ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Sunday, June 14, 2020

#12 - மாத்ருகா சந்தி

நெலெஸிஹரு தி3க்தே3வதெக3ளி

க்கெ1லதி கர்ணங்க3ளலி தீர்த்த

ங்க3ளிகெ3 மானிக3ளாத3 சுரநதிமுக்2ய நிர்ஜரரு

3லத3 கிவியலி இருதிஹரு பா3

ம்பொ3ளெய ஜனக1 த்ரிவிக்ரமனு நி

ர்மலினரனு மாடு3வனு ஈபரி சிந்திஸுவ ஜனர ||12

 

திக்தேவதெகளு = திக்தேவதைகள்

இங்கெலதி = இந்த தேகத்தில்

கர்ணங்களலி = காதுகளில்

நெலஸிஹரு = அபிமானிகளாக வசிக்கின்றனர்

தீர்த்தங்களளிகெ = கங்கை முதலான தீர்த்தங்களுக்கு

மானிகளாத = அபிமானிகளான

ஸுரநதி முக்ய = தேவ கங்கையே முதலான

நிர்ஜரரு = தேவதைகள்

பலத கிவியல்லிருதிஹரு = பிராமணர்களின் வலது காதுகளில் இருக்கிறார்கள்

பாம்பொளெய = கங்கை

ஜனக = தந்தையான த்ரிவிக்ரமன்

ஈ பரி = இந்த விதமாக சிந்திக்கும்

ஜனர = மக்களை

நிர்மலரனு = சுத்தமானவர்களாக ஆக்குகிறார்.

 

காதுகளில் சிந்திக்க வேண்டிய தேவதைகளைப் பற்றி இந்த பத்யத்தில் விளக்குகிறார். காதுகளில் திக்தேவதைகள் அபிமானி தேவதைகளாக வசிக்கின்றனர்.

 

புஷ்கராத்யானி தீர்த்தானி கங்காத்யா:ஸரிதஸ்ஸதா |

விப்ரஸ்ய தக்‌ஷிணே கர்ணே ஸந்தீதி மனுரப்ரவீத் ||

 

என்னும் மனு வாக்கியத்தினால், புஷ்கர முதலான அனைத்து தீர்த்த அபிமானிகளும், கங்கா முதலான புண்ய நதிகளின் அபிமானி தேவதைகள் அனைவரும் பிராமணர்களின் வலது காதுகளில் வசிக்கின்றனர் என்று நிர்ணயித்திருக்கின்றனர். ஆகையாலேயே, பிராமணர்கள், ஆசமனம் செய்ய வேண்டிய சந்தர்ப்பத்தில், தண்ணீர் கிடைக்கவில்லையெனில், ‘ஸ்வகர்ண ஸ்பர்ஷனாச்யுதி:என்னும் தர்ம சாஸ்திர வாக்கியத்தின்படி, தன் காதைத் தொட்டாலே ஆசமனம் செய்வதைப்போல பவித்ரன் ஆகிறான் என்றிருக்கிறார்கள். இந்த அபிப்பிராயத்தையே தாசராயர் இங்கு சொல்லியிருக்கிறார். இந்தவிதமாக வலது காதில் அனைத்து தீர்த்தாபிமானிகளும் இருக்கிறார்கள் என்று நினைத்து எந்த பிராமணர் காதைத் தொடுகிறாரோ அவரை, கங்கையைப் பெற்ற த்ரிவிக்ரமன், சுத்தமாக (பவித்ரமாக) ஆக்குகிறான்.


No comments:

Post a Comment