ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Wednesday, June 10, 2020

#32 - பஞ்சதன்மாத்ர சந்தி

ப்ரளய ஜலதி3யொளுள்ள நாவெயு

ஹொலபு3கா3ணதெ3 ஸுத்துவந்த3தி3

ஜலருஹேக்‌ஷண அமல கு3ண ரூபக3ள சிந்திஸுத |

நெலெயகா3ணதெ3 மஹலகுமி

ஞ்சலவனைதி3 ளல்ப ஜீவரி

3ளவடு3வ தே3னிவன மஹிமெக3ளீ ஜக3த்ரயதி3 ||32

 

ப்ரளய ஜலதியொளுள்ள = பிரளய சமுத்திரத்தில் இருக்கும்

நாவெயு = படகு

ஹொலபுகாணதெ = அதன் கரையைக் காணாமல்

ஸுத்துவந்ததி = சுற்றிக் கொண்டிருப்பதைப் போல

ஜலருஹேக்‌ஷணன = தாமரைக் கண்ணனான ஸ்ரீஹரியின்

அமலகுண ரூபகள = மிகச்சிறந்த களங்கமற்ற குணரூபங்களை

சிந்திஸுத = எண்ணியவாறு

நெலெயகாணதெ = அதனை அறியமுடியாமல்

மஹாலகுமி = மஹா லட்சுமியானவர்

சஞ்சலவனு = மன சஞ்சலத்தை

யைதிதளு = அடைந்தாள். (இப்படி இருக்கையில்)

ஈ ஜகத்ரயதி = இந்த மூன்று உலகங்களையும் (பாதாள, பூமி ஸ்வர்க்காதி மூன்று உலகங்களையும்)

இவன மஹிமெகளு = இந்த பரமாத்மனின் மகிமைகளை

அல்ப ஜீவரிகெ = சாமான்ய ஜீவர்களுக்கு

அளவடுவதேனு? = இவ்வளவுதான் என்று சொல்வதற்கு சாத்தியமா? (என்றைக்கும் சாத்தியம் இல்லை என்று பொருள்)

 

பகவந்தனின் குணரூபாதி மகிமைகளை, முழுமையாக அறிவதற்கு, யாருக்கும் சாத்தியம் இல்லை என்னும் விஷயத்தை ஓர் ஆதாரத்துடன் விளக்குகிறார்.

 

உலகம் முழுக்க பிரளய நீரில் மூழ்கியிருக்கும்போது, அதில் ஒரு படகு மட்டும் இருந்தால், அந்த படகு கரையைக் காணாமல் எப்படி தண்ணீரில் சுற்றிக்கொண்டிருக்குமோ, அதுபோல, மகாலட்சுமிதேவி பரமாத்மனின் அபாரமான குணராசிகளின் ஆதி-அந்த்யத்தைக் காணமுடியாமல், அதிலேயே சுற்றிக்கொண்டு, மன சஞ்சலத்தை அடைந்தாள். இப்படி சொன்னபிறகு, இன்னும் சாதாரண இதர ஜீவர்கள், பரமாத்மனின் குணாதி மகிமைகளை அறிவது எப்படி?


***

No comments:

Post a Comment