மூரு கோடியமேலெ ஷோபி4ப
ஈரதி4க எப்பத்து ஸாவிர
மாருதாந்தர்யாமி மாத4வ ப்ரதிதி3வஸத3ல்லி |
தா ரமிஸுதிஹனெந்து3 திளிதி3ஹ
சூரிக3ளெ தேவதெக3ளவர ஷ
ரீரக3ளெ ஸுக்ஷேத்ர அவரர்ச்சனெயெ ஹரிபூஜெ ||6
மூரு கோடியமேலே = மூன்று கோடிக்கு மேல்
ஈரதிக எப்பத்து சாவிர = 72,000
ஷோபிப = ஒளிர்ந்து கொண்டிருக்கும்
மாருதாந்தர்யாமி = வாயுதேவரின் அந்தர்யாமியாக
இருக்கும்
மாதவ = லட்சுமிபதியான ஸ்ரீபரமாத்மன்
ப்ரதி திவசதல்லி = எப்போதும்
தா = தான்
ரமிஸுதிஹனெந்து = நம் தேகத்தில் மகிழ்ச்சியுடன்
நடமாடிக் கொண்டிருக்கிறான் என்று
திளிதிஹ = அறிந்திருக்கும்
ஸூரிகளெ = ஞானிகளே
தேவதெகளு = தேவதைகள்
அவர சரீரகளே = அவரின் சரீரங்களே
சுக்ஷேத்ர = தீர்த்த க்ஷேத்திரங்கள்
அவரர்ச்சனெயெ = அவரின் பூஜையே
ஹரிபூஜெ = ஹரிபூஜையாகும்.
முந்தைய ஸ்லோகத்தில் கூறியபடி, தேகத்தில் இருக்கும் நாடிகளில் இருக்கும் நதி முதலானவற்றின் அபிமானி
தேவதைகளில் முக்ய பிராணாந்தர்கத பரமாத்மனின் ரூபங்களை சிந்திப்பவர்களை பூலோகத்தில்
தேவதைகளாக நினைக்க வேண்டும் என்று சொல்கிறார். நீர்வீழ்ச்சி முதலானவற்றின் அபிமானி
தேவதைகள் 3 கோடிகளுக்கு மேல் இருக்கிறார்கள். 72,000 நாடிகளில் அனைத்து
நதிகளின் அபிமானி தேவதைகளும் இருக்கிறார்கள். இவை அனைத்திலும், பாரதிரமண முக்யபிராணாந்தர்கதனாக மூன்று கோடி 72,000 ரூபங்களால் மயிர்க்கால்கள், நாடிகள் இவற்றில் பரமாத்மன், மகிழ்ச்சியுடன் நடமாடுகிறான் என்று அறிந்தவர்களை பூலோகத்தில் தேவதைகள் என்றே
அறியவேண்டும். இத்தகைய மகாத்மர்களின் தேகங்களே உத்தம க்ஷேத்திரம். இவர்களின்
பூஜையை செய்தால், தன்னையே பூஜித்ததாக ஸ்ரீஹரி மகிழ்ச்சியடைகிறான்.
ஸ்ரீவர னிக3பி4ஷேக வெந்தரி
தீ வஸுந்த4ரெயொளகெ3 ப3ல்லவ
ராவ ஜலத3லி மிந்த3ரெயு க3ங்கா3தி தீர்த்த2க3ளு |
தா ஒலிது3ப3ந்த3ல்லெ நெலெகொ3
ண்டீவு வகி2லார்த்த2க3ள னரியத3
ஜீவர மரதரங்கி3ணியனைதி3த3ரு ப2லவேனு ||7
ஸ்ரீவரனிகெ = நம் தேகத்தில் தேஹாகாரனாக இருக்கும் ஸ்ரீலட்சுமிபதிக்கு
அபிஷேகவெந்து = நம் தேகத்தை கழுவுவதே (நாம் ஸ்னானம்
செய்வதே) அபிஷேகம் என்று
அரிது = அறிந்து
பல்லவரு = ஞானிகள்
ஈ வஸுந்தரெயொளகெ = இந்த பூமியில்
ஆவ ஜலதலி = கிணறு, ஏரி என எந்த நீரில்
மிந்தரெயு = ஸ்னானம் செய்தாலும்
கங்காதி தீர்த்தகளு = கங்கை தீர்த்தங்கள்
தாவலிது = தான் தரிசனம் அளித்து
பந்து அல்லி நெலெகொண்டு = ஸ்னானம் செய்யும் நீரில்
நிலைத்து
அகிளார்த்தகள = ஸ்னான பலன்களை
ஈவரு = கொடுக்கிறார்
அரியத = இதனை அறியாத
ஜீவரு = மனிதர்கள்
அமரதரங்கிணிய = தேவநதியான கங்கையில்
மைதிதரெ = ஸ்னானம் செய்வதற்காக சென்றால்
பலவேனு? = என்ன பலன் கிடைக்கப் போகிறது?
அனுசந்தானத்துடன் ஸ்னானம் செய்யும் ஞானிகள், எங்கு ஸ்னானம் செய்தாலும் அனைத்து தீர்த்தங்களின் ஸ்னான பலன்களும்
கிடைக்கிறது. அனுசந்தானம் இல்லாத அஞ்ஞானிகள் காசிக்குச் சென்றாலும் அது பலன்களைக்
கொடுக்காது என்று கூறுகிறார். நம் தேகமானது, பரமாத்மனுக்கு ப்ரதிமையைப் போன்றது என்று அறிந்து, நாம் ஸ்னானம் செய்யும்போது, எந்த தண்ணீரில் ஸ்னானம் செய்தாலும்,
கங்கேச யமுனேசைவ கோதாவரி சரஸ்வதி |
நர்மதா ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம்குரு ||
என்னும் மந்திரத்தினாலும், ஸ்னான விதிகளின்படி ஸ்மரணாதிகளை செய்து புருஷ சூக்தத்தை சொல்லியவாறு, தம் தேகத்தில் பரமாத்மனை சிந்தித்து, அபிஷேகம் செய்கிறேன் என்று
நினைத்து,
ஸ்னானம் செய்தால், இவர் நினைத்த கங்கை முதலான அனைத்து தீர்த்தாபிமானிகளும் அங்கு வந்து அந்தந்த
நதிகளில் ஸ்னானம் செய்த பலன்களைக் கொடுத்து தன்யர்களாக செய்கின்றனர். இத்தகைய
ஞானம் இல்லாமல், யாத்திரையை செய்து காசிக்குச் சென்று கங்கையில் குளித்தாலும் கங்கா ஸ்னானம்
செய்த பூர்ண பலன் கிடைக்காது.
நத3 நதி3க3ளிளெயொளகெ3 பரிவுவு
உத3தி4பர்யந்தரதி3 தருவா
யத3லி ரமிஸுவுவல்லி தன்மயவாகி3 தோரத3லெ |
விதி4 நிஷேத3க3ளா சரிஸுவரு
பு3த4ரு ப4கவத்3ரூப ஸர்வ
த்ரத3லி சிந்த1னெ ப3ரலு த்யஜிஸுவரகி2ல கர்மக3ள ||8
இளியொளகெ = பூமண்டலத்தில்
நத நதிகளு = நத என்றால் கிழக்கிலிருந்து மேற்கு
நோக்கிப் பாய்வது; நதி என்றால் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்வது. இத்தகைய நத நதிகள்
உததிபர்யந்தரதி = கடலைச் சேரும் வரை தனித்தனியாக
பரிவுவு = பாய்கின்றன
தருவாயதலி = அந்தக் கடலில் சேர்ந்தபிறகு
தோரதலெ = நதியாகத் தெரியாமல்
தன்மயவாகி = கடல் ரூபமாகவே
அல்லி = அந்தக் கடலில்
ரமிஸுவுவு = பாயாமல் நின்றுவிடுகின்றன; அது போல,
புதரு = ஞானிகள்
விதி நிஷேதகள = செய்யவேண்டிய செயல்களை செய்வது; செய்யக்கூடாதவற்றை செய்யாமல் இருப்பது
ஆசரிசுவரு = இத்தகைய செயல்களை செய்வார்கள்
(பகவத் ரூபங்களை எப்போதும்
சிந்தித்திருப்பார்கள் என்று அர்த்தம்)
பகவத்ரூப = பரமாத்மனின் ரூபம்
சர்வத்ரதலி = எல்லா இடங்களிலும்
சிந்தனெ பரலு = சிந்திக்க
அகிளகர்மகள = அனைத்து காம்ய கர்மங்களையும்
த்யஜிஸுவரு = விட்டுவிடுவர்
வியாப்தோபாசகர்கள், எந்தவொரு பலன்களையும் எதிர்பார்த்து விதிபூர்வகமான கர்மங்களை செய்வதில்லை
என்று சொல்கிறார்.
மிகப்பெரிய நதகள், நதிகள் அனைத்தும் கடலில் போய்ச் சேரும் வரைக்கும், பாய்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றன. அந்தக் கடலில் போய் சேர்ந்தபின், அதில் தனியான நதியாக தெரியாமல், கடலிலேயே அடங்கிவிடுவதைப் போல, அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்கும் பகவத் ரூபத்தின் சிந்தனை தமது
அனுஷ்டானத்திற்கு வரும்வரைக்கும் ஞானிகள், தங்களின் கர்ம ஆசரணையை செய்வார்கள். அப்படியான அனுஷ்டானம் வந்தபிறகு, விதிபூர்வகமான கர்மங்களைப் பின்பற்றுவதையும் விட்டுவிடுவர். இங்கு அந்த
கர்மங்களை ஒரேயடியாக விட்டுவிடுவர் என்று அர்த்தமல்ல.
விதிகளுக்கு உட்படாத தேவதைகளும்கூட விதிபூர்வமான
கர்மங்களை செய்து கொண்டிருப்பதாக பாகவத 3ம் ஸ்கந்தத்தில் - தேவானாம்
குணலிங்கானாம் அனுஸ்ராவிக கர்மிணாம் - என்று சொல்லியிருப்பதற்கு பாகவத
தாத்பர்யத்தில் ‘அனுஸ்ராவிக கர்மாஸௌஸ்ருத்யுக்தம் யோனலங்கயேத்’ - வேதோக்த கர்மங்களை செய்பவரே அனுஸ்ராவிக கர்மி என்று சொல்கிறார்.
மேலும் ‘நஸுராம்பிபேத்’ - சுராபானம் குடிக்கக்கூடாது என்று சொல்வது தடை செய்யப்பட்ட செயல்களாகும்.
‘அஹரஹ: ஸந்த்யாமுபாஸீத’ - தினமும் சந்தியாவந்தனம் செய்யவேண்டும், என்று சொல்வது, விதி வாக்கியமாகும்.
இந்த இரண்டையும் சரியாக பின்பற்ற வேண்டும்.
கீதா தாத்பர்ய வாக்கியங்களிலிருந்து இதைப்பற்றி தெரியவேண்டிய
விஷயங்கள் என்னவெனில்: சமாதி நிலையில் இருந்துகொண்டு, பகவத் தியானங்களை செய்து வரும்போது, அவசியமான கர்மங்களை விட்டால் அதில்
தவறில்லை. பகவந்தனை ஸ்தோத்திரம் செய்தவாறு, பதங்களைப் பாடியவாறு, மெய்மறந்து நர்த்தனங்களை செய்து
வரும்போது, சந்தியாதிகளை விட்டாலும் அதில் பிரச்னையில்லை. ஏனெனில், இவையும் ஒரு விதிக்கு உட்பட்ட கர்மங்களே. அவை முடிந்தபின், அந்த விடுபட்ட நித்யகர்மானுஷ்டங்களை செய்யலாம்.
சாதுக்கள், சன்யாசிகள்கூட தங்களின் கர்மங்களை
செய்து கொண்டிருப்பதாக ஸ்ரீமதாசார்யரின் வாக்கியம் இருக்கிறது. ஆகையால் ‘தியஜிசுவரு - விட்டுவிடுவர்’ என்று சொல்வதின் அர்த்தம்
என்னவெனில், ‘ஸ்வர்க்ககாமோயஜீத’ - ஸ்வர்க்கத்தில் விருப்பம் உள்ளவர்கள் யாகங்களை செய்யவேண்டும் என்று
சொல்லக்கூடிய பலன்களைக் காட்டும் விதிகளை விட்டுவிடுவர். அதாவது, பகவத் ப்ரீதிக்காக நித்யகர்மங்களை அனுஷ்டானம் செய்து, பரமாத்மனுக்கு அருகில் செல்வர். அதன் பலன்களை வேண்ட மாட்டார்கள். கர்மத்யாக
என்றால் கர்மங்களை தியாகம் செய்வது அல்ல; கர்மங்களின் பலன்களை தியாகம்
செய்வது என்று கீதையில் ஸ்பஷ்டமாக சொல்லியிருக்கார்கள்.
ஆகையால், அகிளகர்மங்களை தியஜிஸுவரு என்றால், அனைத்து காம்ய கர்மங்களை (பலன்களை விரும்பி செய்யப்படும் அனைத்து கர்மங்களும்)
விட்டு,
நிஷ்காமகராகி கர்மங்களை செய்வார்கள் என்பது கருத்து.
கலியெ மொத3லாத3கி2ல தா3னவ
ரொளகெ3 பி3ரம்மப4வாதி3 தே3வ
ர்க3ளு நியாமகராகி3 ஹரியாக்3ஞெயலி அவரவர |
கலுஷகர்மவ மாடி3 மாடி3ஸி
ஜலருஹேக்ஷண க3ர்ப்பிஸுத நி
ஸ்சல ஸுப4க்தி ஞானபூர்ணரு ஸுகி2பரவரொளகெ3 ||9
கலியெ மொதலாத = கலியில் துவங்கி
அகில தானவரொளகெ = அனைத்து தைத்யர்களிலும்
பிரம்ம பவாதி = பிரம்ம, ருத்ர முதலான
தேவர்களு = தத்வாபிமானி தேவதைகள்
நியாமகராகி = ப்ரேரகர்களாகி (வழி நடத்துபவர்களாக)
ஹரிய ஆக்ஞெயலி = ஸ்ரீஹரியின் ஆணைப்படி
அவரவர = அவரவர்களின் (தகுதிக்கேற்ப)
கலுஷ கர்மவ = பாவ கர்மங்களை
மாடி மாடிஸி = அவர்கள் உள்ளே இருந்து தாம் செய்து, அவர்களால் செய்வித்து
ஜலருஹேக்ஷண = தாமரைக் கண்ணனான ஸ்ரீபரமாத்மனுக்கு
அர்ப்பிஸுத = சமர்ப்பணம் செய்து
நிஸ்சல = திடமான
சுபக்தி = தூய்மையான பக்தி
ஞானபூர்ணரு = தெளிவான ஞான பக்தாதிகளைக் கொண்ட இந்த
பிரம்மாதிகள்
அவரொளகெ = அந்த கலி முதலானவர்களில்
சுகிபரு = சுகமாக இருப்பார்கள்
கலி முதலான தமோ யோக்யர்களில் பிரம்மாதிகள் இருந்து, பாவ கர்மங்களை செய்வித்து, அவற்றை ஸ்ரீஹரிக்கு
சமர்ப்பித்தவாறு, தாம் நிர்லிப்தர்களாக (அவற்றிற்கு சம்பந்தப்படாமல்) இருக்கிறார்கள் என்கிறார்.
கலி முதலான அனைத்து தைத்யர்களிலும், பிரம்ம, ருத்ர முதலான தேவதைகள் இருந்து, அவரவர்களின் யோக்யதைக்கேற்ப பகவத்
த்வேஷாதி பாப கர்மங்களை, பகவந்தனின் ஆணைப்படி தாம் செய்து, அவர்களிடமிருந்து செய்வித்து, அவற்றை பரமாத்மனுக்கு
சமர்ப்பிக்கின்றனர். தம்முடைய திடமான ஞான, பக்திகளால் அவர்களில் சுகமாக இருப்பார்கள்.
ஆவ ஜீவரொளித்த3ரேனி
ன்னாவ க1ர்மவ மாட3லேனி
ந்னாவ கு3ண ரூபக3ளுபாஸனெ மாட3லேனவரு |
காவனய்யன பரமஸத்கரு
ணாவலோகன ப3லதி சலிஸுவ
தேவதெக3ளனு முட்டலாப1வெ பாபகர்மக3ளு ||10
அவரு = மேற்சொன்ன பத்யத்தில் சொல்லப்பட்ட, மஹாபகவத் பக்தரான பிரம்மாதி தேவதைகள்,
ஆவ ஜீவரொளித்தரேனு = எந்த ஜீவர்களில் இருந்தால் என்ன?
யாவ கர்மவ மாடலேனு = இன்னும் எந்த கர்மங்களை செய்தால்
என்ன?
ஆவ குண ரூபகள = எந்த குணங்களைக் கொண்ட எந்த தேவதையை
உபாசனெ மாடலேனவரு = உபாசனை செய்தால் என்ன?
காவனய்யன = மன்மதனின் தந்தையான ஸ்ரீபரமாத்மனின்
பரம சத்கருணாவலோகன பலதி = மிகச்சிறந்த கருணா கடாக்ஷத்தினால்
சஞ்சரிசுவ = பயணம் செய்யும்
தேவதெகளனு = தேவதைகளை
பாபகர்மகளு = பாவ கர்மங்கள்
முட்டலாபவெ = சம்பந்தம் செய்யுமா?
பிரம்மாதிகள் கலி முதலான தைத்யர்களில் இருந்து, பாவ கர்மங்களை செய்வதால், அவர்களுக்கு பாவ கர்மங்களின்
சம்பந்தம் இல்லை என்கிறார். ‘தேவானாம் புண்யபாபாப்யாம்
ஸுகமேவோத்தரோத்தரம்’ என்னும் பாகவத 11 ஸ்கந்த தாத்பர்யத்தின்படி தேவதைகள் புண்ணியமோ பாவமோ எது செய்தாலும், அவர்களுக்கு சுகமே கிடைக்கிறதே தவிர, துக்கம் இல்லை என்று
சொல்லியிருப்பதால், பிரம்மாதி தேவதைகள் கலி முதலான எந்த தைத்யர்களில் இருந்தால் என்ன? அவர்களில் இருந்துகொண்டு, எந்த தாமஸ ராஜஸாதி க்ஷ்த்ர
தேவதோபாஸனையை செய்தால் என்ன?,
No comments:
Post a Comment