்க வேண்டும். என்று சொல்லியிருக்கிறார்கள்.

 

இதே விஷயத்தையே தாசராயர் இங்கு சொல்லியிருக்கிறார். முக்தாபப்ரத்யும்னன் - முத்தினைப் போல ஒளிர்கிறான் என்றார். மேற்சொன்ன மந்திரத்தில் நீலவர்ணோவாயு பீஜவாச்ய:என்னும் சொல்லினால், பிரத்யும்னன் நீல வர்ணனாக இருக்கிறான் என்று சொல்கிறார். இதன் பொருள் என்னவெனில், அறுகோண மண்டலத்தில், நீல வர்ணனான வாயுதேவர் இருக்கிறார். அவரின் அந்தர்யாமி ஆனதால், ஞானிகளுக்கு சாதாரண ஒளியைக் கொண்டவனாக, இருட்டில் இருக்கும் முத்தினைப் போல அதிக வெளிச்சம் இல்லாமல், நீல வண்ண முத்தினைப் போல இருக்கிறான். அவன் நீலவண்ண வாயு அந்தர்யாமியானதால், அந்த அந்தர்யாமி ரூபத்தைக் காணாமல், நீல வர்ணத்தை மட்டுமே கண்டனர். ஆகையால், நீலவர்ணன் என்று மட்டும் சொல்லினர் என்று அறியவேண்டும்.


No comments:

Post a Comment