ஜ்வரனொளிப்பத்தேளு ஹரனொள
கிருவனிப்பத்தெண்டு ரூபதி3
எரடு3 ஸாவிரதெ3ண்டு நூரிப்பத்த1 ஏளெனிப |
ஜ்வரஹராஹ்வய நாரசிம்ஹன
ஸ்மரணெ மாத்ரதி3 து3ரித1ராஷிக3
ளிரதெ போ1பு1வு த4ரணிபிம்ப3வ கண்ட3 ஹிமத3ந்தெ ||16
ஜ்வரனொளு = மஹேஸ்வரனிடமிருந்து தோன்றிய ஜ்வரனுக்குள்
இப்பத்தேளு = 27 ரூபங்களால்
ஹரனொளகிருவ = ஜ்வரனை ஸ்ருஷ்டித்த ஹரனில்
இப்பத்தெண்டு ரூபதி = 28 ரூபங்களில்
எரடு சாவிரதெண்டு நூரிப்பத்த ஏளெனிப = 2827 அனிருத்த ரூபங்களில்
ஜ்வரஹராஹ்வய = ஜ்வரஹர என்னும் பெயருள்ள
நாரசிம்ஹன = நரசிம்மனின்
ஸ்மரணெ மாத்ரதி = நினைத்த மாத்திரத்திலேயே
துரித ராஷிகளு = பாப ராசிகள் அல்லது கஷ்ட ராசிகள்
தரணி பிம்பவ = சூரிய மண்டலத்தை
கண்ட = பார்த்த
ஹிமதந்தெ = பனித்துளியைப் போல அல்லது குளிரைப் போல
இரதெ போபுவு = இல்லாமல் போய்விடும்.
இரு பத்யங்களால், நரசிம்ம தேவரின் மகிமைகளை விவரிக்கிறார். ருத்ர தேவரிடமிருந்து ஸ்ருஷ்டி ஆனது
மஹேஸ்வர ஜ்வரம். இந்த கதையானது, ஹரிவம்சத்தில், உஷாஹரண கதையில் ஸ்ரீகிருஷ்ணனுக்கும் ருத்ரருக்கும் போர் நடந்த சந்தர்ப்பத்தில்
வருகிறது. இதே கதையை மகாபாரத தாத்பர்ய நிர்ணய 22ம் அத்தியாயம் 259ம் ஸ்லோகத்திலிருந்து 265 ஸ்லோகம் வரைக்கும் விவரமாக
சொல்லியிருப்பார். அது என்னவெனில்:
அதக்ருஷ்ண: ஸமாருஹ்ய கருடம் ராமஸம்யுத: |
ப்ரத்யும்னோனச தத்ராகாத் ப்ரதமந்தத்ரவன்ஹிபி: ||
யுத்ட்வேவாங்கிரஸாசைவ க்ஷணாத்வித்ராவ்யர்தா ஹரி: | 259
வித்ராவ்ய ஷர்வப்ரமதானாஸஸாத ஜ்வரந்தத: |
தேன பஸ்ம ப்ரஹாரெணஜ்வரிதம் ரோஹிணீசுதம் | 260
ஆஷ்லிஷ்ய விஜ்வரம் சக்ரி வாசுதேவோ ஜகத்ப்ரபு: |
ஸ்வயம் விக்ரீட்யதேனாத கிஞ்சித்காலம் ஜனார்த்தன: | 261
நிஷ்பிஷ்ய முஷ்டிபிஷ்சான்யம் ஸஸர்ஜஜ்வர மச்யுத: |
ஸ்வயம் ஜித்வாபிகிரிஷ ப்ருத்யம் நாலமிதிப்ரபு: | 262
ஸ்வப்ருத்யேன சேதவ்ய யித்யன்யம் ஸஸ்ருசேததா |
ஜ்வரேண வைஷ்ணவேனாஸௌ சுப்ருஷம் பீடிதஸ்ததா ||263
க்ராஸார்த்த முபனீதஷ்ச ஜகாம ஷரணம் ஹரிம் |
தேனஸ்துதஸ்ஸ பகர்வா மோசயாமாஸதம் ப்ரபு: || 264
தன் மகளான உஷாவை காந்தர்வ முறையில் ரகசியமாக திருமணம்
செய்து,
அவளது அந்தப்புரத்தில் மறைந்திருந்த அனிருத்தனை, பாணாசுரன் போரில் வென்று, நாகாஸ்திரத்தினால் கட்டினான். இதனை
நாரதரிடமிருந்து அறிந்து கொண்ட ஸ்ரீகிருஷ்ணன், பலராம, பிரத்யும்னருடன், கருடவாகனனாக, பாணாசுரனின் பட்டணத்திற்கு வந்தார். அங்கு முதலில் அங்கிரஸ முதலானவர்களுடன்
போர் புரிந்து, ஒரே நொடியில் அவர்கள் அனைவரையும் வென்றார்.
அப்போது ருத்ரர், பாணாசுரனுக்கு உதவி செய்வதற்காக ஒரு ஜ்வரத்தை ஸ்ருஷ்டித்து கிருஷ்ணனுடன் போர்
புரிவதற்கு அனுப்பினார். அந்த ஜ்வரமானது, முதலில் பலராமனின் மேல் விபூதியைக்
கொட்ட,
அதன் வீர்யத்தால், பலராமனுக்கு உடம்பு முழுக்க ஜ்வரம் பரவி மிகவும் துன்பப்பட, ஸ்ரீகிருஷ்ணன் பலராமனை கட்டிக்கொண்டு அந்த ஜ்வரத்தை போக்கினான்.
அப்போது, மஹேஸ்வரனின் ஜ்வரம், பலராமனை விட்டு, கிருஷ்ணனிலேயே நுழைந்தது. ஸ்ரீகிருஷ்ணன் சிறிது நேரம் கஷ்டப்பட்டவனைப் போல
நடித்து,
பின் தன் முஷ்டியினால் அடித்து அந்த ஜ்வரனை வென்றான். ருத்ர பக்தரை தன் பக்தன்
மூலமாகவே வெல்லவேண்டும் என்னும் நோக்கத்தில், தானும் ஒரு ஜ்வரனை ஸ்ருஷ்டித்தான். அப்போது, கிருஷ்ணனின் ஜ்வரம் புறப்பட்டு, மஹேஸ்வரனின் ஜ்வரத்தை வெளியில்
இழுத்து,
துன்புறுத்தி, இறுதியில், அந்த ஜ்வரத்தையே தின்றுவிட வேண்டுமென்று முயல, மஹேஸ்வரனின் ஜ்வரம், ஸ்ரீகிருஷ்ணனிடம் உயிர்ப்பிச்சை
கேட்டது.
அந்த ஜ்வரத்தால் வணங்கப்பட்டு, தன் ஜ்வரத்தை நிறுத்தி, மஹேஸ்வரனின் ஜ்வரம் மட்டுமே
பூமியில் இருக்குமாறு வரத்தைக் கொடுத்து ‘ நீ இவ்வளவு பாகங்களால் மனிதர்களிலும், இவ்வளவு பாகங்களால் மிருக, மரங்களில் இருக்க வேண்டும் என்றும், ஜ்வரத்தால் பாதிக்கப்படும் மனிதன் உன்னை நான் வென்ற இந்த கதையைக் கேட்க, சொல்ல, உடனடியாக அவனிடமிருந்து அந்த ஜ்வரம் பரிகாரமாக வேண்டும் என்றும் வரத்தைக்
கொடுத்து அனுப்பினார்.
ஜ்வரனை வென்ற பிறகு, ஸ்வயம் ருத்ரதேவரே ஸ்ரீகிருஷ்ணனிடம் போரைத் துவக்கினார். அப்போது, பாணாசுரன் போருக்கு வர, அவனை வென்றதுடன், அவனைக் கொல்வதற்கு ஆயுதம் ஏந்தியதைப் பார்த்த ருத்ரதேவர், கிருஷ்ணனிடம் வேண்டினார். கிருஷ்ணனும் ருத்ரதேவரின் வேண்டுகோளுக்கிணங்க, அவனைக் கொல்லாமல் விட்டு, அவனுடைய ஆயிரம் கைகளில் இரண்டை
மட்டும் விட்டுவிட்டு, மற்றவற்றை கத்தரித்தார். ருத்ரதேவர், பாணாசுரனை சமாதானம் செய்தார்.
ஸ்ரீகிருஷ்ணன், அனிருத்தன், உஷாதேவியுடன் தன் இருப்பிடமான த்வாரகைக்குத் திரும்பினார்.
இத்தகைய ஜ்வரனில் எண்ணிக்கையின்படி ஜ்வ=7 ர=2. 72. இதனை வலப்பக்கத்திலிருந்து படித்தால் 27 ரூபங்களில் இருக்கிறார். இதனை ஸ்ருஷ்டித்த ஹரனில் ஹ=8 ர=2. 82. வலப்பக்கத்திலிருந்து படித்தால் 28 ருபங்களில் இருக்கிறார். ஸ்ரீ நரசிம்மன், ஜ்வரஹர என்னும் பெயரில் ஜ்வ=7 ர=2 ஹ=8 ர=2 என 7282. இதை வலப்பக்கத்திலிருந்து படித்தால் 2827 ஆகிறது. இவ்வளவு ரூபங்களால், தன்னை நினைத்த மாத்திரத்திலேயே, சூரியன் பனித்துளிகளை எப்படி நீக்குகிறானோ, அந்த வேகத்தில் தன் பக்தர்களின் துன்பங்களைப் போக்குகிறார்.
No comments:
Post a Comment