ஈபரிய தேஹதொ3ளு ப4க3வ
த்ரூபக3ள மரெயதெலெ மனதி3 ப
தே3 பதே3 ப4கு3தி1யலி ஸ்மரிஸுதலிப்ப ப4குதரனு
|
கோ3பதி ஜகன்னாதவிட்டல ச
மீபக3னு தானாகி3 ஸந்தத
தா பரோக்ஷவ நீடி3 பொரெவனு எல்லகாலத3லி ||31
ஈபரிய தேஹதொளு = மேற்சொன்ன பற்பல பகவத்ரூபங்களுடன்
கூடிய இந்த சரீரத்தில்
பகவத்ரூபகள = பகவத் ரூபங்களை
மரெயதெலெ = மறக்காமல்
பதேபதே = எப்போதும், திரும்பத்திரும்ப
மனதி = மனதில்
பகுதியலி = பக்தியுடன்
ஸ்மரிசுதலிப்ப = நினைத்துக் கொண்டிருக்கும்
பகுதரனு = பக்தர்களை
கோபதி = லோகேஷனான (கோ என்றால் பூமி. பூமியை
காப்பாற்றுவன் ஆகையால், பரமாத்மனுக்கு கோபதி என்று பெயர்.
அல்லது கோ என்றால் வேதாத்மிகரான துர்கைக்குப் பெயர். அவரது பதியாகையால், கோபதி)
ஜகன்னாதவிட்டல = பிம்பரூபியான ஜகன்னாதவிட்டலன்
சமீபகனு தானாகி = தான் அவர்களின் அருகிலேயே இருந்து
சந்தத = எப்போதும்
தாபரோக்ஷவ நீடி = அபரோக்ஷ உள்ளவர்களாக செய்து
(அபரோக்ஷத்தில் தான் காட்சியளித்து)
எல்ல காலதலி = எப்போதும்
பொரெவ = காப்பாற்றுகிறான்
சந்தியை முடித்தவாறு, தாசராயர், தியானம் செய்பவர்களுக்கு கிடைக்கும் பலன்களை சொல்கிறார்.
இதைப்போல, இந்த சந்தியில் சொல்லியவாறு, இருக்கும் பகவத்ரூபங்களை அறிந்து, ஒருகணமும் விடாமல், திடமான பக்தியுடன், நினைத்துக் கொண்டிருக்கும்
பக்தர்களுக்கு, ஸ்ரீஜகன்னாதவிட்டல அங்கித லோகேஷன், இவர்களின் இதயத்தில் நின்று, அபரோக்ஷத்தில் தரிசனம் கொடுத்து எப்போதும் காப்பாற்றுவான்.
ஜீவப்ரகரண சந்தி என்னும் 9ம் சந்தி இங்கு நிறைவுற்றது.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
No comments:
Post a Comment