இந்தனந்தானந்த கு3ணக3ள
ப்1ராந்த1கா1ணதெ3 மஹலகுமி ப4க3
வந்த கா3ப4ரணாயுதா4ம்ப3ர ஆலயக3ளாகி3 |
ஸ்வாந்தத3லி நெலெகொ3ளிஸி பரம து3
ரந்த மஹிமன தௌ3த்யகர்ம நி
ரந்தரதி3 மாடு3த1லி தத3தீ3னத்வ வைதி3ஹளு ||31
இந்து = இத்தகைய
அனந்தானந்த குணகள = அனந்தானந்த குணங்களின்
ப்ராந்தகாணதெ = முடிவைக் காணமுடியாமல்
மஹாலகுமி = மகாலட்சுமி
பகவந்தகெ = பரமாத்மனுக்கு
ஆபரண = கௌஸ்துபாபரண ரூபியாக இருக்கிறார்
ஆயுத = தனுஸ் முதலான ஆயுத ரூபியாக இருக்கிறார்
அம்பர = வஸ்த்ர ரூபியாக இருக்கிறார்
ஆலமகளாகி = வீடாகவும் இருக்கிறார்
ஸ்வாந்ததலி = தன் அந்தரங்கத்தில் (மனதில்)
நெலெகொளிஸி = (திடமாக பகவத்ரூபத்தை) நிலைத்திருந்து
பரம துரந்த மஹிமன = மிகச்சிறந்த மற்றும் எல்லையற்ற
மகிமைகளைக் கொண்ட பரமாத்மனின்
தௌத்யகர்ம = தாச கர்மங்களை
நிரந்தரதி = தொடர்ந்து (இடைவிடாமல்)
மாடுதலி = செய்துகொண்டு
தததீனத்வ = பரமாத்மனின் அதினமாக
யைதிஹளு = இருக்கிறாள்.
முந்தைய பத்யத்தில், பிரம்மாதிகளும் அறியாத பகவத் மகிமைகளை ரமாதேவியர் அறிவார் என்று சொல்வதால், அத்தகைய மகிமைகளை அவர் முழுமையாக அறிவாரோ என்று எழும் சந்தேகத்தை இங்கு
போக்குகிறார்.
பிரம்மாதிகளைவிட அதிகமாக பகவத் மகிமைகளை ரமாதேவியர்
அறிந்திருந்தாலும், பரமாத்மனின் அனந்தானந்த குணங்களின் எல்லைகளைக் காணாமல், பகவத் ரூபங்களை தன் மனதில் நிலைநிறுத்தி, அந்த குணங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அவற்றை முழுமையாக
அறியார். அத்தகைய பகவந்தனின் சேவையை செய்வதற்கு, தம் ஒரே ரூபத்தினாலும், ஸ்ரீ, பூ,
துர்கா என்னும் மூன்று ரூபங்களாலும், சேவை செய்துவந்தாலும், அதில் திருப்தி அடையாமல், வஸ்திரம், ஆபரணம், சத்ர,
சாமரம் ஆகிய ரூபங்களை தரித்து, அவற்றின் மூலமாக சேவை செய்து, பரமாத்மனை புகழ்ந்திருக்கிறார். மேலும் தமக்கு அனேக தாசியர்கள் இருந்தாலும், பகவந்தனின் சேவாதிகளை தாமே செய்கிறார். பாகவத 3ம் ஸ்கந்தம், 19ம் அத்தியாயம், 21ம் ஸ்லோகம் :
ஸ்ரீரூபிணீ க்வணயதீ சரணாரவிந்தம் நீலாம்புஜேன
ஹரிஸத்மனி முக்த தோஷா |
ஸம்லக்ஷ்யதே ஸ்படிக குட்ய உபேதஹேம்னி ஸம்மார்ஜதீய
தனுக்ரஹணேன்ய யாத்னா: ||
விஜயத்வஜீய வியாக்யானம்:
அனேஷா முபாஸகானாம் அஸ்மாதாதீனாம் உபாசனாதி ப்ரயத்னா
யஸ்யானுக்ரஹணேs னுக்ரஹார்த்தம் ஸ்யு: |
இதரரான நம்மைப் போன்றவர்கள், லட்சுமிதேவியரின் மகிமைகளைப் பெறுவதற்காக, அவரை பூஜிக்கிறோமோ, அத்தகைய பிறப்பு இறப்பு போன்ற
சுழற்சிகள் இல்லாதவரான லட்சுமிதேவி, தம் திவ்ய ரூபத்தினால் பரமாத்மனின்
அந்தப்புரத்தில், அவன் சரணாரவிந்தங்களில் அலங்கரித்துக் கொண்டிருக்கும், சலங்கையின் சப்தத்தை உருவாக்கியவாறு. நீலவர்ணனான, தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, பெருக்கும் துடைப்பத்தைக் கையில்
ஏந்தி குப்பையைக் கூட்டிக்கொண்டு, தங்க மயமான, ஸ்படிக மணிகளால் அலங்கரிக்கப்பட்ட சுவரில் தன்னை பிரதிபிம்பராக
காட்டிக்கொள்கிறார் என்று சொல்கிறார்.
இதுமட்டுமல்லாமல், புரந்தரதாசர் இயற்றிய ‘ஏனு தன்யளோ லகுமி எந்தா மான்யளோ’ என்னும் பத்யத்தில், ‘சத்ர சாமர வ்யஜன பர்யங்க
பாத்ரரூபதல்லி நிந்து, சித்ர சரிதனாத ஹரிய நித்ய சேவே மாடுதிஹளு’ என்கிறார். இதே விஷயத்தையே தாசராயர் சொல்கிறார் -- ‘தினந்தோறும் தூத கர்மத்தை செய்து வருகிறார்’ - என்கிறார். ஒரு வேலைக்காக ஒருவர் மூலமாக இன்னொருவரிடம் செல்வதற்கே தூது என்ற
பெயர் இருக்கிறது. சீதைக்கு மோதிரத்தைக் கொடுத்து அவரிடமிருந்து சூடாமணியைக்
கொண்டுவர ராமதேவர் ஹனுமந்ததேவரை அனுப்பியதாலேயே, அல்லது ராவணனிடம் அனுப்பியதாலேயே, ஹனுமந்ததேவருக்கு ‘ஸ்ரீராமதூத’ என்று பெயர் வந்தது. ஸ்ரீகிருஷ்ணன் பாண்டவர்களுக்கு ராஜ்யத்தைக் கொடுப்பதற்காக, குருபாண்டவர்களின் சமாதானத்திற்காக தூதனாக சென்றான். அப்படியே, லட்சுமிதேவியரும் தூதராக இருந்தாரா? தூதராக செயல்பட்டார் என்று
தாசராயர் எப்படி சொல்கிறார் என்றால்:
தாச தாசியர்களுக்கு தௌத்ய (தூத) கர்மம் சகஜமானதே
ஆகும். தூதுக்கு மட்டும் தாச தாசியர்களே இருக்க வேண்டும் என்னும் விதி ஒன்றும்
இல்லை. தாசர்களாக இல்லையென்றாலும்கூட தாஸ்யத்தை செய்யலாம். ராஜசூய யாகத்தில்
தர்மராஜனுக்கு நாரதர் தூதராகச் சென்றார். பாண்டவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணன் தூதனாகச்
சென்றான். த்ருபதராஜனின் புரோகிதர் தூதராக த்ருதராஷ்டிர ராஜனிடம் வந்தார். இவர்கள்
அனைவரும் தூத கர்மத்தை செய்திருந்தாலும், தாசர் ஆகவில்லை. தாசதாசியருக்கு
மட்டும்,
மேற்சொன்ன தூதகாரியம் சகஜமாக இருந்தே இருக்கிறது.
பாண்டவர்களும் குரு வம்சத்திலேயே பிறந்ததால், அவர்களுக்கும் ‘கௌரவ’
என்னும் சொல் பொருந்தியது. ஆனால், அவர்களின் மகிமையால், கௌவர்களை தனியே பிரித்து, பாண்டுராஜனின் மக்களான பாண்டவர்களை
அவர்களிடமிருந்து பிரித்தனர். கௌரவ என்னும் சொல் மட்டும் பாண்டவர்களுக்கும்
பொருந்துமே தவிர, பாண்டவர் என்னும் சொல், கௌவர்களுக்கு எப்படி சேராதோ, அதைப்போலவே தாசியர்களை தூதி என்று சொல்லலாமே தவிர, தூதியர் அனைவரும் தாசியர் அல்ல என்று சொல்லவேண்டும்.
ஆனால், ரமாதேவியரை, பரமாத்மனுக்கு தாசியர் என்றே சொல்ல வேண்டியதாயிற்று. தௌத்ய கர்மம் செய்து வந்ததாலேயே இப்படி சொன்னார்கள் என்றால், சாதாரணமாக சம்பளத்திற்கு வேலை பார்க்கும் தாசியர், அதைத்தவிர சில வெளி வேலைகளையும் செய்வார்களே தவிர, அந்தரங்க வேலைகளான தௌத்யாதி கர்மங்களை அவர்களிடம் செய்விக்க சாத்தியம் இல்லை. ஆகையாலேயே, அரசகுமாரிகள், தம்மிடம் சரியான தாசியர்கள் இல்லையெனில், தம் உறவினர்களையே தௌத்ய விஷயங்களில் அனுப்பும் வழக்கம் உண்டு. ஆகையால், அந்தரங்க விஷயத்திற்கு ஏற்றவர் மட்டுமே தௌத்ய கர்மத்திற்கு தகுதியானவர். ஆகையால், ரமாதேவியர் பரமாத்மனின் அந்தரங்க தாசியராக இருந்தார் என்பதை காட்டுவதற்காக ‘தௌத்யகர்ம’ என்று சொன்னார் என்று அறியவேண்டும். இப்படி, பகவந்தனின் அதீனராகி பகவத் அருளினாலேயே பகவன் மகிமைகளை பிரம்மாதிகளைவிட அதிகமாக தம் தகுதிக்கேற்ப அறிந்திருக்கிறார் என்று பொருள்
No comments:
Post a Comment